தமிழகத்தில் ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 25000 க்கும் பெரிய ஆலயங்களும் 20000 க்கும் மேற்பட்ட சிறிய ஆலயங்களும் உள்ளன. இவைகளில் பெரிய ஆலயங்கள் எல்லாம் மன்னர் காலத்தில் கட்டப்பட்டவை 1000 வருடங்கள் 800 வருடங்கள் என்று காலத்தால் முந்தியவை . ஆலயங்களை பாதுகாத்து நிர்வகித்துவந்த பரம்பரை தர்மகர்த்தாக்களிடம் இருந்து ஆலயத்தை நிர்வகிப்பது என்பதனை சொல்லி தருகிறேன் அதன் பின்பு நீங்கள் தொடர்ந்து நிர்வாகத்தினை செய்யலாம் என்று பொய் சொல்லி நிர்வாகத்தை எடுத்து துக்கொண்ட அறநிலையத்துறை அதனை தனது மேற்பார்வையில் பல்லாண்டு காலமாக நடத்தி வருகிறது.
1858-ல் இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு நேரடியாக சென்றது. தங்கள் மீது இந்திய மக்களுக்கு இருந்த வெறுப்பை குறைக்கவும், நம்பிக்கையை வளர்க்கவுமான தேவை அப்போதைய பிரிட்டிஷ் அரசுக்கு இருந்தது. இதனால், ‘மத விவகாரங்களில் பிரிட்டீஷ் அரசு தலையிடாது’என்ற வாக்குறுதியை அளித்தது. இதனால் ஏற்கெனவே கோயில்களும், அவற்றின் சொத்துகளும் யார் வசம் இருந்தனவோ, அவர்கள் தங்கு தடையின்றி அவற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள்.1920-ல் பனகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்து திருக்கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்தார். இதற்காக 1922-ல் இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்தார். 1925-ல் இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போதைய வைஸ்ராய் இர்வினிடம் எடுத்துச் சொல்லி இந்த சட்டத்துக்கான ஒப்புதலைப் பெற்றார். இறுதியில் 1927-ல் ‘இந்து சமய அறநிலைய வாரியம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன்படி திருக்கோயில்களின் நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் வாரியத்திடம் வழங்கப்பட்டது. அதைப்போலவே நிர்வாகம் சரிவர நடைபெறாத கோயிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரமும் வாரியத்துக்கு வழங்கப்பட்டது
இந்து சமயம் மற்றும் அறநிறுவனங்களை வாரியத்திற்கு பதிலாக அரசே நிருவகிக்கலாம் என்ற சிறப்பு அலுவலரின் பரிந்துரையில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் வாரியத்தினை ஒரு அரசு நிர்வாகமாக மாற்றி அமைத்தால் பயனுள்ளதாகும் என ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 1942-ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட அலுவல் சாரா குழு பரிந்துரை செய்தது. இதனை ஏற்று இந்து சமய அறக்கொடைகள் சட்டம் 1951 இயற்றப்பட்டு பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்து சமய அறநிறுவனங்களின் நிர்வாகத்தினை அரசு ஏற்றது. இந்த சட்டத்தில் விரிவான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய அறக்கொடைகள் சட்டம், 22, ஜனவரி 1960, 1-ஆம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன்படி, இந்து சமய திருக்கோயில்களை நிர்வகிப்பதற்கான தனியான அரசுத்துறை ஒன்று உருவாக்கப்பட்டது. என்கிறது இந்து சமய அறநிலைத்துறையின் வெப் சைட்
இந்து சமய அறநிலையத்துறையின் சட்டப்படி தனது நிர்வாகத்தின் கீழ் எடுத்து கொள்ளும் ஆலயங்களின் நிர்வாகத்தினை சீர்செய்து ஓரிரு ஆண்டுகளில் யாரிடம் இருந்து பெற்றார்களோ அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை அனால் ஒண்டவந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டுவது போல் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தன்னிடத்தில் வைத்து கொண்டு பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை கொண்டு கோயிலை நிர்வகிக்காமல் தந்து கஷ்டம் தீர ஆலயத்துக்கு வரும் பக்தனிடம் கடவுளை கட்சி பொருளாக்கி தரிசனத்துக்கு கட்டணம் என்று அறிவித்து வசூலிக்கும் வேலையே வருகிறது இதில்லாமல் ஆளும் கட்சிகளின் எடுபிடிகளாக மாறி கோயில் நிலங்களையும் வருவாய் தரும் சொத்துக்களையும் தங்களது பினாமிகளுக்கு பல்லாண்டு குத்தகையோ அல்லது சொத்தினை மடைமாற்றி விற்பனைக்கோ வழங்குவதில் தாராளம் கட்டி வருகின்றனர்
பல கோயில்களில் விளக்கோ வழிபாடோ இன்றி கோயில்கள் எல்லாம் பாழடைந்து பராமரிப்பின்றி அழிவின் பிடியில் உள்ளது அனால் அதனை நிர்வகிக்கும் நிர்வாக அதிகரிக்கோ ஆயிரக்கணக்கில் சம்பளமாக கோயில் வருவாயை எடுத்து வழங்கி வருகிறது கோயில் நிர்வாகத்தை சொல்லிக்கொடுப்பதாக உள்ளே வந்த இந்த ஊதாரிகள் கோயிலில் எப்படி பூஜை செய்ய வேண்டும், எப்படி யார்யாருக்கு மரியாதையை செய்ய வேண்டும் புஜைகளில் என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும் என்றெல்லாம் அன்றாட பூஜா விதிமுறைகளில் ஆகம விதிமுறைகளில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள் உண்மையில் அறநிலையத்துறை வழிகாட்டுதலின் படி ஆகம விதிகளிலோ அல்லது அன்றாட பூஜை முறைகளிலோ இவர்களுக்கு தலையிட உரிமை இல்லை . ஆலயங்களுக்கென்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பூஜாரிகளுக்கு கொடுக்கும் சம்பளமோ மிக குறைவு எந்த வருமானமும் இல்லை குறைந்த சம்பளத்தில் கோவிலில் பூஜையே செய்துவரும் இவர்களிடம் தட்டுக்காசில் பங்கு கேட்கும் அவலமும் நடக்கிறது.
