பிஜப்பூர் சுல்தானத்தை அடியோடு ஒழித்துகட்டியிருந்தான் வீரசிவாஜி ஆனால் அவன் காலத்துக்கு பின் மொகலாயரின் ஊடுருவல் தெற்கே வந்தது ஆனால் சிவாஜியின் மராட்டிய எழுச்சி அதை விரட்டி அடித்து கொண்டிருந்தது மராட்டியருக்கும் மொகலாயருக்குமான தீரா போரில் ஆங்கிலேயரும் வந்துவிட இந்த குழப்பத்தில் சில சிற்றரசுகள் தோன்றின பிஜப்பூர் சுல்தானத்தில் முன்பு சிவாஜியின் தந்தையின் சேவகர்களாய் இருந்த ஒருவனின் மகன் பாத் முகமட், இந்த பாத் முகமது ஆப்கானிய வம்சம் அங்கிருந்து பஞ்சாப் வந்து குடியேறி பின் தென்னகம் வந்த வம்சாவளி குல்பர்காவில் வளர்ந்த அவன் பல மொழிகளை பேசினான் ,சிவாஜியின் தந்தை ஷாஹாஜி உருவாக்கி வைத்திருந்த ராக்கெட் அணியின் தொடர்ச்சியில் அவனும் ஒருவனாய் இருந்தான்,அவனின் பாரசீக மொழியின் ஆளுமையால் பிஜப்பூரின் எஞ்சிய சிறுபகுதியான ஆற்காடு நவாபின் தளபதியாக சேர்ந்தான், தஞ்சாவூரை சேர்ந்த பெண்ணை மணமுடித்தும் கொண்டான் இவனுக்கு பிறந்தவனே ஐதர் அலி, இந்த ஐதர் அலி மொகலாயருக்கும் மராத்தியருக்கும் பிரிட்டிசாருக்கும் மோதல் நடந்த காலங்களில் மைசூரை கைபற்றி கொண்டான், அங்கிருந்த உடையார்களை விரட்டி ஆட்சியினை கைபற்றினான் அவன் மறுபடியும் பிஜப்பூர் சுல்தானத்தை உருவாக்கும் கனவில் இருந்தான், நிச்சயம் பிரிட்டிசார் மட்டும் வரவில்லை என்றால் அவன் உருவில் சிவாஜி அழித்த பிஜப்பூர் சுல்தானியம் மறுபடி துளிர்விட்டிருக்கலாம் அந்த ஐதர் அலி தன் ராஜ்ஜியத்தை விஸ்திரபடுத்த பல தந்திர வஞ்சக வழிகளை கையாண்டான், காரணம் அவன் பெரும் அரசன் இல்லை, பெரும் படையுமில்லை எப்படியோ மைசூர் அரசிடம் வந்து வேலை செய்து பின் அவனையே கவிழ்த்து சுல்தானாகி தன் ஆட்சியினை பெருக்கினான் எல்லா அட்டகாசமும் அவனிடம் இருந்தது, பழைய பிஜப்பூர் அரசின் சாயலாக தன்னை நினைத்ததால் இந்துக்கள் மேல் ஒரு பயம் இருந்தது, சிவாஜி காட்டிய பயம் அது இதனால் இந்துக்களை தொடக்கத்திலே அடக்கி வைக்க எண்ணி பெரும் தந்திரகாரியங்களை செய்தான், இந்துக்களின் கோட்டையினை குறிவைத்து அடித்தான் அப்பொழுது மதகரி நாயக்கன் என்பவன் சித்திரதுர்கா உள்ளிட்ட இடங்களை ஆண்டுவந்தான், அந்த சித்திரதுர்காவின் கோட்டை தலைவனின் மனைவி ஓபவ்வா அந்த கோட்டை ஐதர் அலியின் படைகளால் முற்றுகையிடபட்டது ஆனால் மலைமேல் இருக்கும் கோட்டை அவர்களுக்கு சிரமமானது எனினும் தொடர்ந்து போராடினர் அந்த கோட்டையில் காவலுக்கு ஆங்காங்கே வீரர்கள் இருந்தனர், செங்குத்தான மலைவழியாக ஐதர் அலி வீரர்கள் வருவது சிரமம் என்பதால் அங்கே ஒரே ஒரு வீரனை மட்டும் சம்பிரதாய காவலுக்கு நிறுத்தினர் ஆனால் ஐதர் படைகள் அந்த பகுதியில் காவல் குறைவாக இருக்கும் என கருதி அவ்வழியாக வந்து சிறு பிளவினை கோட்டை சுவற்றில் ஏற்படுத்தி உள்ளே செல்ல திட்டமிட்டனர் இது காவலுக்கு நின்றவனுக்கு தெரியாது அன்று அவன் இங்கு யாரும் வரமாட்டார்கள் என நினைத்து வேறுபக்கம் சென்றுவிட்டான் அதை அறியா அவன் மனைவி ஓபவ்வா அவனுக்கு உணவு எடுத்து அப்பக்கம் வந்தாள் ஆனால் கணவன் இல்லை அதே நேரம் கோட்டை சுவரில் சிறிய பிளவினை