வேட்டி முள் மீது விழுந்துவிடுகிறது. வேட்டி மீது அக்கறை இல்லாதவர் அல்லது பொறுமை இல்லாதவர் அதை முள்ளிலிருந்து எடுப்பதற்குள் வேட்டி இருக்கும். வேட்டி மீது அக்கறை மட்டும் அல்லாமல் திறமையும் உள்ளவர் முள்ளிலிருந்து வேட்டியை முழுமையாக எடுப்பதில் வெற்றி பெறுகிறார்.
தொன்மையான ஹிந்து சமுதாயத்தில் இடைக்காலத்தில் வந்து புகுந்த தீண்டாமை என்ற தீமையை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் ஒழிக்க வேண்டும், ஆனால் தீண்டாமையை கடைபிடிக்கிற சமுதாயம் காயப்படக் கூடாது; அது எப்படி சாத்தியம்? அது சாத்தியமே இல்லை என்று முடிவுகட்டிவிட்டு, முள்ளிலிருந்து வேட்டியை எடுக்கிறேன் என்ற போர்வையில் வேட்டியை கந்தலாக்கும் விபரீத குழுக்கள் டஜன் கணக்கில் வலம் வருகின்றன.
90 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் ஹிந்து சமுதாயத்தை – ஆம், தீண்டாமையால் தீட்டுப்பட்ட அதே ஹிந்து சமுதாயத்தை – ஒருங்கிணைப்பதில் தவம் செய்யும் ஒரு முனிவன் போல ஒருமுகப்பட்டு ஈடுபட்டு வருகிறது. அமோக வெற்றி கண்டு வருகிறது. அதன் அணுகுமுறை அப்படி. அதன் பழகு முறை அப்படி. சங்கத்தில் ஹிந்துக்கள் மட்டுமே உண்டு. தீண்டத்தக்க சாதி, தீண்டத் தகாத சாதி என்றெல்லாம் எதுவும் கிடையாது.
இதற்கு அம்பேத்கரே சாட்சி. 1939ல் பூனே நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். முகாமைப் பார்வையிட்ட டாக்டர் , ஆர்.எஸ்.எஸ்ஸில் தீண்டாமை இல்லாத நிலை (அதுவும் 30களில்) என்னைக் கவர்ந்தது. நான் யார் என்பதை அங்கே நான் மறந்தே போனேன்.” என்று கருத்து கூறியிருக்கிறார். தீண்டாமை கொடுமைக்கு உள்ளான நான் என்னை மறந்தே போனேன் என்றால் என்ன பொருள்? காயம்பட்ட மனது சற்றே குணம் கண்டது என்றுதானே பொருள்? அதற்கான சூழ்நிலையை ஆர்.எஸ்.எஸ். அந்த முகாமில் உருவாக்கியிருந்தது.
அதே சூழ்நிலையை வீடு வீடாக, வீதி வீதியாக, ஊர் ஊராக உருவாக்க போதிய வீச்சும் மனசும் கொண்டதாக ஆர்.எஸ்.எஸ். விஸ்வரூபம் எடுத்திருப்பதை இன்று தேசமே தரிசிக்கிறது. என்ன, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ‘நாங்கள் தீண்டாமையை ஒழிக்க புறப்பட்டுவிட்டோம்’ என்று தமுக்கடிப்பதில்லை. ஆனால் ‘தீண்டாமை ஒழிக்கப்பட்டிருக்கிறது. காரணம் ஆர்.எஸ்.எஸ்.’ என்று நாடு நெடுக ஆவணங்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றில் நாலைந்தை ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் கா. ஸ்ரீனிவாசன் இந்த இதழில் பதிவு செய்திருக்கிறார்.
அம்பேத்கர் ஆசைப்பட்டதை, அதாவது தலித் மக்கள் உரிய கௌரவத்துடன் ஹிந்து சமுதாயத்தில் சகஜமாக இணைந்து வாழ்வதை, ஆர்.எஸ்.எஸ்ஸால் நிஜமாக்கிக் காட்ட முடிந்திருக்கிறதே? இப்போது சொல்லுங்கள், அம்பேத்கரிஸ்ட் என்று ஆர்.எஸ்.எஸ்ஸை சொல்லலாம் தானே?