தொழிலுக்கு பிரதமரின் வந்தனை
கடந்த வருடம் சுதந்திர தின உரையில், விரைவில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படும். அத்திட்டம் தொழில்முனைவோருக்கு விடியலை தேடித்தரும் என்று தெரிவித்திருந்தார் மோடி. அதன்படியே, ஜனவரி 16 அன்று, டெல்லியில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சி ஒன்றில் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ என்ற பெயருடன் அந்த திட்டத்தையும் தொடங்கி வைத்துவிட்டார். என்ன இது ஸ்டார்ட் அப் இந்தியா?
இதற்கு முன்பெல்லாம் ஒருவர் தொழில் தொடங்க மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறையின் பல்வேறு விதிகளின் கீழ் உரிமம் பெறவேண்டும். இந்த உரிமங்களைப் பெற அவர்கள் நடையா நடக்க வேண்டிவரும். சலிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த நடைமுறைகள் இனி இல்லை. உங்கள் கையில் உள்ள நவீன அலைபேசியில் இதற்கான அப் (ச்ணீணீ) அறிமுகப்படுத்தப்படும். நீங்கள் செயவேண்டியதெல்லாம், அந்த அப்பில் கேட்டுள்ள உங்களைச் குறித்த மற்றும் நீங்கள் தொடங்கவிருக்கும் தொழில் குறித்த விவரங்களை பதிவு செதாலே போதும். சில நிமிடங்களில் தொழில்தொடங்க உரிமம் கிடைத்துவிடும்.
மேலும், உங்களுக்கு அரசு நிதியுதவியும் வழங்க தயாராக இருக்கின்றது என்பது இனிப்பான செதி அல்லவா? ஆம். 10,000 கோடி ருபா இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தொழில் மூலம் ஈட்டும் வருவாயில் கிடைக்கும் லாபத்திற்கு 3 ஆண்டுவரை வரி செலுத்தக்கூட தேவையில்லை. உங்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்து மூன்று ஆண்டு வரை தொழிலாளர் நலத்துறை ஆவு செயாது. நீங்கள் தொழிலாளர் நலத்துறையின் அனைத்து விதிகளையும் கடைபிடிக்கின்றீர்கள் என்று சுய சான்றிதழ் அளித்தாலே போதும். சரி, தொழில் தொடங்கி விட்டீர்கள். சரியான முறையில், லாபகரமாக இயங்கவில்லையா? கவலை வேண்டாம். 90 நாட்களுக்கும் அந்த தொழிலை கைவிடவும் திட்டத்தில் வழிவகை உண்டு.
இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 500 ரக தொழில்களை தொடங்க தொழில்முனைவோருக்கு உதவ அரசு முன்வந்துள்ளது. இத்திட்டம் விரிவுபடுத்தப்ப்படும்போழுது, 5 லட்சம் பள்ளிகளில் பயிலும் 10 லட்சம் மாணவ மாணவியர் புதிய கண்டுபிடிப்புகளில் ஆவு மேற்கொள்ள வகை செயப்படும்.
என்ன? நீங்களும் தொழில் தொடங்க ரெடியா?