டேவிட் ஹேட்லி என்று அழைக்கப்படும் தாவூத் செய்யது கிலானி மும்பை தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளில் ஒருவன். அமெரிக்காவில் அமர்ந்துகொண்டு, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வீடியோ மூலம் தனது வாக்குமூலத்தைக் கடந்த ஒரு வாரமாக பதிவு செது வருகின்றான்.
லஷ்கர்-இ-தொபா தீவிரவாத அமைப்பில் பெண் உறுப்பினர்கள் இருக்கின்றார்களா, என்றும் அவர்கள் பெயர்களைக் கூறமுடியுமா என்றும் கேட்கப்பட்டதற்கு, இஷ்ரத் ஜஹான் என்ற பெண் அத்தகைய ஒரு தீவிரவாதி என்றும், தற்கொலைப் படையைச் சேர்ந்தவள் என்றும் பதிவு செதுள்ளான். யார் இந்த இஷ்ரத் ஜஹான்?
2004 ஜூன் 15 அன்று குஜராத்தில் ஆமதாபாத் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு தீவிரவாதிகளில் இஷ்ராத் ஜஹான் என்ற பெண்ணும் ஒருவர். இவர் பிரதமர் நரேந்திர மோடியை (சம்பவம் நிகழ்ந்த சமயத்தில் அவர் குஜராத் மாநில முதல்வர்) கொலை செய அனுப்பப்பட்ட தற்கொலைப்படையைச் சேர்ந்த பெண் தீவிரவாதி என்று அடையாளம் அறியப்பட்டதால், ஆமதாபாத் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டவள். ஆனால், அப்பொழுது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, இந்த என்கவுண்டர் சம்பவம் போலி” என்று கற்பனையாக கதை ஒன்றைப் புனைந்து, நரேந்திர மோடியும் அவர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த அமீத் ஷாவும் ‘அப்பாவிப் பெண்ணான’ இஷ்ரத் ஜஹான் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார்கள் என்று கூச்சல் போட்டு, புகாரை பதிவு செது, தங்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட புலனாவு அமைப்புகள் மூலம் இந்த இரண்டு தலைவர்களையும் வழக்குகளால் அலைக்கழித்தது.
ஆனால், டேவிட் ஹேட்லி தந்துள்ள இந்த வாக்குமூலத்தை வைத்து பார்த்தால், காங்கிரஸ் அரசு தேசப் பாதுகாப்புக்கே உலை வைக்கும் அளவிற்கு போனது புரியும்.