ஆர்.எஸ்.எஸ்ஸிலாவது, தீண்டாமையாவது?

அகில இந்திய காங்கிலிஸ் தலைவர் பதவி என்பது பெரிய பெரிய ஜாம்பவான்கள் வகித்த பதவியாகும். அந்த பதவிக்கு நேரு குடும்பத்தின் வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக ராகுல் நியமிக்கப்பட்டார். அவரின் பேச்சுகள் அவர் வகிக்கும் பதவிக்கு சிறிதும் தகுதி இல்லாதவர் என்பதைக் காட்டுகிறது.

தலித்துகளின் அவலநிலைக்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜகவே காரணம் என்றும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் மரபணு சமூகத்தில் தலித்துகளை தொடர்ந்து தரம் தாழ்த்தி வைத்திருக்கவே நினைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம். ராகுல் என்ன பெரிய ‘மரபணு’ ஆராய்ச்சி நிபுணரா? அவரே நூறு சதவீதம் சுதேசி இல்லையே.

எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி  தலித்துகள் நடத்திய போராட்டத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் என்ன சம்பந்தம்? போராட்டம் செய்யும் இவர்கள் எல்லாம் தலித் நல விரும்பிகள் இல்லை. இவர்கள் சந்தர்ப்பவாதிகள். தேர்தல் கண்ணோட்டத்தில் தலித் வாக்கு வங்கிக்காக கபட நாடகம் ஆடி வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். தீண்டாமையை ஏற்றுக் கொள்ளாத இயக்கம். கோயில், குளம், மயானம் மூன்றும் ஹிந்துக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுதியான கருத்து. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஜாதி பார்ப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. ஹிந்து ஒற்றுமை ஒன்றே ஆர்.எஸ்.எஸ்ஸின் தாரக மந்திரம்.

ராகுல் அவர்களே! நீங்கள் அகில பாரத தலைவர் என்பதை மறந்து விட்டு, நாலாந்தர பேச்சாளர் போன்று செயல்பட வேண்டாம்!

 

Related Posts

யார் இந்த ஜின்னா? முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணமானவர். 1946ல் நேரடி நடவடிக்கை என்ற பெயரில் பல பகுதிகளில் இவரது கும்பல் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை வெட்...
வனயாத்ரா ஆர்.எஸ்.எஸ். சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வனயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏப்ரல் 1, 2018 அன்று மாவட்டம் முழுவதுமிருந்து 3,038 பேர் பேச்சிப்பாறை...
கொள்கையை சுட்டிக் காட்டிய பண்பு: மகான்களின் வாழ்... டாக்டர் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஸ்தாபகர். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தினசரி ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மணி நேரம் சந்திப்பதற்கு...
தாய் மொழியில் தொடக்கக் கல்வி... எந்த ஒரு தனி நபருக்கும், சமுதாயத்திற்கும் அதன் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாப்பதில் மொழிக்கு முக்கிய பங்கு இருப்பதாக அகிலபாரத பிரதிநிதி சபை கர...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *