கெலாட் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்

ஹரியானாவின் லோஹாருவில் சமீபத்தில் எரிந்த ஒரு வாகனத்தில் எரிந்த நிலையில் எலும்புக்கூடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் கூறியுள்ளார். மேலும், இந்த தீ விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது யாரேனும் செய்த சதியா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அந்த கார் ராஜஸ்தானுக்கு சொந்தமானது ஆனால் எலும்புக்கூடுகளின் அடையாளம் விசாரணைக்கு உட்பட்டது. இந்த வழக்கை நேர்மையாக விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இது எங்களின் தெளிவான கருத்து. ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் இரண்டு பசு கடத்தல்காரர்கள் காணவில்லை என்றும், அவர்கள் மீது ஏற்கனவே பல பசுக் கடத்தல் வழக்குகள் நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. இவ்வழக்கில், பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த சில முக்கிய நபர்களின் பெயர்கள் குறித்து இந்த கடத்தல்காரரின் சகோதரர் சந்தேகம் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணைகள் ஏதுமின்றி, கடத்தல்காரரின் சகோதரர் சந்தேகம் தெரிவித்த நபர்கள் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று ராஜஸ்தான் காவல்துறை கருதியதாக தெரிகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் பஜ்ரங் தளத்தின் பெயர் தேவையில்லாமல் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ராஜஸ்தான் அரசின் பங்கு எப்போதும் வாக்கு வங்கி அரசியலாகவே பாதிக்கப்படுகிறது; இது முன்னரும் பல வழக்குகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது அவர்களது அரசியல் நிகழ்ச்சி நிரல். இந்த விவகாரத்தில் பஜ்ரங் தள் பெயரை தேவையில்லாமல் இழுப்பதை எந்த விதத்திலும் நியாயமாக கருத முடியாது. அங்குள்ள சமூகம் கூட, அரசியல் சார்பு காரணமாக ராஜஸ்தான் அரசிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும். விசாரணை முடியும் வரை, பசுக் கடத்தல்காரரின் சகோதரரால் சிலரது பெயர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் மட்டுமே யாரையும் கைது செய்யக்கூடாது. விசாரணை முடிந்ததும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பஜ்ரங் தள அமைப்பின் பெயரை தேவையில்லாமல் எழுப்பியுள்ள ராஜஸ்தான் அரசு, இந்த பொய்யான குற்றச்சாட்டிற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வி.ஹெச்.பி கோருகிறது” என தெரிவித்துள்ளார்.