இயற்கை சாகுபடிக்கு மானியம்

மத்திய அரசின் வேளாண் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் காய்கறி, கீரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1000 முதல் 1500 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. அதிக பட்சமாக ஐந்து ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். இயற்கைப் பண்ணை சான்றிதழ் நகலுடன் வட்டார தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.tn.hortinet.com என்ற இணையதள முகவரியை அணுகவும். இதனால் விவசாயிகள் சந்தைப்படுத்துவதற்கு அங்கீகாரமும், அதிக லாபமும் பெறமுடியும்.