வைர வியாபாரி (நீரவ்) பேரும் மோடி என்றிருப்பதனால் நரேந்திர மோடிக்கு கடுமையான கெட்ட பேர் வந்து அவர் தோத்துப் போவாராம். இப்படியும் சிலர் கலாம் சொல்லாத கனவு காண்கிறார்கள். அதையொட்டி ஒரு கவுண்டமணி செந்தில் டயலாக்:
செ: அண்ணே அண்ணே நம்ம மாமா நேரு பசங்களையெல்லாம் காப்பி அடிக்க விடுவோம்னு சோல்லியிருக்காராம்ணே.
க ம: அடே முட்டைக் கோசுத் தலையா, அது திருச்சியில இருக்குற மாவட்டம் நேருடா. மாமாக்கார நேரு இல்லடா.
செ: அப்படியாண்ணே? நல்ல வேள நான் கூட இன்னாடா இது இந்திரா காந்தி அப்பா, காந்தியோட ஃப்ரெண்டு இப்படி பசங்கள கெடுக்குறாரேன்னு ரொம்ப ஃபீலீங்கயிட்டேண்ணே. ஆனா என்ன இருந்தாலும் நாடு கெட்டுப் போச்சுண்ணே.
க ம: அட ஃபினாயிலக் குடிச்சவனே என்னாடா கெட்டுப் போச்சு?
செ: இல்லண்ணே இந்த வாரியாரு ஏதோ கந்தனப் பத்தி பஜன பண்ணமா பாட்டுப் பாடுனோமான்னு இருந்தாரு. இப்பப் பாருங்க யாரோ கடக்காரன பார்த்து கண்ணடிச்சாராம்னு பேப்பர்ல நியூஸ் போட்டுருக்காண்ணேன்.
க ம: அடே பேரிக்கா மண்டயா, அது கிருபானந்த வாரியார் இல்லடா. யாரோ மலையாள நடிக ப்ரியா வாரியார்டா. செக்குக்கும் செவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத மூதேவியே, போ வாய பினாயில்ல கழுவு. ஓடிப் போ.
செ: கோவிச்சுக்காதீங்கண்ணே. நேத்தி நம்ம முருகன் தியேட்டர்ல தர டிக்கெட்ட்ல ரெண்டாம் ஆட்டம் சினிமாவுக்குப்- போனேனேன்னே. அது ஏதோ சீனாக்கார படம்ணே. எல்லாம் மூக்காலேயே பேசுனானுங்கண்ணே. ஒரு பயலும் கண்ணத் தொறந்துருக்கானா மூடியிருக்கானானேன்னே தெரியல்லண்ணே தூங்கிகிட்டு இருக்கானா முழிச்சிக்கிட்டு இருக்கானான்னு கண்டே பிடிக்க முடியலண்ணே.
க ம: அடே கரிப் பானைக்குப் பொறந்தவனே. உனக்கு தமிழே தாளம். உன்னையெல்லாம் யாருடா போ சீனா படம் பாக்கச் சோன்னது
செ: நம்ம பய கூட்டிட்டு போனாண்ணே. ஆனா பாருங்க, செம ஃபைட். அப்படியே வானத்துல பறந்து பறந்து சண்ட போட்டானுங்க. கடைசில பாத்தா படத்த நம்ம நிதி மந்திரிதான் டைரடக்ட் செஞ்சிருக்காராம். என்னா ஆச்சரியம் பாத்தீங்களா! இங்கிட்டு பட்ஜெட் போட்டுக்கிட்டே அந்தப் பக்கம் படம் எடுக்குறாரு. சைடுல ஒரு தொழில் சீனா பக்கம் வச்சிருக்காருண்ணே.
க ம: அட அடுப்புல வெந்த வாயா யாருடா அது?
செ: நம்ம ஜெட் லீ தாணே
க ம: உன்னைய நான் கொல்லுறதுக்குள்ள ஓடிப் போயிரு. அது ஜெட் லீ டா பட்ஜெட் போடுறவரு ஜெயிட்லி. இவரு டெல்லி, அவரு சீனா டா.
செ: அட அப்படியா, இருக்கட்டும்ணே ரெண்டு ஃபேரும் நல்லாத்தன் ஃபைட்டக் கௌப்புறாங்க.
நேத்திக்கு சிவராத்ரிண்ணே கோயம்புத்தூர்ல ஒரே ஆட்டமும் பாட்டமுமா இருந்திச்சுண்ணே. ஆனா பாருங்க ராத்திரியில பூஜ எல்லாம் முடிஞ்சதும் அந்த பெரிசா இருக்குல ஆதி யோகி செல?
க ம: ஆமா இருக்கு அதுக்கு என்ன இப்ப?
செ: அது காலையில எந்திருச்சு உத்திர பிரதேசம் போயிருமாம்ணே.
க ம: அட கருவாட்டு வாயா? அது ஏண்டா உத்திர பிரதேசம் போகணும் அது தேமேன்னு அங்கிட்டுத்தானடா இருக்கும்?
செ: ஐ ஐ, அதெப்படி? உத்திர பிரதேசத்துல இவருதான சி எம்மாம்? அப்புறம் இவரு இங்க இருந்தா அங்க எப்படி ஆச்சி நடத்துவாரு?
க ம: அடே கக்கூஸ் மண்டையா இந்தா என் கையில இருக்குற கல்லப் பாரு. இந்த ஊருக்குள்ளேயே உன்ன நான் இனிமே பாக்கக் கூடாது ஓடிரு நாயே
செ: ஏண்ணே கோச்சுக்கிறீங்க ஒரு ஜெனரல் நாலெஜுக்குக் கேட்டா…ஆஆஆஆஆஆ,
க ம: டே இது ஆதி யோகி சிவன் செலடா அங்க சி எம் ஆ இருக்குறவர் பேரு யோகி ஆதி டா. அவர் மனுசன் டா உன்னைப் போல மந்தி இல்லடா.
செ: செரி செரி, அத விடுங்கண்ணே. நம்ம மோடி இப்படி செவாருன்னு நான் கனவுல கூட நெனைக்கலண்ணே
க ம: அப்படி என்னத்தடா செஞ்சு புட்டாரு திருப்பியும் 2000 ரூபாய திருப்பிக் கட்டச் சோல்லிட்டாரா?
செ: அதில்லண்ணே. யாருக்கும் தெரியாம வைர வியாபாரம் பண்ணியிருக்காருண்ணே. அதுவும் சைடுல குடும்பம் குட்டி எல்லாம் வேற வச்சிருக்காருண்ணே. ஏதோ பஞ்சாப்காரன் சர்தார்ஜி பேங்காம். அதுல 11,000 கோடி ரூபாய ஆட்டயப் போட்டுட்டாராம்ணே. இதுல பாருங்க சினிமா மாதிரி ரெட்ட வேஷம் போட்டுக்கிட்டு ஒரே ஊருக்கு ரெண்டு பேருல வேற போயிருக்காருண்ணே ரொம்ப மோசம்ணே. மோடி ஒழிகண்ணே.
க ம: அடே அடே! இன்னிக்கு நீ செத்தடா. காண்டாமிருக மண்டையா. அது வேற மோடி இது வேற மோடிறா. ஆட்டயப் போட்டவன் பேரு நீரவ் மோடி. இவரு நரேந்திர மோடிடா. மவனே இன்னையோட நீ செத்த. எங்கடா கல்லக் காணோம். ஓடாத நில்லுடா, டே நில்லுறா.
(நன்றி: முகநூலில் ச. திருமலை பதிவு)