கிரெடிட், டெபிட் அட்டைகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட்களை பெறும் வசதி: ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டம்

கிரெடிட், டெபிட் அட்டைகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்குமெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர்வரை பயணிக்கின்றனர். பயணிகள்எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறை உட்பட பல்வேறு வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கிரெடிட், டெபிட் அட்டைகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சிற்றுந்துகள், ஷேர் ஆட்டோக்கள் போன்றஇணைப்பு வாகன வசதி படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. இதுபோல, மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் வாட்ஸ்அப் செயலி உள்ளிட்ட பல்வேறு வகைககளில் டிக்கெட் எடுக்கும் வசதி கொண்டு வரப்பட் டுள்ளது.
இதன்தொடர்ச்சியாக கிரெடிட்,டெபிட் அட்டைகள், ஜிபே ஸ்கேனர்பயன்படுத்தி டிஜிட்டல் டிக்கெட்எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப் பட உள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவுப் பகுதிகளில் உள்ள ஸ்கேனர்களில் இதற்கேற்பதொழில்நுட்ப மாற்றம் செய்யப்படும். அதில், வங்கி அட்டைகளை காண்பித்து புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம், சென்றடையும் மெட்ரோ ரயில் நிலையத்தை தேர்வு செய்து, அதற்கான கட்ட ணத்தை செலுத்தலாம்.
பயணத்துக்கான கட்டணம் மட்டும் பிடித்தம் செய்யப்படும். அதுபோல, ஜிபே முறையில், ஸ்கேனர் வாயிலாகவும் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். புதிய வசதிக்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.