காசி தர்ம பரிஷத் கோரிக்கை

காசி தர்ம பரிஷத்தின் அர்ச்சகர்கள் ஞானவாபி விவகாரத்தில் 22 பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளனர். ‘ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய கட்டமைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தின் முன் ஹிந்துக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும். ஞானவாபியில் காணப்படும் ஆதி விஸ்வேஷ்வர் சிவலிங்கத்தை வழிபடும் உரிமை எங்களுக்கு வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஞானவாபி வளாகத்தின் மேல் தளத்தில் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும். காசியின் 4,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கருத்தில் கொண்டு, வாரணாசியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இறைச்சி மற்றும் மதுபானங்களை விற்பனை செய்வதற்கும், சாப்பிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991, ஹிந்துக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர். இக்கூட்டத்தில் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள், சமூக சேவகர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கிடையில், பனாரஸ் ஹிந்து பல்கலைகழக பேராசிரியர் ஒருவர், முகலாய பேரரசர் ஔரங்கசீப் கி.பி. 1669ல் ஆதி விஸ்வேஷ்வர் கோயிலை இடித்து மசூதியை கட்டியது தொடர்பாக ஒரு முக்கிய ஆவணத்தை சமர்பித்துள்ளார்.