கரையும் திருணாமுல் காங்கிரஸ் – தாங்குமா அடுத்த இரண்டு வருடத்திற்கு

‘தாமரை பூத்த தடாகம்’ வங்காளம்

மே 23க்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்திக்க அடியோடு தவிர்க்கிறார் மமதா. அந்த அளவுக்கு கிலி கண்டிருக்கிறது அவருக்கு.

திரிணாமூல் காங்கிரஸ் தன்   எம் எல் ஏவான ஸுபிராக்ஷு  ராயை கட்சி விரோத பேச்சுக்காக சஸ்பெண்ட் செய்துள்ளது.

வங்காளம் இன்று ‘தாமரை பூத்த தடாகமாக’ மிளிர்கிறது.

2014ல் 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய பா ஜ க இந்த முறை 18 நாடாளுமன்ற தொகுதிகளைப் பெற்றுள்ளது. மேலும் 16 தொகுதிகளில் மமதா கட்சியினர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று உணரும் அளவிற்கு கடும் போட்டி கொடுத்துள்ளனர். பாரதீய ஜன சங்த்தினைத் தோற்றுவித்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜீ வங்கம் தந்த கொடை. அவர் ஆன்மா இன்று குளிர்ந்திருக்கும்.

வெற்றி பெற்றுள்ள பிரபலஸ்தர்களுள் மாநில தலைவர் திலீப் கோஷ், எஸ் எஸ் அலுவாலியா, அசன்சாலில் இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாபுல் சுப்ரீயோ போன்றோர் அடங்குவர்.

இந்த பெரும் வெற்றிக்கு பின்னால் பலரின் அசராத உழைப்பும் தியாகமும் உள்ளன.

குறிப்பிடப்பட வேண்டிய ஒருவர், இன்று முதன் முறையாக  தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள எம் பியான அர்ஜுன் சிங் ஆவார். அவர், ” நாம் 2021 வரை மாநில ஆட்சியைப் பிடிக்க காத்திருக்கத் தேவை இல்லை. என்று வேண்டுமானாலும் கவிழும் நிலையில்தான் மமதா அரசு உள்ளது “என்கிறார்.

வாக்குச் சதவீதம் 17லிருந்து 40 வரை உயர்ந்துள்ளது. மாநிலத் தலைவர் திலீப் கோஷ் கூறுவது போல் பல கட்சிக்காரர்களும் பா ஜ கவை ஆதரித்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

இதற்கிடையில் திருணாமுல் காங்கிரசின் மூன்று எம்.எல்.ஏக்கள் உட்பட அறுபது மாநகராட்சி கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க வில் சேர்ந்துள்ளனர். பல்வேறு சி.பி.எம். கட்சி தொண்டர்களும் சாரைசாரையாக பா.ஜ.வில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *