இலங்கை புதிய அதிபரின் இந்திய விஜயம்

இலங்கையின்  புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே தனது   முதல் அரசுமுறை சுற்றுப்பயணமாக  இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் .   அவரின் வருகையை வரவேற்ற இந்திய வெளியுறவுத்துறை பல்வேறு பிரச்சனைகளில் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளது . கடந்தமாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை மக்களால் தேர்தெடுக்கப்பட்ட கோத்தபாய பெரும்பான்மை மக்களான சிங்களவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றியை எட்டியுள்ளார் . சிறுபான்மை தமிழர்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் இந்திய வம்சாவளி ,மலையக தமிழர்களின் வாக்குகள்  எல்லாம் 80% மேலாக அவருக்கு  எதிரணிக்கு கிடைத்துள்ளது . ஒட்டுமொத்தமாக சிறுபான்மை தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நபராகவே அவர்  இருக்கிறார் .காரணம் அவரது சகோதரரான முந்தய மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் தமிழர்களின் மீதான அடக்குமுறை மற்றும்  விடுதலைப்புலிகளுடனான  இறுதிக்கட்ட சண்டையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களின் உறவுகள் அவ்வளவு சீக்கிரமாக புதிய ஆதிபரை கோத்தபயவை நம்புவதற்கு தயாராக இல்லை என்பதுதான் உண்மை .

   இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட   போரில் இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டது . போர் குற்றங்களில் ஈடுபட்ட ராணுவத்தினருக்கு விசாரணை அடிப்படியில் தண்டனை வழங்க வேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதுவும் முக்கிய காரணம்  மேலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருப்பதும்  இதுவரை அவர்களெல்லாம்   கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுவும் நேரடிகாரணங்களாக இருக்கிறது மேலும் இலங்கை ராணுவம்    போரில் ஈடுபட்டபோது தற்போது அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சேதான் ராணுவத்தின் ஆலோசகராக இருந்தார் என்பதுவும் இங்கு கவனிக்கப்படவேண்டியுள்ளது  இப்படி  உள்ளூர் தமிழர்களின்  ஆதரவு இன்றி பெரும்பான்மையான சிங்களவர்களின் ஆதரவோடு வென்றிருந்தாலும் தேர்தலின் பொது கொடுக்கப்பட்ட வாக்குறுதியில் தமிழர்களுக்கு ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திருப்பியளிக்கப்படும் . போரின்போது காணாமல்  போன இளைஞர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் மலையக தமிழர்களுக்கு  வீடுகள் கட்டித்தரப்படும் போன்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தது . இவரின் வருகை வம்சாவளி தமிழர்களுக்கு எதாவது எதாவது நன்மையை தருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

    பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் பேசிய கோத்தபய ராஜபக்சே இலங்கையில் சீன நிதியுதவியுடன் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளா கம்பன்தோட்டா துறைமுகத்தின் 99வருடகால பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்தார் .இந்த அறிவிப்பு இந்தியாவிற்கு மட்டுமல்ல அமெரிக்காவிற்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும்  அளித்துள்ளது . மேலும் ஏற்கனவே எல்லைதாண்டி மீன்பிடித்தபோது கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடிப்படகுகளை விடுவிக்கப்படும் என்ற அறிவிப்பும்தமிழக  மீனவர்கள் மத்தியில் வரவேற்பை பெறுகிறது . இந்தியாவின் சார்பில் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒடுக்க 359 கோடி நிதியுதவியும் இலங்கையின் வளர்ச்சி கட்டமைப்பு ,உள்நாட்டு மேம்பட்டு பணிகளுக்காக 2872 கோடியும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இலங்கையில் இறுதிக்கட்ட போரிலும் பெருமழை வெள்ளத்திலும் வீடுகளை இழந்துள்ள தமிழர்களுக்கு ஏற்கனவே 42000 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது மேலும் புதிதாக இந்த ஆண்டு 14000 வீடுகள்  கட்டித்தரப்படும் என்று அறிவித்துள்ளது

ஏற்கனவே விடுதலைப்புலிகளின் பயங்கரவாத பிரச்சனைகளில் இருந்து விடுபட்ட இலங்கைசற்று நிம்மதி அடைந்திருந்தது .இந்நிலையில்  சென்ற வருடம் ஈஸ்டர் தினத்தன்று சர்ச்சுகளில் நடத்தப்பட்ட வெடிகுண்டு  தாக்குதலுக்கு பிறகு சவுதிஅரேபியாவால் இறக்குமதி செய்யப்படும் வகாபி பயங்கரவாதம் இலங்கையை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது . பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில் இருந்தவர்கள் இலங்கையின் முக்கிய தொழில் அதிபர்களின் வீட்டு வாரிசுகள் .படித்த பண்புள்ள நல்ல வசதியான வீட்டிலிருந்து இந்தமாதிரியான பயங்கரவாத மூளைச்சலவை செய்யப்பட்ட நபர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றால், அப்பாவி சாதாரணமான மக்கள் வாழும் இலங்கையின் எதிர்காலம் என்னாவது என்றகேள்வி   எழுகிறது . ஏற்கனவேஇஸ்லாமிய பயங்கரவாத பிரச்சனையில் நல்ல அனுபவம் உள்ள இந்தியாவால் இந்த விஷயத்தில் நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும் . ஒரே தேச கொள்கையில் இந்தியாவை போன்று நம்பிக்கை கொண்டுள்ள இலங்கைக்கு பிரிவினை , தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை எப்படி கையாளுவது என்ற செயல்முறையில்  வழிகாட்டமுடியும் அதனாலேயே இலங்கையின் அதிபராக பொறுப்பேற்ற கோத்தபாய தனது முதல் வெளிநாட்டு பயணத்தை இந்தியாவிற்கு  வைத்துக்கொண்டார் .

         சீனாவின் கனவு திட்டமான முத்துமாலை திட்டத்தின் மூலமாக இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதன்  விளைவாக சீனாவின் வால் ஓட்ட நறுக்கப்பட்டுள்ளது . மாலத்தீவில்  கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் அங்கிருந்தும் சீனாவின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டது . தற்போது இலங்கையிலும் துறைமுக ஒப்பந்தம் ரத்து மூலம் இலங்கையின் உண்மையான நண்பனாக இந்தியா மட்டுமே இருக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது . சீனாவின் முத்துமாலை திட்டத்திற்கு எதிராக இந்தியா தென்சீனக்கடலில் சீனாவுக்கு எதிராக உள்ள கம்போடியா ,லாவோஸ் ,தாய்லாந்து ,மங்கோலிய, ஜப்பான் நாடுகளோடு நெருக்கம் காட்டியது . ஜப்பானோடு  இருநாடுகளின்  ராணுவ கூட்டு போர் பயிற்சி ,மற்றும் புல்லட் ரயில் ஒப்பந்தம் , கம்போடிய நாடுகளோடு எண்ணெய் துரப்பன பணிகளுக்கான ஒப்பந்தம் வியட்னாமோடு கப்பல் படைத்தளம், ராணுவ தளம் அமைக்கும் ஒப்பந்தம் என்று சீனாவிற்கு செக் வைக்கும் அத்தனை முயற்சிகளையும் செய்துவந்தது  இந்தியா .இவை அனைத்தும் சீனாவின் எச்சரிக்கைகளை மீறியே ஏற்படுத்தப்பட்டுள்ளது . சீனா பாகிஸ்தானோடு கராச்சி துறைமுகத்தை மேம்படுத்த போட்ட ஒப்பந்தத்தை முறியடிக்க  ஈரானோடு  சப்கார் துறைமுக மேம்பாபட்டு ஒப்பந்தத்தை போட்டது. மொரிசியஸ் நாட்டுடனும் பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படி இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் அத்தனை நயவஞ்சக திட்டங்களுக்கும் சரியான பதிலடியை இந்தியா ஏற்படுத்தியுள்ளது எதிரிகளை கெஞ்சிக்கொண்டிருந்த  முந்தய காலம் போய்  எதிரியை அவர்களது பாணியிலேயே சென்று முறியடிக்கும் தாக்குதல் யுக்தியை புதிய ஆட்சியாளர்களின் உறுதியான நடவடிக்கைகளால்  சாத்தியமாகியுள்ளது.

 சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியின் போது விடுதலைப்புலிகளின் மீதான வெறுப்பால் அப்பவித்தமிழ் மக்களை இறுதிப்போரில் பலிகொடுத்த நிலை இல்லாமல் தற்போது மோடி தலைமையிலான பா ஜ க  அரசு இலங்கை மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி முன்னேற்றம் போன்றவற்றில் அக்கறை கட்டுவது தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் கை மேலோங்கியுள்ளதை உறுதி செய்கிறது . மேலும் தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின்  பேரில் காக்கை குருவிகளை சுடுவது போல் சுட்டுக்கொன்ற காலம் போய் மீனவர்களை எல்லைதாண்டும்போது கைது செய்யப்படுவதோடு விசாரனைக்குப்பின்னர் பத்திரமாக விடுவிக்கப்படுகிறார்கள் . இவையெல்லாம் புதிய ஆட்சியின் விளைவுகள் . முந்தய மகிந்த ராஜபக்சே   ஆட்சியின் போது இந்தியாவுக்கு மதிப்பளிக்காது சீனாவிற்கு முக்கியத்துவமளித்தன் விளைவாக பின்னர் நடைபெற்ற தேர்தலில்  எதிராக மைத்திரிஸ்ரீபால என்ற அவரது மந்திரி மூலமாகவே தேர்தலில்அவரை  தோற்கடித்தது நினைவிருக்கலாம் . அந்த பாடம் இன்று அவர்களை நிதானமாக அடியெடுத்து அனைவருக்குமான ஆட்சியை ஏற்படுத்த தூண்டியிருக்கிறது . எது எப்படியோ இந்தியாவின் புண்ணியத்தில் இலங்கையில் வம்சாவளிதமிழர்களின் வாழ்வில் நல்லது ஏற்பட்டால் அனைவரும் மகிழலாம் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *