பிப்ரவரி 13ந் தேதி அயோத்யாவில் ஆரம்பித்து 6 மாநிலங்கள் வழியாக மார்ச் 21ந் தேதி 41 நாள் பயணம் செது ராமேஸ்வரத்தில் முடிவுற்ற ராமராஜ்ய ரத யாத்திரை மகாராஷ்டிரா ராம தாஸ் மிஷன் யுனிவர்சல் சோசைட்டியினால் ஏற்பாடு செயப்பட்டிருந்தது. இதுதவிர இந்த ரத யாத்திரைக்குச் சோல்ல வேறு ஒன்றும் இல்லை என்பதாகப் போயிருக்கும் – தமிழக ‘திராவிடர்கள்’ ஒன்று சேர்ந்து ‘மாபெரும் போராட்டம்’ நடத்தாமல் போயிருந்தால்…
ராமராஜ்ஜியம் அமைப்போம்! பள்ளிகளில் ராமாயணத்தைக் கட்டாயப் பாடமாக்குவோம். வார விடுமுறை ஞாயிற்றுக் கிழமை என்பதை மாற்றி வியாழக்கிழமை (இதை ஏன் சோன்னார்கள் என்பது உங்களைப் போல எனக்கும் புரியவில்லை) என அறிவிக்க வேண்டும், இது அவர்களின் கோரிக்கை!
இதெல்லாம் நடக்குமா? தேவையா? வேலை வெட்டி இல்லாத ஆளுக! என இதைப் பார்த்து படித்தவுடனேயே முகத்தைக் திருப்பிக் கொள்வார்கள். நமது மதிப்பிற்குரிய ஹிந்து சகோதரர்கள் என்று எதிர்பார்த்த யாத்திரை, தமிழ்நாட்டை ‘ஓகி புயல்’ போலச் சோல்லாமல் கொள்ளாமல் வந்து புரட்டிப் போட்ட அதிசயம் நிகழ்ந்தது!
ராமராஜ்ஜிய ரதயாத்திரையில் அப்படி என்ன Provocative விஷயம் இருந்தது?
அதைத்தான் தேடித்தேடி பார்த்தேன். ஒன்றே ஒன்று கிடைத்தது. ஆனால் அது யாரையும் தட்டியெழுப்பவோ, உசுப்பவோ, கோபப்படுத்துவதற்கானது அல்லவே! அது எங்கள் உரிமை! சோத்து! மரியாதை! நம்பிக்கை! அதை மீட்பது இவர்களுக்கு எப்படி எதிரானது? அதுதான் அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பது என்பது!
இன்னொரு விஷயம் இந்த ‘திராவிடர்களை’ உசுப்பேத்தியிருக்க வாப்புள்ளது. அதுதான் ரதத்தின் வடிவம்! நாமெல்லாம் விரைவில் அமைக்கப்போகும் உத்தம புருஷன், புருஷோத்தமன் ராமபிரானின் அயோத்தி ராமர் கோயில் மாதிரியான வடிவம்!
பின்ன என்ன இவர்களுக்குப் புளியைக் கரைக்க வேறு என்ன பாயிண்ட் வேண்டும் என நீங்கள் முணுமுணுப்பதும் புரிகிறது! சரி! ஜவஹருல்லாவுக்கும் (MMK) அதிலிருந்து பிரிந்த தமிமும் அன்சாரிக்கும், ‘மரணபயம்’ வருவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது! ஆத்தா பாத்து சாமிகும்பிட்டு, பொட்டு வச்சு, பள்ளிகூடத்துக்கு அனுப்பி, பரிட்சை எழுதி பெயிலாப்போன ஸ்டாலின், வேல்முருகன், தனியரசு ஆகியோருக் கெல்லாம் என்ன பயம் வந்தது? அவர்கள் அடித்த கொள்ளை சோத்தில் பங்கு கேட்கவா ராமர் வந்தார்?
திருநெல்வேலி ஜில்லா உள்ளிட்ட சில ஊர்களில், முஸ்லிம்கள் மசூதிக்கு வெளியே வந்து, சாலையில் சென்றுகொண்டிருந்த ரதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் செத வீடியோக்கள் பார்த்தவர்களுக்குப் புரியும்!
ராமராஜ்ஜிய ரதயாத்திரை எவ்வளவு கட்டுப்பாடோடு பிரம்மாண்ட கூட்டத்தோடு, சென்றது என்பதும் அடுத்தத் தெருவில் நுழைந்த நா எல்லைமீறி வந்த பயத்தில் வாலை பின்னங்கால்களுக்குள் காலுக்குள் இடுக்கி, கொர்ர் என நடுங்குவது போல, 20, 30 பேர் மசூதி வாசலில் நின்று குரைத்ததைக் காணமுடிந்தது!
குரைக்கும் நாயை கண்டு கொள்ளாமல் செல்லும் யானை போல ராமராஜ்ஜிய யாத்திரை பவனி வந்தது.
