அனைவரும் பயன்படுத்த ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பயனாளிகள் பாரம்பரிய அறிவுத்திறன் மின்னணு நூலகத்தின் தரவுத்தளத்தை விரிவுபடுத்துவதற்கும் பாரம்பரிய அறிவுத்திறன் மின்னணு நூலக தரவுகளை அனைவரும் பயன்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020ன் கீழ், பாரதிய ஞானப் பரம்பரை மூலம் சிந்தனை மற்றும் தலைமை அறிவுத்திறனை புகுத்துவதற்கு பாரம்பரிய அறிவுத்திறன் மின்னணு நூலகத்தின் நோக்கமாக உள்ளது. பாரதப் பாரம்பரிய அறிவு தேசிய மற்றும் உலகளாவிய தேவைகளுக்கு சேவை செய்வதற்கான மகத்தான ஆற்றலை அளிக்கிறது. இதன் மூலம் சமூக நன்மைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வழங்குகிறது. உதாரணமாக, நம் நாட்டில் இருந்து பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம். சித்தா, யுனானி மற்றும் ஆரோக்கியத்திற்கான சோவ ரிக்பா, யோகா ஆகியவை இன்றும் பாரதம் மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களின் தேவைகளுக்கு சேவை செய்கின்றன. கொரோனா பாதிப்பின் போது, பாரதப் பாரம்பரிய மருந்துகளின் நன்மைகளை  காண முடிந்தது. நோய் எதிர்ப்பு, நிவாரணம், வைரஸ் எதிர்ப்பு ஆகிய பயன்களை இந்த மருத்துவ முறையில் உணர முடிந்தது.