இந்தியாவில் ஆயிரக்கணக்கான என்.ஜி.ஓ.கள் செயல்படுகின்றன. இதில் பெருவாரியான என்.ஜி.ஓ.கள் உள்நாட்டிலேயே நிதி பெற்று தங்களது நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் பல என்.ஜி.ஓ.கள் வெளிநாட்டிலிருந்து நன்கொடை என்ற பெயரில் நிதியை பெற்று, தொண்டு காரியங்களை செய்து வருகிறார்கள். வெளிநாட்டிலிருந்து நிதி பெற்று நடத்தும் பெரும்பான்மை தொண்டு நிறுனங்கள் பெறும் நிதியானது, அவர்களின் நிர்வாக செலவினங்களுக்கு என நிதி முழுவதும் செலவழிக்கின்ற என்.ஜி.ஓ.களும் உள்ளன. சில என்.ஜி.ஓ.கள் பெறும் நிதியை நாட்டின் வளர்ச்சிக்குறிய திட்டங்களை தடுப்பதும், நாட்டின் இறையான்மைக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்பிற்கு தங்களுக்கு வரும் நிதியை மாற்றி விடுவதும் நடக்கின்றது. இம்மாதிரியான முறைகேடுகளை தடுக்க வேண்டி, தற்போதைய மோடி அரசு சில சட்ட திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறது. சட்ட திருத்தம் என்ன என்பதும், அதன் பயன் என்ன எனப்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். என்.ஜி.ஓ.களின் மோசடிகளை விளக்கினால் தான் சட்ட திருத்தத்தின் அருமை பலருக்கு புரியும்.
நடந்து முடிந்த நாடளுமன்ற கூட்டத் தொடரில் மிகவும் முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பெறும் நன்கொடை சம்பந்தமாக 2010-ல் திருத்தம் செய்யப்பட்ட சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் செய்து கொண்டு வரப்பட்ட மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வழக்கம் போல் தமிழக ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் கண்டு கொள்ளாத ஒரு நிகழ்வாகும். ஆனால் இந்திய இறையான்மைக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் இந்த திருத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர், வெளிநாட்டு நன்கொடைகளை, சில என்.ஜி.ஓ.க்கள் பயங்கரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் நிதியாக அளித்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு என்.ஜி.ஓ.க்கள் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
பல திருத்தங்கள் இருந்தாலும், இரண்டு முக்கியமான திருத்தங்களை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெறுப்படும் வெளிநாட்டு நன்கொடையில் 20 சதவீதத்திற்கு மேல் நிர்வாக செலவுகளை செய்யக் கூடாது. இரண்டாவது எந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெயரில் நன்கொடை பெறப்படுகிறதோ, அந்த நிதியானது மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ய கூடாது. இது மட்டுமில்லாமல் மேலும் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. என்.ஜி.ஓ.கள் இனிமேல் வங்கி கணக்கு என்பது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மட்டுமே வங்கி கணக்கை துவக்க வேண்டும். என்.ஜி.ஓ.பில் உள்ள நிர்வாகிகள் தங்களின் ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இதற்கு வழக்கம் போல், எதிர்கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கடும் எதிர்ப்பை காட்டியுள்ளார்கள்.
எந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெயரில் என்ன காரியத்திற்காக நன்கொடை பெறப்படுகிறதோ, அந்த நிதியானது வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாற்றம் செய்யக்கூடாது. இந்த திருத்தத்தின் காரணமாக, பல என்.ஜி.ஓக்கள் பயங்கரவாத அமைப்பிற்கும், நாட்டில் பிரிவினையை ஊக்குவிக்கும் அமைப்புகளுக்கும் நிதி வழங்கப்படுவது தடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த தொடர் போராட்டத்திற்கு நிதியானது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் கிடைக்கப் பெற்றது. டெல்லியில் நடந்த கலவரத்திற்கும், ஜாமிய இஸ்லாமியா பல்கலைகழகத்தில் நடந்த விரும்பதாகத சம்பவத்திற்கும் பின்னாலிருந்து தூண்டிவிட்டு குளிர் காய்ந்த அமைப்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் மூலம் எஸ்.டி.பி.ஐ. என்ற அரசியல் அமைப்பை உருவாக்கியவர் அபுபக்கர். இவர் முதன்மை நிர்வாகியாக இருக்கும் என்.ஜி.ஓ. வின் பெயர் ரஹிப் இந்தியா பவுன்டேஷன். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு, அரபு நாடுகளிலிருந்து ஏராளமான நிதி வருகிறது. மேற்படி நிதியின் மூலம் தான் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லீம்கள் நடத்திய தொடர் போராட்டத்திற்கு நிதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு கிடைத்தது.
ரஹிப் இந்தியா பவுன்டேஷன் என்ற பெயரில் இயங்கும் தொண்டு நிறுவனம் , பயங்கரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அமைப்பாகும். ஏன் எனில் ரஹிப் இந்திய பவுன்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவியவர் ஈ.அபுபக்கர் என்பவர். இவர் பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன், அரசியல் கட்சியான எஸ்.டி.பி.ஐ. யின் நிறுவனர். முன்னாள் சிமி அமைப்பின் கேரள மாநில தலைவர், அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர். இவ்வளவு தகுதிகள் கொண்டவரை தலைவராக கொண்டுள்ள தொண்டு நிறுவனம் தான் ரஹிப் இந்தியா பவுன்டேஷன்.
ரஹிப் இந்தியா பவுன்டேஷன் அமைப்பின் டிரஸ்டிகள் அனைவரும் முஸ்லிம்கள். 15 பேர்கள் கொண்ட டிரஸ்டில் ஒருவர் மட்டுமே இந்து, மற்ற அனைவரும் முஸ்லீம்கள் என்பது மட்டுமில்லாமல், அவர்களின் பின்னணி ஏதேனும் ஒரு பிரிவினைவாத அமைப்புடன் தொடர்பு உடையவர்கள். இந்த அமைப்பின் தலைவர் ஈ.அபுபக்கர் , துணைத் தலைவர் கான்பூர் நகரைச் சார்ந்த பேராசிரியர் முகமது சுலைமான், பொதுச் செயலாளர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சார்ந்த அட்வகேட் ஹபீஸ் ரஷீத் அகமது சௌதிரி , செயலாளர்கள் அப்சல் சந்திரகண்டி, ஜாமிய மில்யா பல்கலைகழக பேராசிரியர் ஹசீனா ஹச்யா, கேரளத்தைச் சார்ந்த ஓ.எம்.ஏ. சலீம், தமிழ்நாட்டில் இருவரில் ஒருவர் ஈரோடு பவானியை சார்ந்த அட்வகேட் கம்யூனிஸ்ட் பா.ப.மோகன், கே.எஸ்.எம். இப்ரஹிம் போன்றவர்கள் இவர்களின் பின்னணியை சற்றே ஆய்வு செய்தால், தேச ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் சில அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது நன்கு தெரியும்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெயரில் 27 வங்கி கணக்குகளும், ரஹிப் இந்தியா பவுன்டேஷன் பெயரில் 9 வங்கி கணக்குகளும் ஆய்வு உட்படுத்தப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும், ரஹிப் இந்திய பவுன்டேஷனும் இணைந்து 37 வங்கி கணக்குகளை 17 தனிப்பட்ட நபர்கள் மற்றும் வேறு அமைப்புகளின் பெயர்களில் துவக்கப்பட்டுள்ளன. இந்த 73 வங்கி கணக்குகளில் ரூ120 கோடி டெப்பாஸிட் செய்யப்பட்டு, குடியுரிமை திருத்த சட்டம் 2019 டிசம்பர் 4ந் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பின்னர், மேற்படி வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ120 கோடியும் எடுக்கப்பட்டு விட்டது. 2019 டிசம்பர் 12 முதல் 2020 ஜனவரி 6ந் தேதி வரை ரூ1.04 கோடி 15 கணக்குகளில், ரஹிப் இந்தியா பவுன்டேஷனின் ஐந்து கணக்குகளிலும் , 10 கணக்குகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெயரிலும் டெப்பாஸிட் போடப்பட்டுள்ளது . இவர்களின் மோசடிக்கு எடுத்துக் காட்டு, இதே கால கட்டத்தில் ஒரு நாளில் ரூ 2,000 முதல் ரூ5,000 வரை 90 முறை, வங்கியலிருந்து எடுக்காமல், ஏடிஎம் மூலமும், ஆன்லைன் மூலமாகவும் பணம் எடுக்கப்பட்டுள்ளது. பணம் டெப்பாஸிட் செய்த முறை கூட ரூ49,000 வரைதான் டெப்பாஸிட் போடப்பட்டுள்ளது. இது பணம் செலுத்தியவர்களின் விவரங்கள் தெரியக் கூடாது என்பதற்காக கடைபிடிக்கப்பட்ட வழிமுறையாகும். மேற்படி வங்கியிலிருந்து எடுத்த பணத்தில் தான் போராட்டகாரர்களுக்கு கொடுக்கப்பட்டது. இது தான் பொருளாதார குற்றபிரிவினர் தொடுத்துள்ள வழக்கு.
