குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா

காலை நேரம் திடீரென ஜல், ஜல்  சலங்கையொலி கவனத்தை ஈர்த்தது  பார்த்தால் அழகிய வேடம் தரித்த அம்மன் உருவம் ஓன்று தெருவில்  நடந்து சென்று கொண்டிருந்தது .  சென்று பார்க்கலாம் என வீட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் இறங்கினால் தற்போது எதிர்   திசையில்  இருந்தும் அதே சப்தம்   என்னடா என்று திரும்பிப்பார்த்தேன் பகீர் என்றிருந்தது  .கரடியொன்று தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தது .அவ்வளவுதான் ஒரேபாச்சலில் வீட்டுக்குள் ஓடி கதவை தாழிட்டு ஜன்னல் வழியே என்னநடக்குது என்றுஎட்டி  பார்த்தபோது  மீண்டும் ஒரு சப்தம் வெளியே எட்டி பார்த்தால் சாக்குப்பை உடையணிந்து குரங்குபோல முகமூடி அணிந்த    ஓன்று வந்தது . என்னாச்சு இன்னிக்கு நம்ம ஊருக்கு காட்டில் உள்ள மிருகங்கள் வானுலகத்து கடவுள்கள்  எல்லாம் வந்துட்டாங்களா  நெனச்சுக்கிட்டு பயத்துடனே வெளியே எட்டி பார்த்தபோது அந்த கரடி ஜல் ஜல் என ஒலியெழுப்பியபடி  பக்கத்துக்கு வீட்டின்முன்னே   நின்றுகொண்டிருந்தது. அந்த வீட்டின் அம்மா வெளியே வந்து நீட்டிய தட்டில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டுவிட்டு கரடிவழங்கிய திருநீறை நெற்றியில்  பூசி விட்டு  கையெடுத்து கும்பிட்டு உள்ளே   சென்றாள் .

வெளியே சென்றிருந்த  அம்மா அப்போதுதான் வீட்டிற்க்கு வந்தால் வந்ததும் வராததுமாய்  என்னாச்சம்மா  நம்ம ஊருக்கு கரடி குரங்கு  கடவுள் எல்லாம் வந்திருக்காங்க எனக்கு பயமா இருக்கு என்ற பொது அம்மா சொன்னால் அதெல்லாம் கரடி குரங்கு அம்மன் இல்லை அவர்கள் நம்மள மாதிரி மனிசங்க தான் குலசை முத்தாரம்மனுக்கு காப்புக்கட்டி விரதமிருக்காங்க அவங்கதான் நேர்ந்துகொண்ட வேஷத்தை போட்டுக்கொண்டு தர்மம் (காணிக்கை ) எடுத்து கோயிலில் கொண்டு சேர்ப்பார்கள்என்றாள் அம்மா  . அப்படின்னா நம்ம  கோயில்ல மேல சத்தம் கேட்குதே அது எதுக்கு என்றபோது அது தசரா செட்டு ஊர்ல உள்ள எல்லோரும் சேர்ந்து மொத்தமா ஒரு குழு அமைச்சு மேளதாளத்தோடு காளிவேஷம் ராஜா ராணி வேசம் சாமிவேசமெல்லாம் போட்டுக்கிட்டு ஆடிப்பாடி காணிக்கை சேப்பார்கள் . ஒவ்வொரு ஊரிலும் முதலில் அங்குள்ள கோயில்களுக்கு சென்று பூஜைசெய்து வழிபட்டு உள்ளூர் சாமிகளின் அனுமதியோடு வீடுவீடாக சென்று காணிக்கை சேகரிப்பார்கள்  என்றால் அம்மா . அப்படின்னா அங்க  போலீஸ் பைதியக்காரனெல்லாம் இருக்கானேம்மா  என்றபோது அப்படியெல்லாம் சொல்ல கூடாது அவங்களும் விரதம் இருக்கும் பக்தர்கள்தான் , அவங்க நேர்த்திக்கடன் அப்படி அந்தந்த வேஷத்தை அவங்க போடிருக்காங்க அவங்க எல்லாம் நம்மள மாதிரி மனிதர்கள்தான் அதனால் பயப்படாதே நம்ம  பெரிய அம்மன் கோயில்ல செட்டு வந்து ஆடுதுன்னு நெனைக்கிறன்  நீ  போய் பார்த்துட்டு சாமிய கூம்பிட்டுட்டு  வா என்றால் அம்மா. இப்படித்தான் சுற்றுவட்டார பகுதியில கொண்டாடும் முத்தாரம்மன் கோயில்  தசரா விழா பற்றி அங்குள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரம்பத்துல தெரிந்து கொண்ட விஷயம் .தனியாக கூட்டமாக குழுவாக யார்யாருக்கு எப்படி முடியுமோ அப்படி கொண்டாடப்படும் விழாவாக உருவெடுத்துள்ளது இந்த தசரா விழா. . முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஒருவர் அல்லது ஒரு ஊரில் ஒருசிலர் என்ற நிலை மாறி ஒரு தெருவுக்கு ஒரு குழு அல்லது ஒரு ஊருக்கு ஒரு செட்டு என்ற நிலையாகியுள்ளது

இப்படி மூன்று மாவட்ட மக்களும் தென் தமிழக மக்களும் போட்டி போட்டு வழிபட துடிக்கும் இந்த முத்தாரம்மன் ஆலயம் திருச்செந்தூர் அருகில் கடற்கரையோரமாக கன்னியாகுமாரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  குலசேகரன் பட்டினம் என்றழைக்கப்படும் குலசையில்அமைந்துள்ளது
இங்கு  கோயில் கொண்டுள்ள இந்த முத்தாரம்மன்தான் நாம் இதுவரை படித்த கதையின் நாயகி நவராத்ரி உற்சவங்கள் நாட்டில் பல இடங்களில் பலவிதமாக கொண்டாடப்பட்டாலும் பெங்களூரில் அன்னை சாமுண்டியின் விழாவாகவும் கல்கத்தாவில் மாகாளி யின் விழாவாகவும் குஜராத்தில் தண்டியா நடனத்தோடு வெகு விமரிசையாக சிறப்பாகவும் கொண்டாடப்படும் இவ்விழாவின் தாக்கம் தமிழகத்தில்  ஒருசில வீடுகளில் கொலு உற்சவம் என்ற பெயரிலும் சில கோயில்களில் நவராத்திரி உற்சவம் என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. வீட்டைவிட்டு வெளியே பெரிதாக இல்லை என்பதே உண்மை . அந்த குறையை போக்க வந்ததுதான் குலசேகரன்பட்டினத்தில் கொண்டாடப்படும் அன்னை முத்தாரம்மனின் தசரா பெருவிழா பத்துநாட்களும் ஊரே அல்லேகல்லப்படும் அற்புத திருநாள்.

அம்மையுடன், அப்பனும், ஞானமூர்த்தீஸ்வரர் என்ற பெயரில் ஒரே கருவறையில் ஒருசேர  பீடத்தில் எழுந்தருளியுள்ளார். இதுபோன்ற காட்சி வேறு எந்த தலத்திலும் பார்க்க முடியாத. அற்புத காட்சியாகும் .மிழகத்தில் சத்தமே இல்லாமல், ஒரு மிகப்பெரிய சக்தி பீடமாக உருவெடுத்து வருவது குலசேகர பட்டிணத்திலுள்ள முத்தாரம்மன் திருக்கோயிலாகும்அன்னை உமையவள், இங்கு முத்தாரம்மன் என்ற திருப்பெயரில் கோயில்கொண்டு ள்ளாள். இங்கு கணவன்-மனைவி ஒற்றுமை, மன நலன், செல்வ வளம் வழக்குவம்புகளில் மாட்டி சின்ன பின்னமானவர்கள் அதிலிருந்து மீண்டு பழைய நிலமையைப்பெற வும் குழந்தைகள் நோய்நொடியின்றி சுபிட்சமாய் வாழவும் அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு சுகமடையவும்   தங்களது வேண்டுதல்களை அன்னை நிறைவேற்றுவதாக பக்தர்கள் பரவசமாக தெரிவிக்கிறார்கள்.

