உத்தரப் பிரதேசம் அயோத்தியாவில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் 100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. நாக்பூரை போன்றே மற்றொரு புதிய அலுவலகம் அங்கு கட்டப்போகிறார்கள் என்றும் தங்கள் கற்பனைக்கு ஏற்ப கட்டுக் கதைகள் பரப்பிய ஹரிபூமி.காம், டைநிக்.காம், நியூஸ் 24 டி வி மற்றும் டைநிக் பாஸ்கர் (நாளிதழ்) ஆகியவற்றுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ‘சாகேத்’ என்ற பெயரில் அயோத்தியில் பல வருடங்களாகவே ஒரு அலுவலகம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.