பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி, கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையத்தில், நாளை காலை, 10:30 மணிக்கு துவங்குகிறது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் பயிற்சியில் சேர விரும்புவோர், நேரில் பங்கேற்கலாம். பயிற்சி தொடர்பான தகவல்களுக்கு, 94999 66021, 044- – 2250 1032 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.