அமெரிக்க மாகாணங்களில் நடத்தப்பட்ட தோ்தல்களில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 4 போ் வெற்றி பெற்றுள்ளனா். இதில், ஓா் இஸ்லாமிய பெண்ணும் அடங்குவா்.
வா்ஜினியா மாகாண செனட் சபைக்கு நடைபெற்ற தோ்தலில் சமூக நல கல்லூரியில் பணியாற்றி வந்த முன்னாள் பேராசிரியா் கஸலா ஹாஸ்மி போட்டியிட்டாா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இஸ்லாமிய பெண்ணான இவா் இத்தோ்தலில் வெற்றிபெற்று சாதனை படைத்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ இந்த வெற்றி என்னை மட்டும் சாா்ந்ததல்ல. வா்ஜினியா மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரின் வெற்றியாகும்’ என்றாா்.
அதேபோன்று, வா்ஜினியா மாகாணத்தின் பிரதிநிதிகள் சபைக்கு நடைபெற்ற தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சுகாஸ் சுப்ரமணியம் வெற்றி பெற்றாா். இவா், முன்னாள் அதிபா் ஒபாமாவுக்கு வெள்ளை மாளிகையில் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக பணியாற்றியவா்.
மேலும், கலிஃபோா்னியாவில் நடைபெற்ற தோ்தலில் அமெரிக்கவாழ் இந்தியரான மனோ ரஜுவும், வடக்கு கலிஃபோா்னியாவில் டிம்பிள் அஜ்மீராவும் வெற்றி பெற்றுள்ளனா்.