விஷமான மருந்து இனி வீடு வந்து சேராது!

டந்த வாரம் பாரத அரசின் சுகாதார அமைச்சகம் 344 ‘கூட்டு மருந்துகளை’ தடை செய்துள்ளது வரவேற்கத்தக்க செயல்.

கூட்டு மருந்துகளை தடை செய்ததால் மக்களுக்கு என்ன பயன்? முதலில் கூட்டு மருந்துகள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

உடல் வலியையும் ஜுரத்தையும் போக்கும் மருந்து ‘ஜெரடால்’, ‘ஜெரடால்-பி’ ஆகியவை. இதில் ‘டை க்ளோனிபிக்’ என்ற மருந்தும் ‘பாரசெட்டமால்’ என்ற மருந்தும் சேர்ந்துள்ளது. இப்படி சேர்ந்த மருந்துக்கு Fixed Drug combination அல்லது ‘கூட்டு மருந்து’ என்று பெயர்.

இதே மாதிரி 6000 ‘கூட்டு மருந்து’கள் உள்ளன. இதில் பல theruptic justification என்கிற ‘மருந்து ரீதியான நியாயக் கூட்டு’. இன்னும் பல மருத்துவரீதியாக அவசியமற்ற அல்லது ‘தேவையற்ற கூட்டு’ (irrational combination).

இப்படி irrational combination ஆக இருந்த 344 கூட்டு மருந்துகளைத் தான் மோடி அரசு தடைசெய்திருக்கிறது. இவைகளில் சந்தையில் அதிகம் புழங்கும் குரோசின் கோல்ட், டி-கோல்ட், டிகாஃப், செரிகாஃப், நாசிவியான், சுமோ, கோஸ்ட்ரோஜில், நிமுலிட், கோரக்ஸ், பென்சிடில், விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா, என்பனவும் அடங்கும்.

இப்படி irrational combinationகளை தயாரிக்க அனுமதி அளித்துவிட்டு, இப்போது தடைசெய்வது எந்த வகையில்

medicin

நியாயம்? அதுமட்டுமல்ல, உடலுக்குத் தீங்கு விளைவுக்கும் இந்த ‘கூட்டு மருந்துகளால்’ இதுவரை மக்களுக்கு ஏற்பட்ட பக்கவிளைவுகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்பதோடு, ‘இழப்பீடு’ தரவேண்டும் என்ற கேள்விகளுக்கு நமது பதில் என்ன?

‘இந்திய மருந்து, ஒப்பனை பொருட்கள் சட்டம் 1940’ ரூல்ஸ் 1945ன் படி, புதிய பார்முலா மருந்துகளுக்கு ‘டிரக்ஸ் கன்சல்டேடிவ் கமிட்டி’ என்கிற DCDயேஅனுமதி தரவேண்டும். இதில் ஒவ்வொரு மாநிலத்தின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியும் (Drugs controller) உறுப்பினராக இருப்பர். இவர்களே எந்தெந்த மருந்து கூட்டுகள் பக்கவிளைவை ஏற்படுத்தாது என்பதை ஆய்ந்து அவைகளுக்கு அனுமதி அளிப்பார்கள்.

2011ம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டு மருந்துகளை சீரமைப்பில் கொண்டுவர வேண்டும் என முடிவெடுத்து அதை சுகாதார அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.

2012ம் ஆண்டு டிரக்ஸ் கன்ட்ரோலர் ஜெனரல் என்ற இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி இனி புதிதாக கூட்டு

மருந்துகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என உத்தரவிட்டார். அதோடு இது வரை தயாரிப்பில் உள்ள இவ்வகையான மருந்துகளின் தரம், அது ஏற்படுத்தும் பாதிப்புகள், பக்கவிளைவுகள், நல்லவிளைவுகள் ஆகியவற்றை பற்றிய ஆய்வுகளை 18 மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

ஆனால் இப்படி தடைசெய்யப்பட்ட மருந்துகளுக்கு அனுமதியை பல்வேறு மாநில அரசுகளே அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் மருந்து தயாரிப்புக்கான அனுமதி விஷயம் மத்திய / மாநில அரசின் பொது பட்டியலில் உள்ளது. மாநில அரசுகள் சகட்டு மேனிக்கு கொடுத்த அனுமதிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் முடிவின் ஒரு முயற்சிதான் 344 மருந்துகள் தடை.

சரி, டிரக்ஸ் கண்ட்ரோலர் ஜெனரல் உத்தரவு முடிவு என்னவாயிற்று என பார்ப்போம். 18 மாதம் முடிவுற்ற பின், சுமார் 6,600 ஆய்வறிக்கைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 3 வகையான முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ‘தேவையான கூட்டுமருந்துகள்’ ‘அவசியமற்ற கூட்டு மருந்துகள்’ ‘இன்னும் அதிக சக்தி தேவையான கூட்டு மருந்துகள்’ என்பன அவை.

இந்த ஆய்வறிக்கைகளை பெற்ற பின் 2013ம் ஆண்டு ‘புதிய மருந்து கமிட்டி’ உருவாக்கினார்கள். இதுவே புது மருந்துகளுக்கான அனுமதியை தரும்.

* * *

ப்படி மருந்து தயாரிப்பில் கட்டுப்பாடுகளை புகுத்தி தரமான, விலை குறைவான, அத்தியாவசியமான, உயிர்காக்கும் மருந்துகளை தயாரிக்கும் பணியை மோடி அரசு முடுக்கிவிட்டது.

