வந்தே மாதரம்
நாட்டை வெட்டியவர்கள்
பாட்டை வெட்டிய வரலாறு
வந்தே மாதரம் பாடல் ‘ஆனந்த மடம்’ என்ற பங்கிம் சந்திர சாட்டர்ஜீ நாவலில் இடம் பெற்றுள்ளது.
1896-ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில், (ஜன கண மன இயற்றியவரான) ரவீந்தரநாத் தாகூர், வந்தேமாதரம் பாடலுக்கு இசை அமைத்துப் பாடினார்.
தட்சிண சரண் சென் வழிகாட்டுதல்படி 1901-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதற்குப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
சுதேசி இயக்கத்தின் துவக்கத்தின் போது, 1905 ஆகஸ்ட் 7 அன்று, வந்தேமாதரம் பாடி நிகழ்ச்சி துவங்கியது. அக்டோபர் மாதம் 16ம் தேதி, வெள்ளைய அரசின் வங்கப் பிரிவினைச் சதியை எதிர்த்த விடுதலைப் போராட்டத்திற்கு முழக்கமாக வந்தே மாதரம் பாடல் மாறியது.
ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி காசி காங்கிரஸ் மாநாட்டில், ரவீந்தரநாத் தாகூரின் மருமகள் சரளா தேவி சௌதுரானி வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.
மாதங்கனி ஹஸ்ரா என்னும் காங்கிரஸ் தொண்டர் ஒருவரை கிரௌன் நகர போலீஸார் சுட்டுக் கொன்றபோது, வந்தேமாதரம் என்று முழங்கியபடியே உயிர் நீத்தார்.
ஸ்ரீ அரவிந்தர், 1906 ஆகஸ்ட் 7 அன்று ‘வந்தே மாதரம்’ எனும் தினசரியைத் துவக்கினார் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ரா ‘வந்தே மாதரம்’ என்ற இதழை லாகூரில் ஆரம்பித்தார்.
வெள்ளைய அரசு விதித்த தடையை மீறி மக்கள் வந்தேமாதரம் பாடலை முழங்கியபடி ஊர்வலமாக பாரிசால் மாநாட்டிற்கு வந்தார்கள். தடியடி நடந்தது.
மேடம் காமா, 1905-ல் பாரீஸ் நகரில் ஒரு சர்வதேச மாநாட்டில், இந்திய தேசியம் என்பதாக உருவாக்கிய கொடியில் வந்தே மாதரம் என்ற தேவநாகரி எழுத்தும் இடம் பெற்றது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தின் தேசிய வந்தேமாதரத்தை அறிவித்தார். சிங்கப்பூர் வானொலி மூலம் இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பானது.
இந்திய தேசபக்தர்கள் ஒன்று சேர்ந்து பாரத மாதா சங்கம் என்ற ஒரு அமைப்பை சான் பிரான்ஸிஸ்கோவில் துவக்கி காலஸா’ என்ற பெயரில் தலைமறைவு இதழ் வெளியிட்டு வந்தார்கள்.
கோபாலகிருஷ்ண கோகலே ஆப்பிரிக்காவிற்கு 1912-ல் வருகை தந்துபோது, அங்கு இருந்த இந்தியர்கள் வந்தே மாதரம்!” என்ற கோஷத்துடன் அவரை வரவேற்றார்கள். வந்தேமாதரம் கோஷம் ஆப்பிரிக்காவிலும் பரவியிருப்பதை கோகலே மகிழ்வுடன் குறிப்பிட்டார்.
மலேசியாவில் இந்தியன் ‘இண்டிபென்டன்ஸ் லீக்’ என்ற அமைபபை உருவாக்கிய, ஆனந்தன், சத்யேந்திர பரதன், அப்துல் காதீர், பைஸா என்ற நால்வரும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் ஊடுருவியதன் காரணமாகக் கைது செயப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டார்கள். 1943 செப்டம்பர் 10 அன்று தூக்கு மேடையில் வந்தேமாதரம்” உச்சரித்துக் கொண்டே மரணமடைந்தார்கள்.
தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்தது. ‘மெட்ராஸ் கோஸ்டல் டிபென்ஸ் பேட்டரி’ என்ற ராணுவப் பிரிவில் பணியிலிருந்த இந்திய வீரர்கள், கலவரத்தை உருவாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டார்கள். இந்திய வீரர்கள், வந்தே மாதரத்தை உச்சரித்துக் கொண்டே மரண தண்டனையை ஏற்றுக் கொண்டார்கள்.
பண்டிட் விஷ்ணு திகம்பர் பாலுஸ்கர் 1915 முதல் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் துவக்க நிகழ்ச்சியாக வந்தே மாதரம் பாடல் பாடிவந்தார். 1923-ல் காகிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டபோது, தலைமை வகித்த மௌலான முகமது அலி, பாடக் கூடாது என எதிர்ப்பு த் தெரிவித்தார். இது மத மாநாடு அல்ல தேசிய மாநாடு என்று கூறி, பாலுஸ்கர் வந்தேமாதரம் முழுவதையும் பாடி முடித்தார்.
அபுல் கலாம் ஆசாத், சுபாஷ் சந்திர போஸ், ஆசார்ய நரேந்திர தேவ் அடங்கிய குழு தேசிய கீதத்தைப் பரிசீலிப்பதற்காக அமைக்கப்பட்டு, வந்தேமாதரம் பாடலின் முதல் பத்தி எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருப்பதால் , முதல் பத்தியை தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தது. தேச பக்தியின் அடித்தளமாக இருந்த வந்தேமாதர கீதம் துண்டாடப்பட்டது. நாட்டை வெட்டியவர்கள் பாட்டை வெட்டிய அக்கிரமம் அது.
வந்தேமாதரம் பாடல், பேண்ட் இசைக்கு பொருந்தாது என்பதால், அதை தேசிய கீதமாக மாற்ற முடியவில்லை” என்று சாக்குப்போக்கு சோல்லியது பண்டித நேருவின் காங்கிரஸ். பூனாவின் இசை அமைப்பாளர் மாஸ்டர் கிருஷ்ண ராவ், மும்பை பிரிட்டிஷ் பேண்ட் கமாண்டர் சி.ஆர்.கோர்டன் உதவியுடன், பேண்ட் இசையில் இசைத்து காட்டிய பின்னரும், வந்தேமாதரம் பாடலை தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ள காங்கிரஸ் தவறி விட்டது.
வந்தேமாதரம் பாடியதன் நூற்றாண்டு விழா 2006-ல் தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்ட போது, தேசியப் பாடல் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளை நாடுழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பாட வேண்டும் என்ற சுற்றறிக்கை அனுப்பிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜுன் சிங், சில முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன், பாட வேண்டிய கட்டாயம் கிடையாது என்று கூறி விட்டார். சுற்றறிக்கையும் திரும்பப் பெறப்பட்டது.
உலகம் ஒரு தேசபக்த உருண்டை!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் தேசிய கீதம் கட்டாயமாக பள்ளி துவங்கும்போது பாட வேண்டும். இன்டர்நேஷனல் பள்ளியாக இருந்தாலும், கொடியை ஏந்திப் பாட வேண்டும் என உத்திரவு உள்ளது. அந்த அரசாங்கம் தனது உத்தரவில், Insparation spirit of Naionalism and Patrotism என்று குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில், எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அனைவரும் தேசிய கீதம் பாடும்போது எழுந்து நின்று பாட வேண்டும் எனச் சட்டமே உள்ளது. பாட மறுத்த ஜிகாதி நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அபஸ்வரம்
இந்திய அரசியல் சாஸனத்தின் படி ஜன கண மன தேசிய கீதம். வந்தே மாதரம் தேசியப் பாடல். இவற்றுக்கு எதிராகப் பேசுவது, தேசிய சின்னங்களை அவமதித்தல் என்ற சட்டப் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம்.
வந்தேமாதரம் பாடியதன் நூற்றாண்டின் போது, 2006 செப்டம்பரில், தேவபந்த் நகரைச் சேர்ந்த தாருல் உலூம் எனும் இஸ்லாமிய மத நிறுவனம், தேசிய பாடலான வந்தே மாதரம் இஸ்லாத்திற்கு எதிரானது, அதை முஸ்லீம்கள் பாடக்கூடாது என்று பத்வா விதித்த்து. இதை தொடர்ந்து 3.11.2009-ல் ஜாமியத் உலமா – ஹிந்த் என்கிற அமைப்பும், வந்தேமாதரத்திற்கு எதிரான தாருல் உலூம் கருத்து சரியானது, இஸ்லாத்தின் மதக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் வந்தேமாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியது.