கடவுள் சிலைகளை வாங்குவதில் கவனம்

முஸ்லிம்களால் செதுக்கப்பட்ட ஹிந்து கடவுள் சிலைகள் கோயில்களில் நிறுவப்படுவதாக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள  கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள செலுவ நாராயணசாமி கோயிலின் தலைமை குருக்களான ஸ்ரீனிவாஸ் குருஜி, “சாஸ்திரங்களின்படி ஹிந்துக்கள் அல்லாதவர்கள் செய்த சிலைகளை கோயில்களில் நிறுவக் கூடாது. ஹிந்து கடவுள் சிலைகள் மற்றும் அவற்றின் ‘பிராண பிரதிஷ்டை’ செதுக்குவதற்குப் பின்னால் ஒரு சில நடைமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும். எனவே, ஹிந்துக்கள் அல்லாதவர்களால் செதுக்கப்பட்ட சிலைகள் தூய்மையானவை அல்ல” என்று கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக, வரும் ஏப்ரல் 14ம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.