இதன் ஒரு பகுதி 680 உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் இதய பாதுகாப்பு மருந்துகளுக்கு சர்க்கரை நோய் மருந்துகள் 5 முதல் 45 சதவீதம் வரை விலை குறைப்பு செய்யப்பட்டது.

இந்தியா முழுவதும் 3,000 ‘மக்கள் மருந்தகம்’ என்னும் குறைந்த விலையில் மருந்து விற்பனை செய்யும் மோடி மெடிக்கல் ஷாப்கள் துவக்கப்பட உள்ளது. நாடு நெடுக மாவட்ட தலைநகரங்களிலுள்ள 1,500 அரசு ஆஸ்பத்திரிகளில் இலவச ‘டயாலிசிஸ்’ சென்டர்கள் துவக்கப்பட்டுள்ளன.

இதுவரை சீனாவிலிருந்து நமக்கு தேவையான 75 சதவீத Bulk drugs இறக்குமதி செய்யப்பட்டது. இவைகளை இந்திய பொதுத்துறையான I.D.P.L. போன்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க கோடிக்கணக்கில் அரசு முதலீடு செய்துள்ளபோதும்…!

மருந்து விலை நிர்ணயம், தயாரிப்பு, லைசென்ஸ், ஏற்றுமதி என்பன இன்று பல்வேறு அமைச்சகங்களில் தனித்தனியாக செயல்படுகின்றது. இவை அனைத்தையும் ஒரே அமைச்சகமாக்கி மத்திய சுகாதார அமைச்சகத்தில் இணைக்கும் திட்டம் உருவாகியுள்ளது.

ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாக கிடைக்க காப்பீடு திட்டங்கள் உருவாக்கப்பட்டது ஒரு புறம்; மருந்து விலை குறைப்பு மற்றொருபுறம்; அதோடு, தரமான மருந்து, தடையற்ற மருந்து பெற ‘பார்மா ஜன சமாதான்’ எனும் திட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் மருந்து தயாரிப்பாளர் ஒவ்வொருவரும் கடைக்காரர்களும், மருந்து நுகர்வோருக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள்.

இதற்காக ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் (Helpline) சுகாதாரத் துறை அதிகாரி எண்ணும் அரசு அறிவித்துள்ளது.

இப்போது தடை செய்யப்பட்ட மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அபாட், டின், கோரக்ஸ் இருமல் மருந்து

மார்க்கெட்டின் 33 சதவீதத்தை தன் கையில் வைத்துள்ளன. பென்சிடில் தயாரிக்கும் ஃபைசர், பன்னாட்டு நிறுவனம். இந்த இரண்டு கூட்டு மருந்துகளும் உலகில் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பார்முலா. இந்தியாவில் இதுவரை ஆண்ட காங்கிரஸ் அரசு இதை அனுமதித்து வந்தது!

இம்மருந்து போதை தரும். எனவே இருமல் தவிர்த்து இதன் வியாபாரம் அதிகப்படியாக உள்ளது. இதன் கூட்டு மருந்து பார்முலா இதன் கூட்டு மருந்துகள் இருமலுக்கு தேவையான பலன்களை தவிர உடலுக்கு ஊறுவிளைவிக்கும் செயல்களையும் செய்கிறது – இதுதான் ஆய்வறிக்கைகளின் முடிவு!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் உடனடியாக ஒவ்வொரு கம்பெனியும் இடைக்கால தடைபெற்றுள்ளது. இந்தியாவின் உளுத்துப்போன அரசு தர்பாரும் நீதி நிர்வாகமும் நரேந்திர மோடியின் சீர்திருத்த வேகத்திற்கு தொடர்ந்து முட்டுக்கட்டைபோடுவது நாம் காணும் காட்சி! இதை தகர்த்துத்தான் நம் வீறுநடை தொடர்கிறது!

சீர்திருத்தும் பணியில் ஒன்றுக்கும் உதவாத 1,025 பழைய சட்டங்களை செல்லாததாக்கினார் மோடி. உடலை செல்லரிக்க வைக்கும் 344 மருந்துகளை தடை செய்தார். இம்முயற்சியில் இனி எத்தனை எத்தனையோ நடக்க இருக்கிறது. பார்ப்போம்! ஆதரிப்போம்!        டூ

 

 

தினமணியின் சந்தேகம்

மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாடு அமைப்பு வலி நிவாரணிகளில் வணிகச் சந்தையில் உள்ள கூட்டு மருந்துகளில் 73% மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெறாதவை என்று கூறுகிறது. அப்படியானால், இத்தனைக் காலம் இதை ஏன், எப்படி அனுமதித்தார்கள்? இதை உற்பத்தி நிலையிலேயே தடுத்திருக்க வேண்டாமா? அல்லது மருந்து விற்பனைக் கடைகளில் ஆவுகள் நடத்தி பறிமுதல் செதிருக்க வேண்டாமா? வணிகப் பெயர் கொண்ட மருந்துகளுக்குப் பதிலாக அடிப்படை ரசாயனக் கூறுகளை (ஜெனரிக்) பரிந்துரைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் இந்தத் தடை கொண்டுவரப்பட்டாக வேண்டும்.இத்தனை ஆண்டுகள் இப்படியொரு தவறு நடப்பது தெரிந்தும் முந்தைய அரசுகள் வாளாவிருந்தது ஏன்? இதிலும்கூட பல கோடி ரூபா ஊழல் நடந்திருக்குமோ? (மார்ச் 19 தலையங்கத்திலிருந்து)