ஜூலை 23 அன்று, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில், 1,040 சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவை போற்றும் தியாகச் சுவர் திறப்பு விழாவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத் பேருரையிலிருந்து :
நாம் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்ட பின்பும் பாரதம் தலைநிமிர்ந்து நிற்கிறது.பிரயாகையில் மிகப்பெரிய ஒரு ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தை மக்கள் புனிதமாக வழிபட்டு வந்தனர். ஆனால் டெல்லி பாதுஷா வேரோடு அதை அகற்றிவிட்டு மீண்டும் அந்த மரம் முளைக்காதவாறு இரும்பை காய்ச்சி ஊற்றினார். இருப்பினும் அந்த மரம் மீண்டும் அங்கே வளர்ந்தது. அதை மக்கள் வழிபடுகின்றனர்.
இதேபோல நமது பண்பாட்டை தகர்க்க நினைத்தாலும் மீண்டும் உயிர்பெறும். சுற்றுச்
சூழல், நதி, மலை, விலங்குகள் என அனைத்தையும் வணங்கும் பண்பாடு நம்முடையது. ஆதியில் இருந்து இன்று வரை அனைத்தையும் நமதென்று கருதி, உலகமே ஒரு குடும்பமாக நினைக்கும் எண்ணம் நமதே.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதல்ல, ஆனால் இங்கு வேற்றுமையே ஒற்றுமையாக தான் இருந்திருக்கிறது. மொழி, பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் பல இருந்த போதும் ஒன்றிணைந்து போராடி, ரத்தம் சிந்தி, நாம் வாழ்ந்து உயர்நிலையை அடைந்துள்ளோம்.
இந்த பண்பாட்டை காப்பாற்றுவதற்காக நம்முடைய முன்னோர்களின் குருதி தோய்ந்த தியாகம் முக்கியமானதாக இருக்கிறது. முன்பு ஒரு சில குடும்பங்களில் ஐந்து தலைமுறைகள் ஒன்றாக வாழ்வதை கண்டிருக்கிறோம், 6 தலை
முறைகள் கூட சில வீடுகளில் இருந்தன. நமது பொறுப்பு, அடுத்த 7 முதல் 14 தலைமுறைகளுக்கு இந்த விஷயத்தை எடுத்து செல்ல வேண்டும். பாரதம் ஆக்கிரமிக்கப்பட்ட, வரலாற்றையும் நம் முன்னோர் போராட்டத்தையும் இன்றைய தலை
முறைக்கு உணர்த்த வேண்டும். நாம் ஒருபோதும் அடிமையாகவில்லை, ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிக்கொண்டு தான் இருந்தோம். அவர்களை விரட்டும் வரை போராடினோம்.
இதற்காக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும், ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் மக்கள் சுதந்திரத்திற்கு போராடினார்கள். நாம் சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை கடந்துள்ளோம். நாம் உயர்வு தாழ்வின்றி பாரதத்தை உருவாக்கி
யுள்ளோம். சுவாமி விவேகானந்தர் கூறியது போல் பாரதம் தனக்காக வாழாது உலகத்திற்காக வாழ்ந்தது. தனக்கின்றி நமக்காக வாழ்கிறது. வடக்கு தெற்கு, கிழக்கு – மேற்கு என எல்லா இடங்களிலும் சுதந்திர தாகம் ஏற்பட்டது. இதை நம் வரும் தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
நம்முடைய சுயநலத்தை அகற்றி எனக்காக அல்ல நமக்காக என்ற எண்ணத்துடன் நாம் வேலை செய்ய வேண்டும், தியாகச் சுவரை திறந்திருக்கிறோம். இது பராசக்தி தவம் செய்த இடம் தேவி பராசக்தியின் அருளால் நல்ல துவக்கம் வந்திருக்கிறது. விவேகானந்தர் தவம் செய்த இத்தலம் இது. இங்கிருந்து தொடங்கும் எதுவும் வெற்றி பெறும். சக்கரா பௌண்டேஷன் எல்லா இடங்களிலும் துவங்கக்கூடிய தியாகச் சுவர் பணிகளில்
ஆர்.எஸ்.எஸ் உறுதுணையாக இருக்கும்.