கீழே இறங்கிய கொடியேரி

கேரளாவை ஆளும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சி.பி.ஐ (எம்) கட்சியின் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேரி மீது பீகாரை சேர்ந்த ஒரு பெண் பலாத்கார வழக்கு பதிவு செய்திருந்தார். முதலில் இதனை மறுத்த பினோய் கொடியேரி , தற்போது பீகார் பெண்ணின் குழந்தைக்கு தான் தந்தை என்பதை இறுதியாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, குழந்தையை வளர்ப்பதற்கு ஒருமித்த கருத்துக்கு இருவரும் வந்திருப்பதாக அந்த பெண்ணும் பினோயும் ஒரு கூட்டு மனுவை சமர்ப்பித்தனர். குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வழக்கை வாபஸ் பெற முடிவு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், பினாய் கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், கிரிமினல் வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்த பலாத்கார வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று பினாய் முன்பு கூறியிருந்தார் என்பதும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட டி.என்.ஏ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் நினைவு கூரத்தக்கது.