வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் ஹிந்துக் கோயில்கள் சேதப்படுத்தப்படுவது குறித்தும் வங்கதேச அதிபர் யூனுசிடம் பாரதத்தின் கவலையைத் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு அகற்றப்பட்டதுமுதல் சிறுபான்மை மக்கள் குறிப்பாக ஹிந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். கோயில்கள் இடிக்கப்படுகின்றன; தீக்கிரையாக்கப்படுகின்றன; ஹிந்துகளின் வீடுகள், வணிக நிறுவனங்கள் சூறையாடப் படுகின்றன. பெண்கள் பலவிதக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.
ஷாஜஹானின் காலத்தில் நடந்த கோயில் இடிப்புகள் பாதுஷா நாமாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்பரின் இறுதிக் காலத்தில் தன் ஆளுகைக்கு உட்பட்ட எல்லையில் புதிதாக கட்டப்பட்டு வந்த 76 கோயில்களையும் இடித்துத் தரை மட்டமாக்க உத்தரவிட்டார்.
உருவ வழிபாட்டை முற்றிலும் வெறுத்த ஒளரங்கசீப் குறித்து, ‘மாஅதிர் இ அலாம் கிரி’ நூலை எழுதிய ஆசிரியர், கி.பி.1669- ஏப்ரலில் முல்தான், பனாரஸ் ஆகிய பிராந்தியங்களில் இருந்த பிராமணர்களைக் கொல்லவும், அவர்களது கல்வி நிலையங்களையும் கோயில்களையும் இடிக்க உத்தரவிட்டார். காசி விஸ்வநாதர் ஆலயம் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டது. மதுராவும் இப்படியே செய்யப்பட்டது.
இப்படி முகமது கஜினி படையெடுத்து வந்த காலத்திலிருந்து அகமது ஷா அப்தாலி காலம் வரையிலான 762 ஆண்டுகளில் இதுவே பாரதத்தில் ஹிந்துக்களின் நிலையாக இருந்தது. மத மோதல் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். அதற்காக வேறு எந்தவொரு பெரிய சிரமத்தையும் தாங்கிக் கொள்ளலாம். மக்களை இடம் பெயர்ப்பதுதான் மத ரீதியான அமைதிக்கு ஒரே நிரந்தரத்தீர்வு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
எத்தனை பேரை இடம் பெயரச் செய்ய வேண்டும் என்பது ஒரு பொருட்டே இல்லை. ஏனெனில், மத அமைதி தேவையென்றால் சில சிரமங்களை தாங்கித்தான் ஆகவேண்டும். சில தடைகளை அப்புறப்படுத்த வேண்டும்
டாக்டர் பாபாசாகேப் பி.ஆர்.அம்பத்கர் நாட்டுப் பிரிவினைக் கொள்கையை புள்ளி விவரங்களோடும், சம்பவங்களோடும் 1940- டிசம்பர் 28ல் எழுதிய பல நூறு பக்கங்கள் அடங்கிய தனது நூலில் தீர்க்க தரிசனத்துடன் பதிவு செய்துள்ளார். ஹிந்துக்களுக்கான நாடு, முஸ்லிம்களுக்கான நாடு சமநிலை. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சிறுபான்மை ஹிந்துக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லிமாளாது. அந்தநாடுகளில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் ஹிந்துக்களைத் தாக்குகிறார்கள்; அச்சுறுத்தி மதம் மாற்றுகிறார்கள்; விரட்டி அடிக்கிறார்கள்.
பாரதத்தில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பில்லை என்று மனசாட்சியே இல்லாமல் அப்பாவி இஸ்லாமிய சகோதரர் களின் மனதில் துவேஷத்தை விதைப்பவர்கள், இஸ்லாமிய நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மை ஹிந்துக்களுக்காக கண்ணீர் வடிக்க வேண்டாம். அவர்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்பக்கூடத் தயாராக இல்லையே ஏன்? அதனால்தான் ‘ஹிந்துத்துவ’ கோஷம் இங்கே வலுக்கிறது.
‘இங்கே பாபர் மசூதி இடிக்கப்பட்டால் அங்கே வலிக்கும் என்றால், அங்கே கோயில்கள் இடிக்கப்பட்டால் இங்கேயும் வலிக்காதா? பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னதுதான் சரியோ?
(தினமணியில் டி.எஸ். தியாகராஜன் கட்டுரையிலிருந்து)