அமெரிக்காவை சேர்ந்த ‘ஆட்டோமேட்டிக்’ நிறுவனம், இந்திய இளைஞர் ஒருவர் உருவாக்கிய செயலியை, 415 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது அசாம் மாநிலம், திப்ரூகார் பகுதியைச் சேர்ந்தவர் கிஷன் பகாரியா. இவர், ‘டெக்ஸ்ட்ஸ்.காம்’ எனும் மெசேஜிங் செயலியை உருவாக்கி உள்ளார்.
இதில், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், மெசஞ்சர், லிங்கட்இன் உள்ளிட்ட பல செயலிகள், ஒரே குடையின் கீழ் வருமாறு, இவர் வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது, ‘வேர்டுபிரஸ், டம்ப்ளர்’ போன்ற பிரபல இணையதளங்களுக்கு சொந்தமான அமெரிக்காவை சேர்ந்த ஆட்டோமேட்டிக் நிறுவனம், டெக்ஸ்ட்ஸ்.காம் செயலியை, கிட்டத்தட்ட 415 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது. இந்த கையகப்படுத்துதலை தொடர்ந்து, கிஷன் பகாரியா, நிறுவனத்தின் மெசெஜிங் பிரிவு தலைவராக பொறுப்பு ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.