இனி வரும் நிதியாண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும்

நிச்சயமற்ற உலகளாவிய நிலைமை, அதிகரித்து வரும் பாதுகாப்பு வாதம் ஆகியவற்றுக்கு மத்தியில், நாட்டின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 330 — 340 பில்லியன் டாலர் அதாவது, 23.43 — 24.14 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை தொடும் என, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பான, எப்.ஐ.இ.ஓ., தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், நவம்பர் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2 சதவீதம் அளவுக்கு குறைந்து, 212 பில்லியன் டாலராக உள்ளது. அதாவது, இந்திய மதிப்பில், 15.05 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

 

 

Related image