அஸ்ஸாமில் கிறிஸ்தவ மதமாற்றம்

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மற்றும் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் கிறிஸ்தவ மிஷனரிகள் பெரிய அளவில் மதம் மாறுவது புதிதல்ல. அவ்வகையில், சமீபத்தில் ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் சர்ச்சுகள் அசாமில் மதமாற்றங்களை செய்ய பெருமளவில் நிதியுதவி செய்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. அஸ்ஸாமில் உள்ள தேஸ்பூர் மறைமாவட்டம், சர்ச்சின் பாதிரிகளுக்கு ஜெர்மனி சர்ச் அனுப்பியுள்ள பாராட்டுக் கடிதம்,  அஸ்ஸாமில் மத மாற்றத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இதற்காக ஜெர்மனியில் இருந்து ரூ. 6 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 7,500 யூரோக்களை நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அஸ்ஸாம் பாதிரி நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஆதாரங்களை சட்ட உரிமைகள் கண்காணிப்பகம் (LRO) வெளியிட்டுள்ளது. ஜெர்மனி சர்ச்சில் இருந்து வந்த அந்த கடிதத்தில், தேஸ்பூர் மறைமாவட்டம் தொற்றுநோய் கட்டுப்பாடுகளின் போது, ​​கற்பித்தல், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற சமூகப் பணிகள் மூலம் மத மாற்றங்கள் செய்ததில் மும்முரமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த உலக இந்து சம்மேளன மாநில பொதுச் செயலாளர் பாலன் பைஷி, ‘இது மிஷனரிகளின் மத ஆக்கிரமிப்பு. அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கில் பாப்டிஸ்த்துகள் மற்றும் கத்தோலிக்கர்கள் சமமாக மத மாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற மதமாற்றங்களுக்கு எதிராக மாநில அரசு மேலும் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். மத மாற்றத்திற்காக இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை எவ்வாறு பெறுகின்றன என்பதை மத்திய அரசு முறையாக விசாரிக்க வேண்டும்’ என்றார்.