கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்திய கடற்படையும், ரஷ்ய கடற்படையும் இணைந்து ஆண்டு தோறும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு முன் கடைசியாக 2018-ம் ஆண்டு விசாகப்பட்டினம் கடல் பகுதியில் கூட்டுப்பயிற்சி நடத்தின.இந்திய-ரஷ்ய கடற்படைகளின் 11-வது கூட்டுப்பயிற்சி வங்காள விரிகுடா கடல் பகுதியில் நேற்று தொடங்கியது. கூட்டுப்பயிற்சி தொடங்கிய தகவலை இந்திய கடற்படையின் மக்கள் தொடர்பு அதிகாரி கமாண்டர் விவேக் மத்வால் தெரிவித்தார்.
இந்திரா நேவி-2020′ என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சியில் ஏவுகணை அழிப்பு கப்பல் ரன்விஜய், சக்தி உள்ளிட்ட போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் கலந்துகொள்கின்றன. ரஷ்ய தரப்பில் அட்மிரல் வினோக்ராதோவ், அட்மிரல் டிரிபட்ஸ், போரிஸ் புடோமா போர்க்கப்பல்கள் பங்கேற்று உள்ளன.