கர்நாடக மாநிலம் மங்களூருவில் ௨௦௨௨ ஜூலை 26 அன்று தடைசெய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை (பி.எப்.ஐ) சேர்ந்த பயங்கரவாதிகளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா இளைஞர் அணியின் மாவட்டத் தலைவர் பிரவின் குமார் நெட்டாருவின் மனைவி நூதன குமாரிக்கு முந்தைய பா.ஜ.க அரசு சமீபத்தில் ஒப்பந்த அடிப்படையில் குரூப் சி பிரிவில் பணி வழங்கியது. முதலில் அவர் முதல்வர் செயலகத்தில் மூத்த உதவியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், அவரது கோரிக்கையின்படி, மங்களூருவில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தின் முதலமைச்சரின் நிவாரண நிதிப் பிரிவில் உதவியாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது, கர்நாடகாவில் தற்போது புதிதாக அமைந்த காங்கிரஸ் அரசு அந்த தற்காலிக பணி உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள ஒரு செய்தியில், பொதுவாக அரசுகள் மாறும்போது, தற்காலிக ஊழியர்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தங்களுக்கு வேண்டியவர் களையே அவர்கள் நியமிக்கிறார்கள். கர்நாடக காங்கிரசும் அப்படியே செய்துள்ளது. எனினும், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் மனைவி என்ற குறைந்தபட்ச கருணையோடு கூடிய சிறப்பு கவனம் கூட நூதன குமாரிக்கு காங்கிரஸ் அரசால் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.