ஜனவரி 17, 2022 அன்று, டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் வசிக்கும் 38 வயதான பட்டியலினத்தவரான ஹிராலால் குஜராத்தியை அதே பகுதியில் வசிக்கும் இர்பான் சித்திக் மற்றும் அவரது சகோதரர் சானு கொடூரமாக சுட்டுக் கொன்றனர். முஸ்லிம் பயங்கரவாதி இர்பான், ஹிராலாலின் சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், நான்கு மாதங்களிலேயே ஜாமீனில் வெளிவந்தார். வந்ததும், தன் மேல் வழக்குப் பதிவு செய்த ஹிராலாலை தனது சகோதரனுடன் சேர்ந்து சுட்டுக் கொன்றார். இதனால், பயந்துபோன ஹிராலாலின் குடும்பத்தினர், அந்த வீட்டை விற்பனை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இர்பான், ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் முகேஷ் அஹ்லாவத்தின் உறவினர். ஆம் ஆத்மியின் சிறுபான்மைப் பிரிவின் தலைவராகவும் இர்பான் சித்திக் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி பா.ஜ.க தலைவர், வி,ஹெச்.பி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் இந்த விஷயத்தில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். நேற்று ஹிந்து அமைப்புகளும் பொதுமக்களும் இந்த விவகாரத்தில் நீதி கேட்டு ஊர்வலம் நடத்தினர்.