காஷ்மீர் இரண்டாக பிரிப்பு – அரசு விளக்கம்

* காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் ரத்து.

*ஜம்மு காஷ்மீர் இனி மாநிலமாக இருக்காது. அதற்கு பதில் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்.

* லடாக், காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்.
காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன

காஷ்மீர் பிரிக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்பதல் அளித்துள்ளார். இந்நிலையில் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது ஏன் என அமித்ஷா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், மக்கள்தொகை குறைந்த, செல்வதற்கு கடினமான நிலப்பரப்பில் அதிகமான பகுதி  லடாக் என்பதால் அதை கையாள்வதும் கடினமானது. யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது லடாக் மக்களின் நீண்ட கால கோரிக்கை. மக்களின் விருப்பத்தையும், நீண்ட கால கோரிக்கையையும் நிறைவேற்றும் விதமாக லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவும், காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காகவும் காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக்கப்பட உள்ளது. சட்டசபை உள்ள யூனியன் பிரதேமாக காஷ்மீர் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *