கொந்தளிக்கும் தமிழக ஹிந்துக்கள்

சென்ற வாரம் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் வீதிக்கு வந்து வங்க தேச ஹிந்துக்கள் பாதுகாப்பு குழுசார்பில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் சத்தியம் ஆவேசம் பொங்க பங்கேற்றார்கள். வங்க தேச ஹிந்துக்கள் சந்திக்கும் கொடுமைகளின் பின்னணியை அலசுகிறது இந்த அட்டைப்படக் கட்டுரை

வங்க தேசத்தின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்களுக்கு இடஒதுக்கீடு தருவது சம்பந்தமாக நடைபெற்ற வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை காரணமாக கொண்டு அங்கு வன்முறை தூண்டப்பட்டது. இதன் பின்னணியில் சீனா, அமெரிக்கா கைகள் இருப்பதாக பேசப்பட்டது. முதலில் வங்க தேச அரசுக்கு எதிராக ஆரம்பித்த கலவரம் பின்னர் அங்குள்ள சிறுபாண்மை ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையாக வெடித்தது. அதன் அடுத்த நிலை பாரததத்திற்கு எதிராக திருப்ப முயற்சி நடந்தது. அதன் காரணமாக பாரதம் தந்த ஆம்புலன்ஸ் முதற்கொண்டு எல்லாவற்றையும்  அடித்து நொறுக்கினர். வங்கதேச அரசு பணியில் இருக்கும் ஹிந்துக்களை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்தனர். பொதுவீதியில் ஹிந்து பெண்கள் மிரட்டி மானபங்கம் செய்யப்பட்டனர். ஹரே கிருஷ்ணா கோயிலை, பகவத் கீதையை தீக்கிரை ஆக்கினர். அங்கு இருந்த கோசாலை பசுக்களை அடித்து கொன்றனர். அனைத்தையும் ஊடகத்தில் வீடியோ காட்சிகள் காட்டின.இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக காவல்துறையில் அனுமதி கேட்ட போது அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் உத்தரவின்படி ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வங்க தேசத்தில் ஹிந்துக்கள் தங்களுக்கு இழைத்த அநீதியை எதிர்த்து போராடினர். அதனை ஒடுக்க வங்க தேச அரசு ஹரே கிருஷ்ணா அமைப்பின் துறவிகளை கைது செய்தது. அந்த துறவிக்கு ஜாமீன் கிடைக்க நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த இளம் வக்கீல் மிரட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். மீண்டும் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையை இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் தொடர்ந்தன.இந்நிலையில் உலகம் முழுவதும் பங்களாதேஷ் ஹிந்துக்கள் பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு அடக்குமுறையை கையாண்டது. கடந்த டிசம்பர் ௪ம் தேதி தமிழகம் முழுவதும் வங்க தேச ஹிந்துக்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்து ஒருநாள் காவலில் வைத்து வழக்கு பதிவு செய்துள்ளது.பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கும் தமிழக அரசு, நமது தொப்புள் கொடி உறவான வங்க தேச ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து அழக்கூட அனுமதிக்கவில்லை. உலகம் முழுவதும், பாரதம் முழுவதும் வங்க தேச ஹிந்துக்கள் பாதுகாப்பை வலியுறுத்தி குரல் கொடுக்கும்போது தமிழகத்தில் ஹிந்துக்களின் உரிமைகளை நசுக்குகிறது ஆளும் திமுக என்பது கொடூரம்.இலங்கை உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான ஹிந்துக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது திமுக அமைதி நாடகம் நடத்தி போரை நிறுத்தியதாக கூறியதை மறக்க முடியுமா?
அதேபோல் வங்க தேச ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டிக்கக்கூட அனுமதி மறுத்து ஜனநாயக குரல்வளையை நசுக்குகிறது. அதேபோல பாஜக தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் வங்கதேச ஹிந்துக்களுக்கு நடக்கும் அட்டூழியம் குறித்து வாயே திறக்கவில்லை. தற்போது இதே கேள்வியை மாயாவதி எழுப்பி உள்ளார். வங்கதேச ஹிந்துக்களுக்கு நியாயம் வழங்க, அவர்களை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் வாழும் ஹிந்துக்களின் குரல் ஒலிக்கிறது. வங்கதேச சுதந்திரத்திற்காக நடந்த போரில் சுமார் 3,000 பாரத ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
பாகிஸ்தான் பிடியில் சீரழிந்த வங்கதேசம் சுதந்திர நாடாக பாரதம் செய்த தியாகங்களும் மற்றும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு செய்த உதவிகளும் மதமென வரும்போது நன்றி மறப்பது பச்சை துரோகம்.
மத்திய அரசு இதில் விரைவான நடவடிக்கை எடுத்து வங்கதேச ஹிந்துக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.

கட்டுரையாளர் :

மூத்த பத்திரிகையாளர்