இதோ ஒரு மதமாற்ற ராணுவம்!

தமாற்றம் செய்யவில்லை என்றால், பாவம் என்கிற அளவில் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்கள் செயல்படுகிற போது, எப்படியாவது கிறிஸ்துவரல்லாதவர்களை மதம் மாற்றி, கிறிஸ்துவர்களாக ஆக்கவேண்டியது தங்களுடைய தர்மம் என்று தீவிரவாதமாக, அந்த மத நிறுவனங்கள் மதமாற்றம் செய்யும் போது, எங்கிருந்து வந்தது சிறுபான்மை உரிமை?

இந்த மைனாரிட்டி ஸ்தாபனங்களுக்குப் பின் மறைந்து கிடக்கும் அளவிட முடியாத சக்தியை, பணபலத்தை, ஆள்பலத்தை, அரசியல் பலத்தைக் கொஞ்சம் பார்ப்போம். இவர்களுக்குப் பின்னால் ஒரு பிரம்மாண்டமான மதமாற்றும் இயந்திரம் — உலகளாவிய மத மாற்றம் ராணுவம் இருந்து கொண்டு, மதமாற்றும் செய்ய, உலகையே கிறிஸ்துவ மதமயமாக்க உந்துகிறது —– இந்த உலகம் தழுவிய மதமாற்றும் இயந்திரமான அகில உலக கிறிஸ்துவ சர்ச்கள்.

உலக கிறிஸ்துவ சர்ச்களின் -அதாவது மத மாற்றும் படையின், வருடாந்திர பட்ஜெட் செலவு மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் – ரூபாய் 7,5௦,௦௦௦ கோடி. இந்த சர்ச்களுக்குக் கிட்டத்தட்ட 4௦ லட்சம் முழு நேர ஊழியர்கள். இந்த எண்ணிக்கை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவத்தின் எண்ணிக்கையைவிட அதிகம். இந்த சர்ச்கள் 12,௦௦௦ நூலகங்கள் (Libraries) நடத்துகின்றன. மேலும் அந்த சர்ச்கள் 22,௦௦௦ பத்திரிகைகள் நடத்துகின்றன. மேலும் ஆண்டுக்கு எத்தனை புத்தகங்களையும், துண்டு பிரசுரங்களையும் வெளியிடுகின்றன? 4௦௦ கோடிக்கும் மேல்! சர்ச்கள் நடத்துகிற TV Channel, ரேடியோ இவற்றின் மொத்த எண்ணிக்கை என்ன தெரியுமா ? 1800–க்கும் மேல், 15௦௦ பல்கலைக் கழகங்கள், எத்தனை ரிஸர்ச் நிறுவனங்கள்? 930 -க்கும்மேல்.

உலகிலுள்ள பல வல்லரசுகளிடம் கூட இத்தனை பிரம்மாண்டமான சாதனங்கள் இல்லை… பணத்தளவிலே இது உலகிலேயே மிகப்பெரிய பன்னாட்டுக் கம்பெனிகளில் ஒன்று.

இன்னொரு விஷயம். வெளிநாடுகளில் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சர்ச்தான் பிரதானமாகச் செயல்படும். ஒரு சர்ச் என்றால் ஒரு நாட்டின் சர்ச் என்று அர்த்தம். ஒரு நாட்டின் அரசியலையும், அதன் சர்ச்சையும் பிரிக்க முடியாது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் சர்ச்சை, தன் நாட்டுக்குள் அனுமதிக்காது. இது பலருக்குத் தெரியவே தெரியாது. ஏனென்றால் கிறிஸ்துவ மதம் ஒன்றாக இருந்தாலும், சர்ச் அமைப்பு அந்தந்த நாட்டின் அரசியலையும், அரசாங்கத்தையும் சார்ந்து செயல்படுவதால், ஒரு நாட்டின் சர்ச்சை அடுத்த நாடு அனுமதிக்காது.

உதாரணமாக, கிரேக்க நாட்டில் கிரேக்க orthodox சர்ச் மாத்திரம்தான் பிரதானமான சர்ச். அந்த நாட்டில் அந்த சர்ச்சிலிருந்து மற்றொரு சர்ச்சுக்கு, அதாவது கிறிஸ்துவ மதத்திற்குள்ளேயே மாறுவதையே, மத மாற்றம் என்று அந்த நாட்டு அரசியல் சாஸனப்படி தடை செய்யப்பட்டிருக்கிறது. காரணம், வேறு நாட்டு சர்ச் வந்தால் அந்த நாட்டு அரசியலும் வரும் என்கிற காரணம்தான். ரஷ்ய orthodox சர்ச்சிலும் இதே நிலைதான் கடைபிடிக்கப்படுகிறது. லூத்ரன் சர்ச் ஜெர்மனியைச் சார்ந்தது. Baptist சர்ச் அமெரிக்காவைச் சார்ந்தது. Anglican சர்ச் இங்கிலாந்தைச் சார்ந்தது…. இப்படி கூறிக் கொண்டே போகலாம். எல்லா சர்ச்களுக்கும் கிறிஸ்துவம் பொதுவாக இருந்தாலும், அந்தந்த நாட்டின் நலனையும், அரசியல் தத்துவத்தையும் நாடியே செயல்படும்.