திருவல்லிக்கேணியில் உள்ள அருள்மிகு திருவெட்டீஸ்வரர் திருக்கோயிலில் கிறிஸ்தவ திருமணம் நடைபெறுவதாக அச்சிடப்பட்ட அழைப்பிதழ் ஒன்று கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இது ஹிந்துக்களுக்கு கடும் கோபத்தை எழுப்பியது. சமூக ஊடகங்களில் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஹிந்து கோயில்களில் மாற்று மதத்தவர்களின் திருமணத்தை அனுமதிப்பது சட்டவிரோதமானது. இந்த சூழலில், இந்து முன்னணி அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோயிலின் செயல் அலுவலரிடம் இது குறித்து புகார் அளித்தனர். இதனையடுத்து திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரன் கோயிலில் நடக்க இருந்த கிறிஸ்தவ திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.