அஸ்தமனம் ஆன அபஸ்வரம்!

தமிழகத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (S I R), வேண்டாம் என்று ஆளுங்கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. ஆனாலும் தேர்தல் கமிஷன் தனது முடிவில் உறுதியாக இருந்து, தமிழகத்தில் பட்டியலைத் திருத்தியது. சென்ற வாரம் வெளியான திருத்திய பட்டியலின்படி சுமார் 97 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதாவது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் போலி! இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் விஷயம். திருத்தத்தை எதிர்த்தவர்கள் மக்களின் கேலிக்குள்ளானார்கள். திருத்தபட்டிருக்காவிட்டால், இந்த ஒரு கோடி போலி வாக்காளர்களும், ஏதோ ஒரு விதத்தில் வாக்களித்திருப்பார்கள். ஜனநாயகம் பிழைத்தது. மத்திய அரசுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் நமது பாராட்டுகள்.