இந்தியாவை கூறு போட முயலும் செயலுக்கு அனுமதி தர முடியாது

மேலே உள்ள வாசகம்,  சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு. என்.ஆனந்த் வெங்கடேஷ் , ஒரு வழக்கில் தீர்ப்பு கொடுத்த போது உதிர்த்த முத்துக்கள்.  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நாகை மாவட்ட நிர்வாகி தாக்கல் செய்த ஒரு மனுவின் மீது அளித்த தீர்ப்பில் தெரிவித்த கருத்துக்கள்.   தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் வளர, வளர பிரிவனைவாதங்களும் வளர தொடங்கின.  தி.மு.க. உள்ளிட்ட திராவிட கட்சிகள் வெளிப்படையாகவே பிரிவினையை பேசியவர்கள்.  தங்களின் சுயநலத்திற்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம், பிரிவினையை பேசக் கூடியவர்கள்.  ஜீன் 8ந் தேதி சீர்காழி பஸ் நிலையம் அருகில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பாக,  ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக என காவல் நிலையத்தில் மனு கொடுத்து விட்டு, வட இந்தியர்கள் தென் இந்தியர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பொதுக் கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்பட்டது.  இவ்வாறு கூறுவதற்கு முக்கியமான காரணம் இக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பவர்கள் பிரிவினையை தூண்டும்விதமாக பேசும் திருமுருகன் காந்தி என்கின்ற டேனியல் என்பதையும் கவனிக்க வேண்டும்.

          பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்த காரணத்தால், உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கில், இந்தியாவின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான்.  சர்தார் வல்லபபாய் படேல் போன்ற தலைவர்கள் பாடுபட்டு ஒருங்கிணைந்த இந்தியாவை கூறு போட முயலும் செயலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என நீதி பதி தெரிவித்தார்.  இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமான தீர்ப்பாகும்.  இதன் மூலம் தமிழக அரசும் கூட, பிரிவினையை வெளிப்படையாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக் கூடாது.  தமிழகம் பிரிவினைவாதிகளின் கூடாராமாகவே மாறிவிட்டது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாகவே பல காரியங்கள் நடைபெறுகின்றன.

                ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு, தமிழகத்தில் வெளிப்படையாகவே பிரிவினையை தூண்டும் அமைப்புகள் செயல்படுகின்றன.  தமிழகத்தில் பிரிவினையை உருவாக்கும் விதமாக, 12 அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.  இதில் கிறிஸ்துவ மக்கள் கட்சி, கிறிஸ்துவர்கள்  முன்னேற்ற கழகம், கிறிஸ்துவ ஜனநாயக முன்னணி, இவர்களுடன் இஸ்லாமிய அமைப்பான தவ்ஹீத் ஜமாத், தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மனித நீதி பாசறை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்தும், இந்த அமைப்புகளுடன் ம.தி.மு.க. பா.ம.க. தலித் பாந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அனைத்திந்திய தமிழக தொழிலாளர் முன்னேற்ற கழகம் போன்ற அமைப்புகளும் இணைந்து, தமிழ் தனி நாடு உருவாக்க முயலுவதாக கிறிஸ்துவ அமைப்பினர் குறிப்பிட்டார்கள்.   தமிழகத்தில் பிரிவினைவாத அமைப்புகளின் பொறுப்பாளர்களாக கிறிஸ்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் இருக்கிறார்கள்.  இதில் ஒரு பெரிய வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்துவ பெயரை மாற்றி இந்து பெயராக வைத்துக் கொண்டு பிரிவினைக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

இஸ்லாமிய அமைப்புகள் தனித் தமிழ்நாடு பிரிவினைக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டதாக ஒரு தகவல் உண்டு.  Challenges of Separatism in East Pakistan and Tamil Nadu: Comparative Appraisal of Political Leadership   என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.  இந்தக் கட்டுரையில் கிழக்கு பாகிஸ்தான் எவ்வாறு பங்களா தேஷ் நாடாக மாறியது என்றும், அதே காரணங்கள் தனித் தமிழ்நாடு உருவாவதற்கும் காரணங்கள் உள்ளதாகவும் எழுதப்பட்டுள்ளது.  தமிழர் கலாச்சாரம் என்ற பெயரில்  இஸ்லாமிய அமைப்புகள் பிரிவினைவாத திராவிட இயக்கத்திற்குள் ஊடுருவியுள்ளார்கள்.  குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஷாநாவஸ் என்பவன்.  தி.மு.க.வில் எஸ்.றா சற்குணம் , போன்றவர்கள்.

