கர்நாடக தேர்தலில் காங்கிரசை ஏன் நிராகரிக்க வேண்டும்?

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் நோக்கம்  முஸ்லிம்கள்,  கிறிஸ்தவர்கள் வாக்குகளை முழுமையாக பெற்று வெற்றி பெற வேண்டும். சோனியா காந்திக்கு, 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, காங்கிரசை சேர்ந்த எம்.ஆர். பாட்டீல்  எழுதிய கடிதத்தில் தேர்தலில்  காங்கிரஸ் கட்சி வெற்றி பெற, கர்நாடகவில் ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதும், பா.ஜ.கவை வீழ்த்துவதும் அவசியம். அதற்கு முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் ஒன்றிணைத்து, ஹிந்துக்களை சாதியின் பெயரால் பிரிப்பதன் மூலம் தேர்தலில் வெற்றி அடைய முடியும்  என எழுதினார்.   ஆகவே ஹிந்துக்களிடம் பிரிவினையை உருவாக்கி, சிறுபான்மையினரை  தாஜா செய்வதன்  மூலமே வெற்றி கிடைக்கும்  என காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நம்புகிறார்கள்.

கர்நாடகவில் முஸ்லிம்களுக்கான ’2பி’ பிரிவின் கீழ் 4 சதவீத தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்து லிங்காயத்,  ஒக்கலிகர் சமூகத்திற்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படும் என பா.ஜ.க. அறிவித்தது.  சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாஸனத்துக்கு எதிரானது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 4 சதவீத தனி இடஒதுக்கீட்டை மீண்டும் அளிப்போம் என்று உறுதியளித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே,  தமிழ்நாடு, கேரள முஸ்லிம் பயங்கரவாதிகளின்  புகலிடமாக கர்நாடக மாநிலம் மாறியுள்ளது.

2022 டிசம்பரில் நடந்த மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பும்,  ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் ஆள்சேர்க்கும் பணியிலும், கர்நாடக முஸ்லிம்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.   காங்கிரஸ் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவினரின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதில்  முனைப்பு காட்டவில்லை. கர்நாடகவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் கடற்கரை நகரமான பட்கல், பயங்கரவாதிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறியுள்ளது.

பா.ஜ.க  அரசு இரண்டு சட்டங்களை கொண்டு வந்துள்ளது.  ஒன்று கோயில்கள் அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது.   இரண்டு  ஆசை காட்டி மதம் மாற்றும்  சர்ச்சுகளுக்கு தடை போட்டது. இந்த இரண்டு சட்டங்களையும்  காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் கோயில் பணம், சர்ச்சுகளுக்கும்  மசூதிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. 2016ல் ” இந்தியா பேக்ட் ” வெளியிடப்பட்ட அறிக்கையில், காங்கிரஸ் அரசு சர்ச்சுகளை கட்டுவதற்கும் புதிய கிறிஸ்தவ சமுதாயக் கூடங்கள் கட்டுதவதற்கும் கோயில் வருமானம் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது  என்று வெளியிட்டது.

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, கர்நாடகவில் தேர்தலுக்காக ‘லிங்காயத்’ சமூகத்திற்கு தனி மத அடையாளத்தை ஏற்படுத்தி வீரசைவர்களுக்கும் லிங்காயத்துகளுக்கும் இடையே பிளவை உருவாக்கும் நடவடிக்கை எடுத்தது. இது ஹிந்துக்களை பிளவுபடுத்தலாம்  என்ற சிந்தனையின் செயல்பாடாகும்.  இப்படிப்பட்ட காங்கிரஸ் வெற்றி பெற்றால்,  ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஹிந்துக்களிடையே பிளவை உருவாக்கி, சமூக மோதல்களை தூண்டிவிடும்.