உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: உ.பி.,யில் மாட்டு தொழுவங்கள் கட்டப்படுகின்றன. 4 கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்த நான்கு கட்ட தேர்தலின் முடிவுகளை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா?. பிரதமர் மோடி ஏற்கனவே 270 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் குடும்ப சொத்துகள் அல்ல. இண்டியா கூட்டணி குடும்ப அரசியலின் சங்கமம். அமேதி, ரேபரேலி தொகுதிகளை பா.ஜ., கைப்பற்றும். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, அகிலேஷ் யாதவ், ராகுல், பிரியங்கா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் ஏன் பங்கேற்கவில்லை. ஓட்டு வங்கி பாதிக்கும் என்ற பயமா என ராகுல் இடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.