க்யூ.எஸ்., எனப்படும், குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 2025ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 104 நாடுகளை சேர்ந்த 1,500க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
தரவரிசைப்பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 46 உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. சிறந்த உயா்கல்வி நிறுவனங்கள் அதிகம் கொண்ட 3வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் 118வது தரவரிசையுடன் மும்பை ஐ.ஐ.டி., முன்னிலை வகித்துள்ளது.முந்தைய ஆண்டில் 285ம் இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி., இந்த முறை 227வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேபோல், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 427வது இடத்திலிருந்து 383ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. டில்லி பல்கலை., 407வது இடத்தில் இருந்து 328ம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.