திரிபுராவின் 50வது மாநில தினத்தை முன்னிட்டு மாநில மக்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘முகலாயர்கள், ஆங்கிலேயரின் நீண்டகால ஏகாதிபத்திய ஆட்சியின்போது ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் அடுத்த 25 ஆண்டுகள் பாரதத்துக்கும் திரிபுரா மக்களுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும். நாட்டின் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மாற்றத்தை கொண்டு வரவும், நாட்டின் இழந்த பெருமையை மீட்டெடுக்கவும் கடினமாக உழைக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகள் நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் தேசத்திற்காக, அதன் வளர்ச்சிக்காக தங்கள் கடின உழைப்பை அளிக்க உறுதிமொழி எடுப்போம் என்று தெரிவித்தார். திரிபுரா அரசின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல் திட்டம் குறித்து தயாரித்த லக்ஷ்யா 2047 என்ற கையேட்டையும் வெளியிட்டார்.