காங்கிரஸ் குடும்ப அரசியல்

பரம்பரையாக குடும்ப அரசியல் நடக்கும் காங்கிரஸ் கட்சியில், இதுவரை அரசியலுக்கு வராமல் இருந்த பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா தற்போது அரசியலுக்கு வர முடிவெடுத்துள்ளார். இதற்கு பிரியங்கா துணையாக இருக்கிறார். தன் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனுமதித்தால், தான் அரசியலுக்கு வருவேன் என்றும் நாடாளுமன்றத்தில் அமர்வேன் என்றும் பேசியுள்ளார். ஏற்கனவே 2019ல் இவரது ஆதரவாளர்கள் இவர் காஸியாபாத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். தன் மகன் ராகுலை தலைவராக்க சோனியா ஆசைப்படும் சூழலில், ராபர்ட்டின் பேச்சு கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இவர் மீது பண மோசடி, நில மோசடி, சட்ட விரோத பணப்பறிமாற்றம், வெளி நாடுகளில் சொத்து வாங்கியது, பினாமி சொத்துகள் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.