அசடே, அது ஆங்கிலப் புத்தாண்டு!

சில ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தூரத்து உறவினர் ஒருவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன். வாசலில் செம்மண் இட்டுக் கோலம் போட்டிருந்தார்கள். என்ன விசேஷமோ என்று எண்ணியபடி உள்ளே நுழைந்தேன். என்னை வரவேற்ற அந்த வீட்டு அம்மாள் உள்ளே சென்று ஒரு டம்பளரில் பாயசம் கொண்டு வந்து கொடுத்தாள். அதை வாங்கிப் பருகியவாறே, இன்னிக்கு என்ன விசேஷம்? பாயசமெல்லாம் தடபுடலா இருக்கு!” என்றேன்.

என்னடா, இப்படிக் கேக்கிறே. இன்னிக்கு புதுவருஷப் பிறப்பு இல்லயா?” என்றாள். திகைத்தேன். சடக்கென்று, ஆமாம்! ஆமாம்! இன்னைக்கு ஜனவரி 1 தான். அது ஆண்டின் முதல் நாள் கூடத் தான். ஆனா நமக்கு இது புதுவருஷப் பிறப்பு இல்லியே! இது வெளிநாட்டிலே குறிப்பாக – மேற்கத்தியவர்களுக்குத்தானே புது வருஷத் தொடக்க நாள்; இதுக்கு நீங்க ஏன் வாசலில் வண்ணக் கோலமும், சமையலில் பாயசமும் சேர்த்து இருக்கேள்!” என்றேன்.

ஏண்டா! இங்கிலீஷ்காரன் வந்து தானேடா நமக்கெல்லாம் இங்கிலீஷ் படிப்புச் சொல்லிக் கொடுத்தான். அந்த இங்கிலீஷ் படிப்பு படிச்சுத் தானேடா நம்மாத்து ஆம்பிளை எல்லாம் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சா! இங்கிலீஷ்காரனோட வருஷம் தானேடா நாமெல்லாம் பயன்படுத்துறது. அப்படி இருக்க அது நமக்கும் புது வருஷம் இல்லாமல் என்ன?”

எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் உண்டாயிற்று.

ஏன் மாமி! இந்தப் புது வருஷப் பிறப்பு இங்கிலீஷ்காராளுக்கு மட்டும் தான். நமக்குச் சித்திரை மாதம் 1ம் தேதி தான். புது வருஷப் பிறப்புன்னு ஜனவரி முதல் தேதியைக் கொண்டாடறது நம்ம கலாச்சாரத்துக்கே விரோதம்” என்றேன். ஏண்டா! இங்கிலீஷ்காரன் நமக்கு செஞ்சதுக்கெல்லாம் ஒரு நன்றியாகவாவது, நாம் இதைக் கொண்டாடக் கூடாதா? அப்படி நன்றி கெட்ட ஜன்மமா நாம மாறணுமா?” என்று போட்டாரே ஒரு போடு. அந்த அம்மாளுக்குக் கிட்டத்தட்ட அறுபது வயது இருக்கும். இங்கிலீஷ் படித்தறியாதவர். ஆனால் அவர் உள்ளத்தில்கூட என்ன ஒரு அடிமைபுத்தி! படித்தவன்தான் அன்னியனுக்கு அடிவருடும் அடிமை மனப்பான்மைக்கு ஆளாகிவிட்டான் என்றால் படிப்பு வாசனையே இல்லாத ஜனங்களிடத்தும் இந்த அடிமை புத்தியா? ஒன்றும் பேசத்தோன்றாமல் திரும்பி நடந்தேன்.

அடுத்த வீட்டு வாசல் கோலத்தில் ‘ஙிடிண்ட தூணித ச் டச்ணீணீதூ ‡ஞுதீ ஙுஞுச்ணூ‘ என்று எழுதியிருந்தது. எதிரே வந்த நண்பர், விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்” என்றார். தூக்கிவாரிப் போட்டது. சுதாரித்துக் கொண்ட நான், வணக்கம்! இந்த நாளை நான் புத்தாண்டின் தொடக்க நாளாகக் கருதுவதில்லை” என்றேன்.

இந்தப் புதுவருஷ விசேஷத்தை இன்றைக்கு – யாரும் தமிழ் வருஷப் பிறப்பிற்குக் கொடுக்கக் காணோம் ஏன்? கோயில்களில் ஜனவரி ஒண்ணாந்தேதி இருக்கிற கூட்டத்திலே பாதிகூட, சித்திரை ஒண்ணாந்தேதி இருப்பதில்லை. என்ன ஒரு விசித்திர மனோபாவம்?

ஜனவரி ஒண்ணாந்தேதியை ஒட்டி புத்தாண்டு வாழ்த்து அனுப்புவது, கோயிலுக்குப் போய் விசேஷ ப்ரார்த்தனை செய்வதெல்லாமே நம்மனதில் அடிமைத்தனத்தின் சாயல் எஞ்சியிருப்பதன் அடையாளமே. அந்நியனை விரட்டிவிட்டோம், அடிமை மனப்பான்மையை எப்போது விரட்டபோகிறோம்.

 

 

சித்திரை வருடப் பிறப்பே நமது புத்தாண்டு

தினசரி காலண்டரின் பின் அட்டையைப் பாருங்கள். அதில் ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய பண்டிகைகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் கிறிஸ்தவ பண்டிகை பட்டியலில் ஜனவரி – 1 ஆங்கிலப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.