பிரிவினைவாத அமைப்புகளுடன், மக்கள் கலை இலக்கிய கழகம், இந்திய மாணவர் பேரவை, இந்திய ஜனநாயக இளைஞர் பேரவை, போன்ற நக்ஸலைட்டுகளும் கலந்து கொள்கிறார்கள்.  இவர்களின் நோக்கம் மத்தியில் மோடி அரசை பலவீனமாக்குவதும், இதற்காக பிரிவினைவாதிகளுக்கு கம்யூனிஸ நாடுகளில் ஆதரவை பெறுவதும் முக்கிய பணியாக செயல்படுகிறார்கள்.  தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ அமைப்பின்  பிரதான முழக்கம் தலித் இஸ்லாமிய கூட்டணி என்பதே.

         தமிழகத்தில் பெரும்பாலான பிரிவினைவாதிகள்,   இலங்கை பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டார்கள். விடுதலை புலிகளுக்கு உதவி செய்தததின் நோக்கம் இலங்கை தமிழர்கள் மீது உள்ள பாசம் என நினைப்பது தவறானது.  தனி ஈழம் கிடைத்த அடுத்த நிமிடமே, தமிழ் நாட்டையும் சேர்த்து அகண்ட தமிழகம் படைத்து விட்டால், இலங்கையினால் விடுதலைப் புலிகளை ஒன்றும் செய்ய இயலாது, இந்தியாவிலும் தமிழ்நாட்டை திரும்ப பெற இயலாது என்ற சிந்தனையின் அடிப்படையில் உதவி கரத்தை நீட்டினார்கள்.  இதன் காரணமாக தமிழகத்தில் திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம், துவக்கிய பிரிவினைவாதத்தை, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகியவர்கள், தமிழ்நாடு விடுதலை படை, தமிழ்நாடு மீட்பு துருப்புக்கள், அகண்ட தமிழ்நாடு கட்சி என்றும்,  பிரிவினையை கீழ் தட்டு மக்களிடமும், உழைக்கும் மக்களிடமும் கொண்டு சென்றார்கள். இன்று மே 17 இயக்கத்தின் பொறுப்பாளரின் முக்கிய நோக்கமே ஈழத்தை மையப்படுத்தி தனித் தமிழ்நாடு என்பது தான்.

        தமிழகத்தில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் மே 17 இயக்கம் 26.9.2009ந் தேதி விடுதலைப் புலி தளபதி திலீபன் நினைவு கூட்டம் திருநெல்வேலியில் நடத்தினார்கள்.  இந்த கூட்டத்தில் 2001-டிசம்பர் மாதம் இந்திய பாராளுமன்ற கட்டிடத்தை தாக்கிய வழக்கில் கைதான பேராசிரியர் எஸ்.ஆர்.கீலானி கலந்து கொண்டார்.   இதை போலவே 21.10.2009-ல் புது டெல்லியில் நடந்த அரசியல் கைதிகளின் விடுதலை குழு என்ற அமைப்பின் சார்பில் நடந்த கருத்தரங்கில், தமிழகத்தைச் சார்ந்த தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர் தியாகு, தான் கலந்து கொள்ள இயலாது என்பதுடன், என் பெயர் காஷ்மீர் என்ற தலைப்பில் பிரிவினையை வலியுறுத்தி தனது உரையை அனுப்பினார்.  ஸ்டெர்லைட் ஆலையில் நடந்த துப்பாகி சூடு சம்பந்தமாக திருமுருகன் காந்தி ஐ.நா.வில் உரையாற்ற அழைப்பு விடுத்தவர்கள் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பவர்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரும்பாலான பிரிவினைவாத அமைப்புகள், திராவிட இயக்கதிலிருந்து பிரிந்து வந்தவர்கள் உருவாக்கிய அமைப்பு.  பிரிவினைவாதத்திற்கு அடிப்டையாக வைத்திருக்கும் கொள்கை, பிராமண எதிரப்பு, இந்து எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு என்பதை முன்னிலைப்படுத்தி தனித் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை மேற் கொள்கிறார்கள்.   தி.மு.க.விலிருந்து பிரிந்த ம.தி.மு.க.வின் வை.கோ..  திராவிடர் கழகத்தில் பெரியார் மரணமடைந்த பின்னர், பிரிந்த அமைப்புகளும் பிரிவனையை முன்னிலைப்படுத்தி வருகின்றன.   வன்னியர் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் அமைத்த அமைப்பே, தமிழர் விடுதலைப் படையின் பொறுப்பாளர்கள் என இன்டியன் எக்ஸ்பிரஸ் 2008 ஏப்ரல் 20ந் தேதி இதழில் கட்டுரை எழுதியுள்ளது.