ஏற்படுத்தினர் ஐதர் அலி படைகள், ஒவ்வொருவராக மட்டும் வரும் சிறிய துவாரம் அது, அதில் முதல் வீரன் வரும்பொழுது கண்டு கொண்டாள் ஓபவ்வா அவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை ஆனாலும் அருகில் இருந்த உலக்கை எடுத்து அவன் மண்டையில் அடித்து வீழ்த்தி அவனை இழுத்து அருகிருக்கும் பள்ளத்தில் உள்ளே தள்ளினாள் இப்படி ஒவ்வொரு வீரனாக வர வர ஒவ்வொருவரையும் அடித்து வீழ்த்தினாள், சுமார் 20 பேர் வரை அப்படி கொல்லபட்டனர் அந்நேரம் அவள் கணவன் அப்பக்கம் வர நிலமையினை புரிந்து அபாய ஒலி எழுப்பி கோட்டை படைகள் வந்தன அந்த போரில் முதல் முதலி எதிரிகள் மண்டையில் அடித்து கோட்டையினை காத்தவள் ஓபவ்வா, அப்போர் தொடர்ந்து நடந்தது அதில் உலக்கையுடன் நின்றாள் ஒபவ்வா ஏகபட்ட எதிரிகளை உலக்கையால் அவள் பந்தாடியபொழுது எதிரியின் வாள் அவள் முதுகில் பாய்ந்து அங்கே இறந்தாள் போர்பயிற்சியோ இதர சண்டையோ தெரியாத ஒபவ்வா தாய்மண்ணை ஐதர் படைகளிடம் இருந்து காக்க வேண்டும் எனும் ஒரே ஆவேசத்தில் 50க்கும் மேற்பட்ட ஐதர் அலி வீரர்களை சாய்த்துவிட்டுத்தான் மண்ணில் சாய்ந்தாள் அவள் பெயர் கன்னட வரலாற்றில் நிலைத்தது, கன்னடத்தில் உலக்கைக்கு ஓனகே என்பதால் அவள் ஓனகே ஓபவ்வா என்றானாள் ஐதர் காலத்திலும் திப்பு காலத்திலும் கூட அவள் பெயர் மங்கவில்லை பின்னாளில் அந்நிய குடும்ப ஆட்சி முடிந்து மைசூரில் உடையார்கள் ஆட்சி வந்தபின் அவளுக்கான மரியாதை செய்யபட்டது இன்றும் சித்திரதுர்கா கோட்டையில் அவள் உலக்கையுடன் நிற்கும் சிலை அவள் காவல்காத்த அந்த பிளவும் உண்டு இன்று அவளுக்கு பிறந்த நாள், அவளின் தியாகத்துக்கு பாரத பிரதமர் மோடி இன்று தலைவணங்கி அஞ்சலி செலுத்தினார் உண்மையில் வீரசிவாஜி தொடங்கிவைத்த வீரபோரின் வழிவந்தவள் அந்த ஓபவ்வா, அந்நியர் ஆட்சி எவ்வடிவிலும் இங்கு இருக்க கூடாது என உலக்கை எடுத்து போராடி உயிரை விட்டவள், இந்துஸ்தான பெண்களின் வீரத்துக்கு அவள் சாட்சி இம்மாதிரி வீரவரலாறுகள் எல்லாம் மறைக்கபட்டுத்தான், “மைசூர் புலி” என திப்புவி பிம்பம் உருவாக்கபட்டது உண்மையில் மைசூர் பக்கம் புலியாக இருந்தவன் சிவாஜியின் தந்தை ஷாஹாஜி, அவன் தெற்கே இருந்து சுல்தான் கவனத்தை திருப்பியதாலேதான் வடக்கே சிவாஜி ராஜ்யம் அமைக்க முடிந்தது ராக்கெட் தொழில்நுட்பமும் ஷாஹாஜியுடையதே, பின்னாளில் திப்பு அவரின் ராக்கெட்டைத்தான் பயன்படுத்தினான் ஓனகே ஓபவ்வா போல் எத்தனையோ விடுதலை போராளிகள் நடமாடிய கன்னடத்தி, மைசூர் புலி என அழைக்கபட “ஷாஹாஜி”தான் தகுதிஉள்ளவன், பிரிதொரு நாளில் அது நடக்கும் அந்நிய ஐதரின் படைகளுக்கு எதிராக உலக்கையுடன் போராடி வீரமரணம் அடைந்த “ஓனகே ஓபவ்வா” எனும் வீரமங்கைக்கு தேசம் தன் தலைமகன் மோடியுடன் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கின்றது ஒரு நல்ல இந்துஸ்தானி பிரதமரானால், ஒரு சுத்தமான இந்தியன் பிரதமரானால் என்ன நடக்குமோ அதை தேசம் கண்டுகொண்டிருக்கின்றது, ஆம் அந்த வீரமங்கையின் பெருமையினை தேசமெங்கும் எடுத்து செல்கின்றார் மோடி அவரோடு சேர்ந்து உரக்க சொல்கின்றது தேசம் ஜெய் ஹிந்துஸ்தான்.