அயோத்தி ஆலயம் எங்கள் உரிமை. அங்கு ராமனுக்கு ஆலயம் அமைப்போம். அதைக் கேட்க நீங்கள் யார் என்றெல்லாம் நான் கேட்கப் போவதில்லை! விவாதம் செத காலமெல்லாம் முடிந்துவிட்டது! இது வேலைக்கான காலம்! ‘ஜவஹருல்லாக்களின்’ பொருமலுக்குக் காரணம் இதுதான். அதனால் அவர்கள் எதிர்ப்பது ஒரு சடங்கு மட்டுமே!
சட்டமன்றத்திலே ஸ்டாலின் கூச்சல் போட்டது எதனால்? தமீமும் அன்சாரி, கருணாசின் கோஷத்திற்கு மேல் கோஷம் போட முடியாமல் வெளியே ஓடிவந்து சிறுபிள்ளைத்தனமாச் சாலை மறியல் செதது எதனால்?
தி.மு.க. ஓந்து போவிட்டது! ‘ஜெ’ இல்லாத அதிமுகவைக் கூட வெற்றிகொள்ள முடியவில்லை! ராமராஜ்ஜிய யாத்திரையைக் கையிலெடுத்து ஒரு ‘சண்டமாருதம்‘ செயத் துணிந்தாரா ஸ்டாலின்? அல்ல!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக மூன்றாவது இடம். டெபாசிட் இழந்தது. அதே தொகுதியில் 2016ல் நடந்த தேர்தலில் பெற்ற தன் கட்சி வாக்காளர்களில் 33,000 பேரை இழந்தது. இது மாபெரும் அதிர்ச்சி ஸ்டாலினுக்கு!
இதற்கு மருமகன் சபரீஷால் ஆன குழு ஆராந்து முடிவெடுத்து நாம் இழந்தது மைனாரிட்டி ஓட்டுக்கள். அப்பா கலைஞர் தக்கவைத்திருந்த ‘பா’ ஓட்டுக்களை நாம் இழந்ததே தோல்விக்குக் காரணம் என்ற இறுதி முடிவு ஸ்டாலினுக்கு மாற்றி யோசனை சோல்லப்பட்டது.
ஒரு பக்கம் மனைவி துர்க்கா கோயில் கோயிலாக ஏறி இறங்கட்டும்! ஸ்ரீவில்லி ஜீயரை பார்க்கட்டும்! நான் பாகளை தாஜா செயும் வேலைகளைத் தொடருகிறேன் என்று எடுத்த சுடலை நேர ‘கண்ணீர் அஞ்சலி’ முடிவுதான் ராமரத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இதனால் என்ன விளைந்தது? ராமர் துர்க்காவின் கனவில் தோன்றி ஸ்டாலினை இப்படிச் செயத் தூண்டியுள்ளார்! இல்லாவிடில், தமிழ்நாட்டில் இந்த ரதம் எப்போது வருகிறது என எனக்குக்கூடத் தெரியாமல் இருந்தது. தற்போது லட்சக்கணக்கானவர்களுக்கு இந்தச் செதியை ஸ்டாலின், திருமா, மீடியா மூலமாகக் கொண்டு சென்ற துர்காவிற்கு நன்றி! துர்காவை தூண்டிய ராமபிரானுக்கு நன்றி!
நமக்குப் பல கோடி ரூபா மதிப்புள்ள விளம்பரத்தை இலவசமாகப் பெற்றுதந்து, தூங்கிக்கொண்டிருந்த ஹிந்துவை தட்டி எழுப்பி, ஆயிரங்களில் வந்து கொண்டிருந்த கூட்டத்தை லட்சங்களுக்கு மாற்ற உதவிய ‘திராவிட’ தலைவர்களுக்கு மீண்டும் நன்றி!
இழந்த முஸ்லிம் ஓட்டை மீட்க ஸ்டாலின் ராமரைப் பார்த்து குரைப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது! வேல்முருகனும் தனியரசும் ‘சம்மன்’ இல்லாமல் ஆஜராகிரார்கள் என்பதைத் தான் புரிந்து கொள்ளமுடியவில்லை. இந்த மாதிரி அரசியல் வியாபாரிகள் நிச்சயமாக விரைவில் மட்டம் தட்டப்படுவார்கள்!
ஒன்றுமட்டும் புரிகிறது! ராமருக்குச் செருப்பு மாலை போட்டது போ, ராமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இக்காலமும் மாறி, ராமர் கோயிலுக்குப் போனால்தான் ஓட்டு என்கிற, குஜராத், கர்னாடகா போன்ற காலம் 2019 தேர்தலுக்குள் தமிழகத்தில் வரப்போகிறது!
ஹிந்து ஓட்டுவங்கி அவ்வளவு பலமானது! அப்போது ‘கூலிக் கூத்தாடிகள்’ கோயில் வாசலில் ஓட்டுப் பிச்சை எடுப்பார்கள்!