வன்னியர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி, இட ஓதுக்கீடுக்காக போராடியவர்கள், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி என்ற கட்சியை உருவாக்கி, தமிழர், தமிழ், தனித் தமிழ்நாடு என்ற போக்கை பின்பற்றி பிரிவினைக்கு ஆதரவாக களம் காண்கிறார்கள்.  ஈழத்தில் விடுதலை புலிகளின் ஆதிக்கத்திற்கு முற்றிப் புள்ளி வைத்தவுடன், தமிழகத்தில் புதிதாக பல அமைப்புகள் உருவாகின. நாம் தமிழர் கட்சி, மே17 இயக்கம், நாம் தமிழர்  போன்றவை பிரிவனையை மட்டுமே வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்.  இவர்களுக்கு உறுதுணையாக கிறிஸ்துவ அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் பல்வேறு வழிகளில் உதவி புரிகிறார்கள்.

பிரிவினைவாத அமைப்புக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகளுடன் உள்ள தொடர்பு –  தி.மு.க. இந்து எதிர்ப்பு என்ற பெயரில், கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகளுடன் உறவு வைத்துக் கொண்டு, பிரிவினையை தூண்டி விடுகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா, மிஜோராம் ஆகிய மாநிலங்களில் கிறிஸ்துவ மிஷனரிகளின் தொடர் பிரச்சாரத்தின் காரணமாக, மிகப் பெரிய அளவில் பிரிவினைவாத அமைப்புகள் அம்மாநிலங்களில் உருவாகியுள்ளன.  மேற்கத்திய கிறிஸ்துவ மிஷனரிகள் மற்றும் உளவு அமைப்புகள் மூலமாக, நக்ஸல், இஸ்லாமிய பயங்கரவாத செயல்கள், காஷ்மீர் பிரிவினைவாதம், தமிழ் பிரிவினைவாதத்திற்கு உந்து சக்தியாக விளங்குகிறது.

தமிழக அரசின் இயலாமை –  பிரிவினைவாதிகளின் செயல்பாடுகள் அதிக அளவில் உருவாகியுள்ளது என்பது தமிழக அரசுக்கு நன்கு தெரியும்.  காவல் துறையின் உளவு பிரிவுகள், பிரிவினைவாதிகளின் செயல்பாடுகள், திட்டங்கள் பற்றிய முழு விவரங்களை  அரசுக்கு தெரிவித்த பின்னரும் கூட,  நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள்.  நாம் தமிழர் கட்சியின் மாநாடு கடலூரில் நடந்த போது, காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டதும்,  தமிழ்நாடு பிரிவினையை பற்றி பேசியது  தெரிந்தும் சீமான் மீது நடவடிக்கை கிடையாது.       பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பயங்கரவாதிகளும் ஊடுருவியுள்ளார்கள் என்பது தெரிந்தும் உரிய நடவடிக்கை கிடையாது.   தமிழ்  ஈழம், தனித் தமிழ்நாடு என்ற கோஷங்களை போட்டதோடு மட்டுமில்லாமல், மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளையும் ஏந்திய மே 17 இயக்கத்தினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்திய அரசுக்கு எதிராக எந்த போராட்டங்கள் நடந்தாலும், போராட்டக்கார்களுக்கு உதவி புரிவதாக கூறிக் கொண்டு, தமிழ்நாடு தௌஹித் ஜமாத், சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா, பாப்புலர் ஃப்ரெண்ட்  ஆஃப் இந்தியா  போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அதிகாரம் கிடையாது.

        இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு பிரிவினைவாதிகள் மீதும், அவர்களின் அமைப்பின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *