இந்தியாவின் புதிய வரைப்படம்

அரசியல் ஷரத்து 370 ரத்து செய்த பின்னர், நவம்பர் மாதம் 2ந் தேதி இந்திய உள்துறை அமைச்சகம் புதிய
இந்திய வரைப்படத்தை வெளியிட்டது. புதிய வரைப்படத்தில் இந்தியாவில் 28 மாநிலங்களும், ஒன்பது யூனியன்
பிரதேசங்களும் இருக்கின்றன. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி
அமைக்கப்பட்டதை சேர்த்து ஒன்பது யூனியன் பிரதேசங்கள். புதிய யூனியன் பிரதேசத்தின் எல்லைகள் தெளிவாக
குறிப்பிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பகுதிகளும் இந்திய பகுதிகளாக குறிக்கப்பட்டுள்ளது. இதை
பாகிஸ்தான் எதிர்த்து குரல் கொடுத்துள்ளது. பாகிஸ்தானை போலவே சீனாவும், இந்திய புதிய வரைப்படத்தில் லடாக்
பகுதியை குறிப்பிட்டுள்ளதில் அக்சை சின் பகுதியும் இந்தியாவில் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. சீனா இதற்கு
கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இந்தியா வெளியிட்ட வரைப்படத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய பகுதியாகவும், குறிப்பாக
கில்ஜித்- பல்டிஸ்தான், ஆஸாத் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளாகும். ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்திற்கு
புறம்பாக இருப்பதாக பாகிஸ்தான் புலம்புகிறது. ஆனால் உண்மையில், பாகிஸ்தான் ஐ.நா.சபையின் தீர்மானத்திற்கு
எதிராக 70 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. ஜில்ஜித்- பல்டிஸ்தான்
பகுதியைச் சார்ந்த அரசியல் சமூக ஆர்வலர் திரு. Senge H.Sering என்பவர், சட்ட விரோதமாக காஷ்மீர் பகுதியை
ஆக்கிரமித்துள்ள நாடு பாகிஸ்தான் என்றார். ( Pakistan violating U.N. Security Council Resolution and it
continues to illegally occupy the region ) 1947 அக்டோபர் மாதம் 26ந் தேதி இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில்
ஜம்மு – காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்ட ஆவணத்தில் உள்ள பகுதிகள் எவ்வாறு பாகிஸ்தான் பகுதிகளாக
மாறும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் வெளியிட்ட வரைப்படத்தில் ஜம்மு – காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தான் பகுதியாக சித்தரித்தது
என்பதை மறந்து விட்டு, இந்தியாவின் மீது பழி போடுகிறது. பாகிஸ்தான் அரசியல் சட்ட ஷரத்து 257 –ன் படி,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, ஜம்மு – காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைய சம்மதம் தெரிவித்து
விட்டால், பகுதியின் தன்மை என்பது, அந்த பகுதியின் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபடும் என குறிப்பிட்டுள்ளது.
இதுவே பாகிஸ்தானுக்கு உட்பட்டது கிடையாது என்பது புலனாகும்.
1947-ல் பாகிஸ்தான் அடாவடியாக ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியை கைப்பற்றிய பின்னர் நடந்த
நிகழ்வுகள் கூட, ஆஸாத் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு உட்பட்டது கிடையாது என்பது தெளிவாக தெரியும். ஆஸாத்
காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்பதற்கு புறம்பாக விவாதிப்பவர்கள், இந்தியாவுடன் இணைந்தது
சரியானது என கூறும் எவரும் தேர்தலில் நிற்க தடைவிதிக்கப்பட்டது. தேச விரோத சட்டத்தின் படி கைது
செய்யப்பட்டார்கள். அவர்களின் ஆவணங்கள் கிழித்து எறியப்பட்டன. கடுமையான வன்கொடுமைக்கு
ஆளாக்கப்பட்டார்கள். பாகிஸ்தானால் ஆஸாத் காஷ்மீர் ஆளக் கூடாது என்பதை வலியுறுத்தி ஜம்மு – காஷ்மீர் தேசிய
மாணவர் அமைப்பு போராட்டத்தை நடத்திய போது, மாணவர்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல், பலாத்கார
தாக்குதலுக்கும் ஆளானார்கள். ஆஸாத் காஷ்மீரின் நிர்வாகத்தை பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் விதமாக,
பாகிஸ்தான் அரசியல் அமைப்பு சட்ட ஷரத்து 18 மற்றும் 19க்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப் பெரிய போராட்டத்தை
பாகிஸ்தான் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பகுதியில் நடைபெற்றது.
ஜில்ஜிட்-பல்டிஸ்தான், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் ஒரு அங்கம். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு
அருகில் உள்ள ஜில்ஜிட் பகுதியில் சீனாவானது தனது ஆதிக்கத்தை செலுத்த முற்பட்டது. இது சம்பந்தமாக
பாராளுமன்றத்தில் ராஜ்ய சபாவில், 11.8.2011-ல் கேள்வி எண் 521, கேள்வி எண் 1749 தேதி 25.11.2010 , கேள்வி எண் 2494
தேதி 2.12.2011 , மக்களவையில் 3.8.2011ந் தேதி கேள்வி எண் 653 என பல முறை கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு
முறையான பதிலை அன்றைய அமைச்சர்களும், பிரதமரும் மலுப்பலான பதிலையே தெரிவித்தார்கள். இது பற்றி
குறிப்பிடுகையில், The Q&As in parliament reveal the lack of seriousness on India’s part and our
complacency regarding the other parts of J&K. என Gilgit Baltistan Between Hope and Despair ஆய்வு
நூலில் குறிப்பிட்டார்கள்.
இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தவுடன், மகாத்மா காந்தி ஸ்ரீநகருக்கு விஜயம் செய்த போது, மிகப் பெரிய
தவறு நிகழ்ந்து விட்டது என்றார். காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்டு சுயாட்சி அதிகாரத்தை ஜில்ஜிட் பகுதிக்கு
வழங்கியிருக்கலாம் என்றார். ( When Mahatma Gandhi reached Srinagar amidst celebrations of the region’s
return to the Maharaja of Kashmir, he termed it “ a great mistake “ . He also noted that they should
have taken this oppoutunity to proclaim autonomy for Gilgit within Kashmir ….. He saw the seeds of
future trouble in an unqualified inclusion of Gilgit in Kashmir ) ஜில்ஜிட் பல்டிஸ்தான் நம் கையை விட்டு
போனதற்கு முக்கியமான காரணம், தலைவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததும். நேரு, ஷேக் அப்துல்லாவை

2
முழுவதும் நம்பியதின் விளைவே ஆஸாத் காஷ்மீர் உருவாவதற்கும், தீர்வு எட்டப்படாதிற்கும் முக்கியமான
காரணமாகும்.
1963 மார்ச்சு மாதம் 26 ந் தேதி பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின் படி, பாகிஸ்தான் ஜில்ஜிட்-
பால்டிஸ்தானிலிருந்து 5,130 சதுர கி.மீ. பகுதியை தாரை வார்த்து கொடுத்தது. கொடுக்கப்பட்ட பகுதியிலிருந்து 1,942 சதுர
கி.மீ. பகுதியை பாகிஸ்தானுக்கே திருப்பி சீனா கொடுத்து விட்டது. இந்தியா வெளியிட்ட வரைப்படத்திற்கு கூச்சல்
போடும், சீனாவும் பாகிஸ்தானும், ஐ.நா.சபையின் தீர்மானத்தின் படி, சட்ட விரோதமாக பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி
என குறிப்பிட்டுள்ளது. இதை பற்றி 1962ஆம மாதம் 10ந் தேதி ராணுவ அமைச்சர் வி.கே. கிருஷ்ணமேனன்
ஐ.நா.சபையில், That agreement is in total violation of any rights or authority Pakistan may possess, for it
has no sovereignty over the state , it is not Pakistan to trade away or negotiate about. என
குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு உள்ள பகுதியை எப்படி இருவரும் பங்கு போட்டு கொள்ள முடியும் என்பதை சிந்தித்து
பார்க்க வேண்டும்.
இந்தியா தங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பையும் இழந்தது. 2010-ல் பாகிஸ்தானில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த
வெள்ளத்தில் ஜில்ஜிட் பகுதியும் மிகப் பெரிய பாதிப்பிற்குள்ளாகியது. ஜில்ஜிட் பல்டிஸ்தான் பகுதியில் உள்ள
தேசியவாதிகள், மீட்புக்கு உதவி புரிய இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை கண்டு கொள்ளாத
காரணத்தாலும், இந்த அவல நிலை ஏற்பட காரணமாகியது. காஷ்மீர் விடுலைக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுப்பது
மட்டுமில்லாமல், பயங்கரவாத செயலுக்கும் உதவிகாரமாக இருப்பது போல், இந்தியாவும். ஜில்ஜிட் பல்டிஸ்தான்
விடுதலைக்கு உதவி புரிந்திருந்தால், சீனாவின் அத்துமீறல்களும், பாகிஸ்தானின் நிலைப்பாட்டையும் மாற்றியிருக்கலாம்.
ஆனால் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கிடைக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு, இழந்த பகுதிகளை மீட்க
முதல் படியாக இந்திய வரைப்படத்தை வெளியிட்டுள்ளார். உள்துறை அமைச்சரின் மேற்பார்வையிலேயே இந்த
வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டு பாகிஸ்தான், ஜில்ஜிட்-பால்டிஸ்தான் அதிகாரமளித்தல் மற்றும் சுய நிர்வாகம் ஒழுங்கு சட்டம்
ஒன்றை கொண்டு வந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்தது. வெளியுறவு துறை அமைச்சகத்தின்
சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், The entire state of Jammu Kashmir is an integral part of India by
virtue of its accession in 1947. The so called “ Gilgit-Baltistan Empowerment and Self Governance Order
2009 “ is yet another cosmetic exercise intended to camouflage Pakistan’s illegal occupation என
குறிப்பிட்டுள்ளது. கடந்த கால ஆட்சியில் அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது. மோடி இரண்டாம் முறையாக
ஆட்சிக்கு வந்த பின்னர், அறிக்கையை விடுவதை விட செயலில் காட்டுவது தான் சரியானது என்பதால், முதலில்
வரைப்படத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்பது போல் காட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் புலம்புவது போல், சீனாவும் அக்சை சின் பகுதி சீனாவுடையது என கூச்சலிடுகிறது. 1950-ல் சீனா
இந்திய எல்லையில் குறிப்பாக மேற்கு திபெத்திலிருந்து ஜிங்ஜாங் பகுதி வரை 1,200 கி.மீ. தூரத்திற்கு சாலை வசதி
ஏற்படுத்த, 179 கி.மீ. பரப்பளவு இந்திய பகுதியை ஆக்கிரமித்தது. இந்தியா கடும் கண்டனத்தையும எதிர்ப்பையும்
தெரிவித்தாலும், 1957 மற்றும் 1958-ல் சீனா வெளியிட்ட வரைப்படத்தில் அக்சைய சின் பகுதி சீனாவுடையது என்பது
போல் காட்டப்பட்டது. திபெத்தை கைப்பற்றிய போதே, சீனா தனது குள்ளநரித் தனத்தை காட்ட துவங்கியது. 1963-ல்
பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவின் வடக்கு பகுதியில் எல்லை பிரச்சினைகை்கு தீர்வு காண முற்பட்ட போது,
காரகோரம் பகுதியை எல்லையாக நிர்ணயித்தது. இதில் கூட, காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்ட பின்னர், எல்லை
வரையரை செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள். இந்நிலையில் பிரச்சினைக்குறிய பகுதியை தனது
வரைப்படத்தில் காட்டுவது தான் சீனாவின் அரசியல் நிலைப்பாடா என்ற கேள்வி எழுந்தது. பாகிஸ்தானும் சீனாவும்
செய்து கொண்ட உடன்பாட்டிற்கு இந்தியா கட்டுப்படாது என்றும் தெளிவாக எழுத்து மூலமாகவே தெரிவித்தது.
சீனாவின் குள்ளநரித் தனத்திற்கு, 1962-ல் இந்தியாவின் மீது போர் தொடுத்தது. அருணாசல பிரதேசத்தில் சில
பகுதிகளையும் கைப்பற்றி வெற்றி விழா நடத்தியது. ஆனால் 1963-ல் ஏற்பட்ட உடன்பாட்டின் படி, மெக்மோகன்
எல்லைக் கோடு வரை தனது படைகளை வாபஸ் பெற்றதும், கைது செய்யப்பட்ட போர் வீரர்களை திருப்பி அனுப்பியது.
அதே வேளையில் லடாக் பகுதியில் கைப்பற்றப்பட்ட இடங்களிலிருந்து வெளியேறவில்லை. ஒரு புறம் மெக்மோகன்
எல்லைக் கோட்டிற்கு திரும்பிய, சீனா ஏன் லடாக் பகுதியிலிருந்து வெளியேறவில்லை என்ற காரணத்தை புரிந்து
கொள்ள வேண்டும். தனது சர்வாதிகாரத்தனத்தை காட்டுவதற்காகவே இவ்வாறு நடக்கிறது.
வரைப்படத்தில் குறிப்பிட்டுள்ள பகுதி இந்தியாவின் பகுதி என்பதை உள்துறை அமித் ஷா பாராளுமன்றத்தில்
தெளிவாக குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் சிலர் கூட விட்டுக் கொடுக்கப்பட்ட பகுதிகளை மீட்டு
எடுக்க வேண்டும் என்கிறார்கள். தற்போது வரைப் படத்தில் குறிப்பிட்டுள்ளது முதல் படியாகும். டேக்லாம் பகுதியில்
நிலையாக நின்று, சீனாவை பின்வாங்க செய்தது போல், முழுமையான காஷ்மீர் மாநிலத்தை கூடிய விரைவில் கண்டு
களிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *