அமைதி நிலவுகிறது

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘காஷ்மீர் சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய முடியும் என யாரும் நம்பவில்லை. ஆனால், பிரதமர் மோடி அதனை நிறைவேற்றினார். இதனால், தற்போது காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. முதலீடுகள் குவிகின்றன. சுற்றுலாவும் வளர்கிறது. காஷ்மீர் தற்போது ஒட்டுமொத்த பாரதத்துடன் ஒருங்கிணைந்துள்ளது. அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. அனைவருடனும் அமைதி நிலவுவதையே நாம் விரும்புகிறோம். எல்லை பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நமது பாரதப் பொருளாதாரம், மத்திய அரசின் கொள்கைகள் காரணமாக மீண்டு வருகிறது. தற்போது, உலகில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக பாரதப் பொருளாதாரம் உள்ளது’ என கூறினார்.