நிர்வகிக்கும் கோயில்களின் சொத்துக்களை ஆவணங்களாய் , உற்சவர் சிலைகளை பாதுகாக்காமல் அதனை தொலைத்தல் திருட்டு போகுதல் பின்னர் அதனை மறைத்தல் என்று பல்வேறு முறைகேடுகளும் கோயில் சொத்தை யாருக்காவது தனிநபரின் பேரில் பட்டா வழங்குவதை தட்டி கேட்காமல் இருக்க கையூட்டு பெறுவது என்று முறைகேடுகளே அதிகம் . குத்தகை கொடுத்த நிலங்கள் வீட்டுமனைகள் ஆகியசொத்துக்களில் இருந்து வரி வசூலிப்பு வாடகை நிர்ணயம் போன்றவற்றில் நியாயமாக நடந்து கொள்ளாமல் பல்வேறு முறைகேடுகளின் மொத்த வடிவமாக இந்து அறநிலையத்துறை விளங்குகிறது. தனது குத்தகை உரிமையை நீடிக்க கோயில் அலுவலகத்துக்கு வரும் குத்தகைதாரனிடம் இந்த நிலம் கோயிலுக்கு சொந்தமானது அதனை கோயில் எப்போது திருப்பி கேட்கிறதோ அப்போது திருப்பித்தர சம்மதிக்கிறேன் என்று எழுதிவங்கும் அவலமும் நிலவுகிறது கோயில் சொத்துக்கள் சம்பந்தமாக எந்த விதமான ஆவணங்களும் தங்கள் கையில் இல்லாமல் இருப்பதே இந்த நிலைக்கு காரணம் இதனை புரிந்து கொண்ட அரசியல் கட்சிகள் ஆக்கிரமிப்பாளர்கள் சொத்துக்களை தங்களின் பெயரில் பட்டா போட்டு கொண்டுள்ளனர் . திருவான்மியூர் மருந்தீஸ்ஸ்வரர் கோயில் நிலங்களே இதற்கு உதாரணம். திருவான்மியூர் முழுவதுமே கோயில் நிலங்கள்தான் என்பது அரசு ஆவணங்கள் காட்டும் உண்மை. இன்று அங்கு பல தனியார் நிலங்கள் இருக்கின்றன என்றால் அறநிலையத்துறையின் நிர்வாக லட்சணம் எப்படி உள்ளது என்பது புரியும்.
சென்றவாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்தெந்த கோயில்கள் சிதிலமடைந்து புனரமைப்பு பணிகள் செய்யப்பட உள்ளது என்ற பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது அதற்கு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கொடுத்த அறிக்கையில் 127 கோயில்கள் சிதிலமடைந்து வழிபாட்டுக்கு உகந்ததாக இல்லை என்று அறிக்கை கொடுத்து இருந்தார் . அந்த அறிக்கைக்கு பதிலளித்த ஹிந்து அறநிலையத்துறை கொடுத்துள்ள அறிக்கையில் 127 கோயில்கள் சிதிலமடைந்து உள்ளது. அதில் 90 கோயில்களில் புனரமைப்பு நடைபெறுகிறது. 13 கோயில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை . 8 கோயில்கள் எங்கிருக்கின்றன என்பதே தெரியவில்லை என்றும் அறிக்கை அளித்துள்ளது.இவர்களின் அற்புதமான நிர்வாகத்திற்கும் சிலை திருட்டு சம்பவங்களும் அது குறித்த ஆவணங்களோ புகார்களோ இல்லாதது இவர்களின் நிர்வாக திறமைக்கு உதாரணம்..
டெல்லி உச்சநீதிமன்றத்தில் அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்று சுவாமி தயானந்த சரஸ்வதியும் டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் தொடுத்துள்ள வழக்கின் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வரும்போது இந்த அவலட்சண அறநிலையத்துறை ஒழிந்து ஹிந்து தர்மம் காக்கும் அரண்களாக இருக்கும் கோயில்கள் புத்தாக்கம் பெரும் .அந்த நன்னாளை எதிர்நோக்கி காத்திருப்போம்