சமூக சேவகி என்ற பெயரில் உலா வரும் டீஸ்டா செடல்வாட் மற்றும் அவரது கணவர் ஜாவேத் ஆனந்த் இருவரும் இணைந்து நடத்தும் என்.ஜி.ஓ. வின் பெயர் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள், சராபங்க் டிரஸ்ட் என இரண்டு அமைப்புகளை வைத்துள்ளார். 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்தை பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட குல்பர்க் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கு வெளி நாடுகளிலிருந்து நிதி பெற்றார். இந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தியதை காட்டிலும் தனது சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். வெளிநாட்டிலிருந்து குறிப்பாக போர்ட் நிறுவனத்திடமிருந்தே பெருமளவு நிதி பெறப்பட்டது. பெறப்பட்ட நிதியான ரூ4.16 கோடியில் டீஸ்டா செடல்வாட் தனது சொந்த கணக்கில் ரூ32,09,524-ம் , தனது கணவர் ஜவாத் ஆனந்தின் கணக்கில் ரூ20,62,675-ம் , பத்திரிக்கை நிறுவனத்திற்கு ரூ1,20,14,356-ம் , தனது சுய தேவைகளுக்காக கிரிட் கார்ட்டை பயன்படுத்தி ரூ14,20,000 –ம் செலவிட்டுள்ளார். இம்மாதிரியான முறைகேடுகளை தடுப்பதற்கு தான், எந்த நிறுவனத்தில் பெயரில் வெளிநாட்டு நிதி பெறப்படுகிறதோ, அந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சட்ட திருத்தம்.
வெளிநாட்டிலிருந்து பெறப்படும் நிதியானது , நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும், பயங்வாத செயல்பாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உண்டு. உலகில் எந்த நாட்டிலும் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவுவதற்காக உலக முஸ்லீம் லீக், ரபிதா அல்-ஆலம் அல்-இஸ்லாமி, சவுதி அரோபியாவில் 1978-ல் துவக்கிய உலக இஸ்லாமிய நிவாரண அமைப்பு, அமெரிக்காவிலிருந்து செயல்படும் இஸ்லாமிய நிவாரணம், முஸ்லீம் உதவி, முஸ்லீம் கைகள், இது போல் பல தொண்டு நிறுவனங்கள் நிதியை அனுப்புகின்றன. இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை என்ற பெயரில் உருவான என்.ஜி.ஓ.விற்கு மேற்படி தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி அனுப்புகின்றன. மேற்படி நிதியை பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு வழங்குவதற்கு பதிலாக, நாட்டின் இறையான்மைக்கும், பாதுகாப்பிற்கும் ஊறுவிளைவிக்க கூடிய பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திருப்பி அனுப்பபப்படுகிறது.
மேற்படி நிறுவனங்களின் அறிக்கையின் படி, 2,80,000 டாலர் நிதியானது காஷ்மீரில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு வழங்குவதற்கு பதிலாக, ஹிஸ்புல் முஜாஹி தீன் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு நிதி மாற்றம் செய்யப்பட்டது. இதை போலவே ரூ600 கோடி நிதியை லஷ்கர்-இ-தொய்பா, சிமி, இந்திய முஜாஹிதீன் போன்ற அமைப்புகளுக்கு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நிதி மாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்தியாவில் உள்ள மதரஸாக்களை நவீனப்படுத்த, என்.ஜி.ஓ.கள் மூலம் நிதி கிடைக்கிறது. மேற்படி நிதியை பயன்படுத்தி பயங்கரவாதிகளின் புகலிடமாகவும், ஆயுதங்களை பதுக்கி வைக்கும் இடமாகவும் மதரஸாக்களை மாற்றி வருகின்றர்.
நிதி மாற்றம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுவதிலும் என்.ஜி.ஓ.கள் செயல்படுகின்றன. இஸ்லாமியர்களை போலவே, கிறிஸ்துவ பாதிரியார்களும், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியை தவறான வழிக்கு பயன்படுத்துகிறார்கள். கூடங்குளம் அனு உலைக்கு எதிரான போராட்டத்தில், Tuticorin Diocesan Association, East Coast Research and Development Trust, Greenpeace India Society போன்ற என்.ஜி.ஓ. அமைப்புகள் போராடின. இவர்களுக்கு நிதியானது கனடா, ஜெர்மனி, சுவிடன் போன்ற நாடுகளிலிருந்து நன்கொடை என்ற பெயரில் அனுப்பப்பட்டது. கூடங்குளத்தில் நடந்தது போலவே, தூத்துக்குடியில் ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களை நடத்தியதும் இந்த என்.ஜி.ஓ.கள் தான். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது, மேற்படி என்.ஜி.ஓ.கள் மீது வழக்கு தொடுத்தற்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, இவர்களுக்கு வந்த நிதியை மாற்று வழிக்கு பயன்படுத்தினார்கள் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தியாவில் நிலக்கரி எரிமின் உற்பத்தி நிலையம் அமைப்பதையும், நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே, கீரின் பீஸ் என்ற என்.ஜி.ஓ. நிலக்கரி நெட்ஒர்க் என்ற அமைப்பின் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் ஒருங்கிணைந்து போராட்டங்களை நடத்த உதவி புரிந்தது. வெளிநாடுகளிலிருந்து கடந்த 7 வருடங்களில் கீரின் பீஸ் அமைப்பிற்கு வந்த நிதி 450 மில்லியன். மேற்படி நிதியிலிருந்து பணம் பெற்றவர்கள் கூடங்குளம் உதயகுமார் உள்ளிட்டவர்கள்.
தென் பகுதியிலும் குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கிறிஸ்துவ சுவிசேஷ அமைப்பு என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நிதியானது, அப்பாவி இந்துக்களை முளைச் சலவை செய்து மத மாற்றம் செய்வது மட்டுமே பணியாக செய்து வருகிறார்கள். சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் என்ற அமைப்பு உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில், பழங்குடியினருக்கான நற்செய்தி சமூக சேவை மையம் என்ற அமைப்பு சமுதாயத்தில் உள்ள கீழ்தட்டு மக்களுக்கு கல்வி மற்றம் சமுதாய உதவிகளை செய்வதாக கூறி, வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் கோடிக்கணக்கான நிதியை , கோழிப் பண்ணை அமைத்தல், புதிதாக தேவாலயங்கள் கட்டுதல், மதபோதகர்களுக்க பயிற்சி அளித்தல், வியாபர நிறுவனங்களில் முதலீடு செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
மத மாற்றத்திற்கு என அந்நிய மிஷனரிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. மேற்படி மிஷனரிகளுக்கு நிதியானது அமெரிக்கா, ஜெர்மனி, சுவிடன், போன்ற நாடுகளிலிருந்து வருகிறது. மேற்படி நிதியானது இந்தியாவில் உள்ள என்.ஜி.ஓ.கள் மூலமே வருகிறது. வேர்ல்ட் விஷன், காஸ்பல் ஃபார் ஆசியா, Evangelical Fellowship of India, என்ற அமைப்பின் துணை அமைப்புகளே Christian Legal Association , Aspire Prakashan Pvt.Ltd. போன்ற அமைப்புகளும். Harmony And Democracy என்.ஜி.ஒ.விற்கு நிதி வழங்கும் அமைப்புகள் இங்கிலாந்து நாட்டில் உள்ள Christian Aid (UK), Action Aid (UK) Oxfam (UK) அமெரிக்காவில் உள்ள American-Jewish World Service (USA) மூலமாக பெருமளவில் நிதி வழங்குகின்றன. இந்த நிதியானது மத மாற்றத்திற்கு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. 2015 -2016-ல் மத மாற்றத்திற்காகவே வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் உள்ள என்.ஜி.ஓக்களுக்கு கிடைத்த நிதி ரூ17,208 கோடியாகும். வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களான மேகாலயா, மனிப்பூர், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் கிறிஸ்துவர்களின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு மத மாற்றமே முக்கியமான காரணமாகும். வெளிநாடுகளிலிருந்து நிதியை பெறும் இந்த என்.ஜி.ஓக்களின் செயல்பாடு மத மாற்றமே முக்கியமான பணியாக செய்கிறார்கள்.
நேஷனல் பவுன்டேஷன் பார் இந்தியா என்ற அமைப்பினர் வறுமை ஒழிப்பு என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து பெற்ற நிதியை 170 என்.ஜி.ஓ.களுக்கு நிதி மாற்றம் செய்துள்ளார்கள். நேஷனல் பவுன்டேஷன் பார் இந்தியா தனது வங்கி கணக்கில் ரூ35.77 கோடி வைப்பு நிதியாக வைத்துள்ளது. இத்துடன் 2019-2020க்கான நிதியானது ரூ8.4 கோடி வரத்தையும் வைப்பு நிதியில் வைத்துள்ளார்கள். 2016-ல் வெளிநாட்டு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மற்றும் அவரது கணவர் ஆனந்த் குரோவர் நடத்திய வக்கீல்கள் கூட்டு (Lawers Collective ) என்ற என்.ஜி.ஓ. மீது வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு 2016-ல் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட நிதியில் , அரசியல் காரணங்களுக்காக செலவிட்டப்பட்டது, பெரும் பகுதி விமான பயணம், நிர்வாக செலவு என குறிப்பிட்டு இருவரும் தனியாக தங்களின் கணக்குகளுக்கு நிதி மாற்றம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
நிர்வாக செலவினங்கள் – 2018 -2019 –ம் நிதியாண்டுக்கான கணக்குகளை சமர்பித்த சில என்.ஜி.ஓ.கள் நிர்வாக செலவு செய்த விவரங்களை பார்த்தால் நன்கு புரியும். டெல்லியில் உள்ள முனீர் சேஷியல் வெல்ஃபேர் சொசைட்டி என்ற என்.ஜி.ஓ. பெறப்பட்ட நிதி ரூ36,18,910 என்றும், அதன் நிர்வாக செலவு ரூ 8,13,46,513 என குறிப்பிட்டுள்ளார்கள். சுமார் 2248 சதவீதம் நிர்வாக செலவு செய்யப்பட்டுள்ளது. ஆக்சன் ஏய்டு அசோசியேஷன் டெல்லி ரூ49,17,13,969 என கூறி தொண்டு காரியங்களுக்கு பெறப்பட்ட நிதியில் , நிர்வாக செலவு மட்டும் ரூ 20,34,79,950 செய்துள்ளது. இம் மாதிரியான முறைகேடுகளை தவிர்க்கவே இச் சட்ட திருத்தம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சி.டி.ஹெச். இன்டர்நேஷனல் பவுன்டேஷன் இந்தியா நிர்வாக செலவு ரூ16,53,292 என்றும் வந்த நன்கொடை ரூ41,57,661 என்றும் சுமார் 40 சதவீதம் நிர்வாகத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. இம்மாதிரியான முறைகேடுகளை தவிர்க்கவே சட்ட திருத்தம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்திலும் தொடங்கப்பட்டுள்ள என்.ஜி.ஓ.களில் சில பெற்ற நன்கொடைக்கு மேல் நிர்வாக செலவு செய்துள்ளார்கள். தி.மு.க.விற்கு ஆதரவாக இந்துக்களை அசிங்கப்படுத்தும் எஸ்றா சற்குணம் துவக்கிய இந்திய சுவிசேஷ தேவாலயம் (Evangelical Church of India ) என்ற என்.ஜி.ஓ. தனது 2018-2019-ம் வருட கணக்கில் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட நிதி ரூ1,22,88,622 என குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் மேற் ஆண்டில் இவர்கள் நிர்வாக செலவினம் என கணக்கு காட்டியுள்ள தொகை ரூ 20,01,65,336 என தெரிவித்துள்ளார்கள். சுமார் ரூ19 கோடி நிர்வாக செலவு எவ்வாறு நடைபெற்றது என்பது தான் இவர்களின் மோடிக்கு எடுத்துக்காட்டாகும். மேற்படி ரூ19 கோடி மத மாற்றம், அரசியல் காரணங்களுக்காகவும் செலவு செய்யப்பட்டுள்ளது. கல்விக்காகவும், சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாற்காகவும் என கூறி வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட நிதி முழுவதும் நிர்வாக செலவு செய்யப்பட்டதாக கணக்கு காட்டியுள்ள என்.ஜி.ஓ. அசோசியேஷன் பஃர் ரூரல் டெவல்மெண்ட் இதன் நிர்வாக இயக்குநர் கே. ஜேஸப் வின்சென்ட், வெளிநாடுகளிலிருந்து பெற்ற நிதி ரூ 98,17,357 என்றும் இதில் நிர்வாக செலவு ரூ 98,02,215 என குறிப்பிட்டுள்ளது.
இம்மாதிரியாக என்.ஜி.ஓ.கள் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நிதியில் 100 சதவீதத்திற்கு மேலாகவும் நிர்வாக செலவு செய்துள்ளார்கள். நன்கொடையை விட அதிக அளவில் நிர்வாக செலவிற்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது என்பதை ஆய்வு செய்தால், என்.ஜி.ஓ. பெயரில் நடக்கும் தில்லு முல்லுகள் வெளிச்சத்திற்கு வரும். இந்த மோசடிகளை தடுக்கவே மத்திய அரசு பெறப்படும் நன்கொடையில் 20 சதவீதத்திற்கு மேல் நிர்வாக செலவு செய்ய கூடாது என சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.
ஈரோடு சரவணன்