பக்தர்கள் மாறு வேடம் பூண்டு, காணிக்கை பிரித்து, கோயிலில் கொண்டு வந்து சேர்ப்பார்கள். வேடம் அணிவதிலேயே அதிகப்படியாக விரதம் இருக்க வேண்டியது காளியம்மன் வேடத்துக்குத்தான். இதற்காக நாற்பது நாட்கள் ஒரே நேரத்து சாப்பாடுடன், மிக கடுமையான விரதம் இருப்பார்கள் பக்தர்கள். காப்புக்கட்டிநாள்தொடங்கி விஜயதசமியன்று நள்ளிரவில் அம்மபாள் மகிஷாசுரனை வதம் செய்யும் வரையிலும் இவர்கள் வீட்டிற்கு செல்வதில்லை . மறக்க கோயில்களிலோ அல்லது தசரா குழுவினரின் மண்டபங்களிலோ தாங்கிக்கொள்வதும் தொடர்ந்து தினசரி தங்களுக்குரிய வேடங்களை தரித்து நன்றாக ஒப்பனையுடன் அலங்கரித்து குறவன் குறத்தி அனுமன் குரங்கு கரடி டாக்டர் நோயாளி பைதியக்காரன் சிவன் மஹாவிஷ்ணு பிரம்மா சரஸ்வதி லட்சுமி பார்வதி அட்டகாளி கருங்காளி போலீஸ் திருடன் என விதவிதமான வேடமணிந்து நையாண்டி மேளம் கரகாட்டதோடுஆட்டம்மாடி   ஊர் ஊராக  சென்று தர்மம் (காணிக்கை) சேகரித்து அன்னையின் அருளை பெற தங்களது நேர்த்திக்கடனை சமர்ப்பிப்பார்கள்

விரதத்தின் கடைசி நாளன்று ஒன்பதாம் நாளன்று எல்லா ஊர்களிலும் உள்ள  தசரா குழுக்களில் உள்ள பக்தர்கள் விதவிதமானவேடமணிந்துகுலசேகரன்பட்டினத்தை நோக்கி அணிதிரள்வார்கள் அணைத்து  மக்களின் பயணமும் அன்னையின் திருத்தலம் நோக்கியே இருக்கும் .தங்களது அன்னையை கண்டு தரிசித்து அவளின் மகிஷாசுர மார்த்தனத்தை கண்டுகளிக்க கடற்கரையில் அணிதிரள்வார்கள் . பின்னர் நள்ளிரவில் அம்பாள் அலங்கார சகிதமாக மகிஷாசுரமர்தினியாக கோலம் பூண்டு மகிஷனை வதம் செய்ய கடற்கரைக்கு வந்து சேர்வாள் . அங்கிருந்துகாப்புக்கட்டி  விரதமிருந்து காளிவேடம் புரிந்த பக்தர்களின் ஆவேச அருளாட்டதோடு ஓம்காளி ஜெய்காளி முத்தாரம்மா காப்பாற்று என்ற பக்திகோசத்தோடு அன்னையவள் மஹிஷாசுரனை  வதம் புரிவாள் . மகிஷனின்  வதத்ததுடன் நிறைவடையும் தசரா திருவிழாவிற்கு காப்பு கட்டிய பக்தர்கள் வரிசையில் நின்று காப்பு கழற்றிவிட்டு அன்னையை தரிசனம் செய்து மனநிறைவோடு இல்லம் திரும்புவார். பக்தர்களின் வேண்டுதலை கேட்டது கேட்டபடி நிறைவேற்றும் மஹாசக்தி பொருந்திய தெய்வம் முத்தாரம்மன் என்றால் அது மிகையல்ல . அன்னையை வணங்கி அவளது கடைக்கண் பார்வையால் பலனடைந்தோர் ஏராளம்  ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் பக்தர்களின் கூட்டமே அதற்க்கு சாட்சி

நினைத்ததை வழங்கும் தேவியவள்

கேட்டதை கொடுக்கும் சக்தியவள்

அன்பர்கள் குறையை கண்டுணர்ந்து

நிறையாய் மாற்றிடும் தாயுமவள்

நாமும் தரிசித்து அன்னையின் நல்லருளை பெற்றிடும் பிள்ளைகளாவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *