காங்கிரஸ் கட்சியின் அறியாமை

 கடந்த சில தினங்களுக்கு முன் தெலங்கான மாவட்டம், இப்ராஹிம்பட்டிணத்தில் ஆர்.எஸ்எஸ். அமைப்பின் சார்பில் இரு தினங்கள் விஜய் சங்கல்ப் சிபிர் நடந்தது.  இதில் கலந்து கொண்ட ஆர்.எஸ்எஸ்.  சர்சங்கசாலக் மானினிய மோகன் பாகவத் , இந்திய குடிமகனான ஒருவர் எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தை பின்பற்றினாலும், எந்த வழிபாட்டு முறையில் ஈடுபட்டாலும், இந்து மதம் மீது நம்பிக்கை இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவர் ஒரு இந்துவாக தான் இருப்பார். எனவே, ஆர்எஸ்எஸ்.,ஐ பொறுத்தவரை 130 கோடி இந்திய மக்களும் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் அவரவராக இருக்க வேண்டும், ஒவ்வொருவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் கருதுவது. நமது நாடு பண்பாட்டின்படி இந்துத்துவாதி, என பேசியிருந்தார்.     இந்த பேச்சுக்கு தெலங்கான மாநிலத்தில்  மூத்த காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,  முன்னாள ராஜ்ய சபாவின் உறுப்பினருமான வி. ஹனுமந்தராவ், நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

          காங்கிரஸ் கட்சியின் வாதம், மானினிய மோகன் பாகவத் அவர்களின் பேச்சின் மூலம், இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம் உள்ளிட்ட பிற மதத்தினரின் நம்பிக்கையையும், உணர்வுகளையும் புண்படுத்தி விட்டார்.  அவரது பேச்சு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், இது மத கலவரத்தை உருவாக்கும் என தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.   இந்த குற்றச்சாட்டு, காங்கிரஸ் கட்சியினரின் அறியாமையை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.  ஆர்.எஸ்எஸ். தலைவர் எங்கேயும் மாற்று மதத்தினரை கொச்சைப்படுத்தி பேசவில்லை மற்றும் உயர்வு தாழ்வாகவும் விமர்சிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.    ஆர்.எஸ்.எஸ். 21-ம் நூற்றாண்டில் ஒரு வரைப்படம் என்ற புத்தக வெளியிட்டு விழாவில், தாங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளாமல், தங்களை இந்தியர்கள் என்று கருதுபவர்களை கூட சங்கம் தனது சொந்தமாக கருதுகிறது என மோகன் பாகவத் கூறியதை ஏனே காங்கிரஸ் தலைவர்கள் மறந்து விட்டார்கள்.

          காங்கிரஸ் தலைவர் கொடுத்த புகார் மனுவில், இதனால் ஹைதராபாத்தில் கலவரம் ஏற்பட்டால் அதற்கு மோகன் பாகவத் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளது சிரிப்புக்கு இடமளிக்கிறது.   மத கலவரத்தை  தூண்டும்விதமாக பேசியவர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதும், அவரது சகோதரர் அக்பரூதீன் ஒவாசி,  If police is removed for 15  minutes we will finish 100 core hindus  என பேசியவர் மீது காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுப்பதற்கு பதிராக அவருக்கு  உதவிபுரிவதும்  தெரியாமல் புகார் மனு கொடுத்துள்ளார்.  இவரது பேச்சு ஆந்திராவில் வகுப்பு கலவரத்தை தூண்டாதா?       நாட்டில் கலவரத்தை உருவாக்கும் இஸ்லாமிய இயக்கங்கள், மாவோயிஸ்ட்கள், அர்பன் நக்ஸல் என்ற போர்வையில் உலா வரும் அறிவுஜீவிகள் போன்றவர்களால் வகுப்பு கலவரம் உருவாகும் என முந்தைய காங்கிரஸ் ஆட்சில் உளவு பிரிவினைர் தெரிவித்தும் ஏன் தடை கோரி வழக்கு தொடுக்கவில்லை.

          குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் போராட்டக்காரர்கள், வன்முறையை  தூண்டும் விதமாக பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் கண்டு கொள்ளவில்லை.  மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது,  மம்தா கட்சியின் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் Firhad Hakim  என்பவர் பாகிஸ்தான் பத்திரிக்கையான தி டான் நிருபரிடம்  Please come along and let us take you to mini-Pakistan’ in his constituency Garden Reach”,  கூறியது.  இது வகுப்பு கலவரத்தை தூண்ட கூடியது என காங்கிரஸ் கட்சி தேர்தலின் போது தெரிவித்தது, ஏன் வழக்கு தொடுக்கவில்லை.  இஸ்லாமியர்களின் வாக்கு கிடைக்காதோ என்ற கவலையின் காரணமாக வழக்கு தொடுக்க வில்லையா?

          வகுப்பு கலவரத்தை உருவாக்கியவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அரசியல் ஆதாயத்திற்காகவே  இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.  1964-ல் 512 பேர்கள் கொல்லப்பட்ட அகமதாபாத் கலவரத்தை விசாரனை செய்த நீதிபதி பி.ஜெக்மோகன் ரெட்டி தனது விசாரனை அறிக்கையில்  The Congress was not far behind in spreading communal feelings. Most Congressmen participated directly or indirectly in the riots and called the Muslims anti-national   என குறிப்பிட்டுள்ளார்.  இது ஒன்றல்ல, பல வகுப்பு கலவரங்களை தூண்டிவிட்டு குளிர் காயும் காங்கிரஸ் கட்சி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியது வகுப்பு கலவரம் நடந்தால், பொறுப்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர் என குறிப்பிட்டுள்ளது வேடிக்கையானது மட்டுமில்லாமல், காங்கிரஸ் கட்சியின் அறியாமையை என்னவென்று கூறுவது.

          தமிழகத்தில்,  இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, இந்துக்களை இழிவுப்படுத்தும் விதமாக தி.க. மற்றும் தி.முக.வினரின் பேச்சு வகுப்பு கலவரத்தை தூண்டாதா?  இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுடன் திருமாவளவன் நட்பு பாராட்டி வருவதால், பொன்னமராவதிக்கு இணையான வன்முறையான தேனியில் பொம்மிநாயக்கன்பட்டி – இந்திரா காலனியில் இஸ்லாமியர்களால் பட்டியல் ஜாதியினர் தாக்கப்பட்ட சம்பவத்தை எங்கும் பேசுவதே இல்லை.  அடிப்படையில் பறையர் – வன்னியர் நட்பானது இந்து என்பதின் அடிப்படையில் நடக்கக் கூடாது.  அது கிறிஸ்துவ – இஸ்லாமிய நட்பின்  கீழ்தான் நடக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.  அதனால் கிறிஸ்துவ, இஸ்லாமியர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்வதின்  காரணமாக, இந்துக்களையும் இந்து தெய்வங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக விமர்சனம் செய்கிறார்.   வகுப்பு கலவரத்தை இதன் மூலம் தூண்டுகிறார் என காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்வதில்லை.   ஏன் என்பதற்குறிய காரணத்தையும் தெரிவிப்பதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *