அமீர் கானுக்கு படம் ஒரு பாடம்

அமீர்கானின் புதிய படம் லால் சிங் சத்தா குறித்து வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக, டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமுக ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. தனது வாழ்க்கையிலும், படங்களிலும் தேசவிரோத, ஹிந்து விரோத கருத்துகளை கூறிவரும் அமீர் கான், இந்த படத்திலும் அதனை மீண்டும் நிரூபித்துள்ளார். தேசப்பற்றின்றி நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறிய அவரது படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கருத்துகள் சமூக உடகங்களில் பரவலாக இடம் பெற்றன. இத்தகைய கருத்துகளால் தனது படம் ஓடாது என அறிந்த அமீர் கான், எனது படத்தை மக்கள் பார்க்க வேண்டும், எனக்கு தேசப்பற்றுள்ளது, ஐ லவ் இந்தியா என புலம்பித் தள்ளினார். எனினும் அவரின் இந்த நடிப்பு அவருக்கு பலனளிக்கவில்லை என்றே தோன்றுகிறது. படம் குறித்த தொடர்ச்சியான எதிர்மறையான கருத்துகளால் இந்த படம், ஆமிர் கானின் வாழ்க்கையில் கடந்த 13 ஆண்டுகளில்  இல்லாத வகையில் மிகக் குறைந்த தொடக்கத்தையே கொண்டுள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாபில் மட்டுமே படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் நாட்டின் மற்ற பகுதிகளில் படுதோல்வி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடக்க நாளில் வசூல் 30 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லால் சிங் சத்தாவின் முதல் நாள் வசூல் 10 கோடியை மட்டுமே நெருங்கியது. இந்த வருடம் மெகா ஹிட் அடித்த படங்களின் ஆரம்ப நாள் வசூலைக்கூட அவரின் படம் நெருங்கவில்லை. உதாரணமாக ஆர்.ஆர்.ஆர் ரூ. 20.7 கோடியையும் கே.ஜி.எப் 2 படம் 53.95 கோடி யையும் முதல் நாளில் வசூல் செய்தது என்பது நினைவு கூரத்தக்கது.