தமிழகம்
இங்கே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல் செய்தது பீட்டா. மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தவுடனே மீண்டும் நீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றது. மத்தியில் ஆளும் அரசு, உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து எதுவும் செய்யமுடியாது.
கேரளா
திருச்சூர் பூரம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏப்ரல் / மே மாதத்தில் அங்குள்ள அனைத்து கோயில்களும் விழாக்கோலம்காணும். இயல், இசை, நடனம் என்று களைகட்டும். கோயில் யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்படும். யானைகளை துன்புறுத்தப்படுகின்றன என்று கூறி இந்த பீட்டா நீதிமன்றம் சென்றது.
கர்நாடகா / பஞ்சாப் / ஹரியானா
அனைத்து மாநிலங்களிலும் மகர சங்கராந்தியை ஒட்டி ரேக்ளா போட்டி நடைபெறும். இங்கு ஜல்லிக்கட்டு போலவே அங்கும் ரேக்ளா பந்தயம், ஹிந்துக்களின் கலாச்சாரத்தோடு தொடர்பு உடையது. இதற்கும் தடை கோரி வழக்கு தொடுத்தது பீட்டா.
ஆந்திரா
மகர சங்கராந்தியை ஒட்டி நடத்தப்படும் சேவல் சண்டை பன்னெடுங்காலமாக நடைபெறுகிறது. சேவல்கள் காயமடைகின்றன என்று கூறி நீதிமன்றத்தில் தடை பெற்றது பீட்டா. அதேபோல அங்கே நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும் தடை பெற்றுள்ளது இந்த அமைப்பு.
மஹாராஷ்டிரா / உத்தரப் பிரதேசம்
கிருஷ்ண ஜெயந்தி அன்று மும்பை, புனே, மதுராவில் உறியடி நடைபெறும். மிக உயரத்தில் தொங்க விடப்படும் உறியை உடைக்க பெரிய போட்டி நடக்கும். லட்சக்கணக்கானோர் இதை பார்வையிட குழுமுவர். போட்டியாளர்கள் உயிருக்கு ஆபத்து என்று கூறி மனித உரிமை ஆர்வலர்கள் நீதிமன்றம் சென்று தடை வாங்கினார்கள்.
வட மாநிலங்கள்
ஹோலி கொண்டாட்டத்தின் பொழுது தூவப்படும் வண்ண பொடிகள் கண் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று கூறி தடை கோரினார்கள். ஒவ்வொரு ஹோலி சமயமும் விவாதம் நடத்தி, ஹோலி கொண்டாதீர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள் இந்த என்.ஜி.ஓ (‡எˆ) நிறுவனங்கள்.
மேற்கு வங்கம்
இங்கே உச்சக்கட்டமாக அரசே முன்னின்று ஹிந்து பண்டிகைகளுக்கு தடை விதிக்கிறது. துர்கா பூஜா ஊர்வலத்திற்கு தடை, காரணம் கேட்டால் மீலாடி நபி வருகிறது என்று சப்பை கட்டு.
தேசம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த கெடுபிடி உள்ளது, பிள்ளையாரை கடலில் கரைப்பதால் சுற்றுண்சூழல் மாசு என்று பேசும் ஆர்வலர்கள் என்கிற பெயரில் சில சதிகாரர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே ஹிந்து கலாச்சாரத்தை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டுளார்கள்.
ஆங்காங்கே வெவ்வேறு அவதாரம் எடுத்து நமது பாரம்பரியத்தை குழி தோண்டி புதைக்க கிளம்பியுள்ள தீய சக்திகளை கண்டறிய வேண்டியது முக்கியம். ஜல்லிக்கட்டை தமிழகத்தின் பிரச்சினையாக பார்க்காமல், தேசத்தின், நமது கலாச்சாரத்தின், பண்பாட்டின் பிரச்சினையாக பார்க்க வேண்டும்.
நமது பாராம்பரியமான ஜல்லிக்கட்டை காக்க போராடும் மாணவர்கள், இளைஞர்களை ஆதரிக்கும் அதே வேளையில், அவர்கள் சதிகாரர்களின் வலையில் விழாமல் இருப்பது முக்கியம். இங்கே உள்ள சிலர், இந்த அறப்போராட்டத்தை திசை திருப்பி, தனி நாடு வேண்டும், இந்தியாவை புறக்கணிக்கிறோம், தேசியக்கொடியை அரைகம்பத்தில் பறக்க விடுவோம், கொடியை எரிப்போம் என்று தூண்டிவிடுபவர்களை புறந்தள்ள வேண்டும்.