ஒருதலைப்பட்ச செயல்பாடா?

சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட விவகாரத்தில், உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், சென்னை காவல் ஆணையர், சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க வேண்டும் என செய்தியின் அடிப்படையில் மட்டுமே மாநில மனித உரிமை ஆணைய தலைவர் எஸ். பாஸ்கரன் தாமாக முன் வந்து வழக்கு பதிவு உத்தரவுகள் பிறப்பித்துள்ளார். ஆனால், இதே மாநில மனித உரிமை ஆணையம், ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் மணிகண்டன் காவல்துறை விசாரணையின் போது தாக்கப்பட்டதால் ரத்த வாந்தி எடுத்து மரணித்த சம்பவத்தின் போது தாமாக முன்வந்து விசாரணை நடத்தவில்லையே ஏன்? சமீபத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு படித்த மாணவி லாவண்யா பள்ளி நிர்வாகத்தால் மதமாற்ற நெருக்கடி கொடுக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கும் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிடவில்லையே ஏன்? என சமூக ஊடகங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விடை சொல்லுமா மாநில மனித உரிமை ஆணையம்?